பிரதோஷம்: யாரும் சொல்லாத முக்கிய தகவல்!
ஒரு_முறை சிவனின் வாகனமாகிய நந்தியும், பெருமாளின் வாகனமாகிய கருடனும் பேசிக்கெண்டானர். பிரதோஷ வேலையில் என் எம்பெருமான் உங்கள் நாராயண மந்திரமான ஓம் நமோ நாராயணா எனும் நாமத்தை உச்சரிப்பதாக நந்தி பகவான் கருடனிடம் கூறினார்
அதற்கு கருடன் நானும் கவனித்தேன். என் எம்பெருமான் நாராயணனும் இந்த பிரதோஷ வேலையில் உங்கள் எம்பெருமான் சிவனின் மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிப்பதாகவும் பேசிக்கொண்டனர். இதை கேட்க வேண்டும் என்று இருவருக்கும் ஆசை.
கருட பகவானுக்கு அதற்கான நேரம் வந்தது. ஒரு பிரதோஷத்தன்று, நாராயணன் தவத்தில் கண்மூடி ஆனந்தம் கொண்டு புன்சிரிப்புடன் ஆனந்தம் கொண்டார். இதைப் பார்த்த கருடனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. நம் நாராயணன் இத்தனை சந்தோஷமாக உள்ளாரே. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எப்படியும் இன்று கேட்டுவிட வேண்டும் என்று கருடனுக்கு ஒரே ஆவல்.
நாராயணன் கண்விழித்து பார்த்தார். அப்படி ஒரு ஆனந்தம் நாராயணனுக்கு இது தான் தக்க சமயம். நாம் இதற்கான காரணத்தை நாராயணனிடம் கேட்டு விடலாம் என்று கருட பகவான், ஐயனே தங்களின் இத்தனை சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று கருடன் கேட்டுவிட்டார். அதற்கு நாராயணன் புன்சிரிப்புடன் இத்தனை சந்தோஷத்திற்கு காரணம், சிவனின் நடனத்தை கண்டு நான் ஆனந்தம் கொண்டேன். நந்தியின் கொம்புகளைக்கு இடையில் அந்த பரம்பொருள் நடனத்தை நான் கண்டு பேரானந்தம் கொண்டேன் என்று நாராயணன் தனது வாகனமாகிய கருடனிடம் கூறினார்
கருடன் என்ன சும்மாவிடுவாரா! நாராயணா தாங்கள் கண்ட நடனக் காட்சியை நானும் கண்டு இன்புற வழியுண்டோ என நாராயணனிடம் கேட்டு விட்டார். அதற்கு நீ இக்காட்சி காண வேண்டும் என்றால் ஒரு பிறவி எடுக்கவேண்மே என்று கூறினார். அதற்கு கருடன் பகவான் தங்கள் தான் எனக்கு திரு நடனக் காட்சியை காண வரம் தந்தருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாராயணன் மனம் இறங்கி யாம் தந்தோம் உனக்கு ஒரு பிறவியை என தந்து வாழ்த்தினார். அப்படி நாராயணன் கடருடனுக்கு பிறப்பை தந்து இந்தப பூலோகத்தில் பிறந்தால் மட்டும் காண முடியும் அதற்கான நேரம் உனக்கு வந்து விட்டது.
நீ பூலோகத்தில் அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறப்பாய் என்று வரம் தந்தருளினார். வரத்தை பெற்றுக்கொண்டு வானில் இருந்து வந்து அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் மகனாகப் அவர் பாதங்களில் வீழ்ந்ததால் தான் அவருக்கு பதஞ்சலி என்று பெயர் வந்தது.
ஆம் கருட பகவான் தான் பதஞ்சலியாகி பிறப்பு எடுத்து சிவனின் திரு நடனக் காட்சியை கண்டார்.