கலியுக தர்மம் என்றால் என்ன?

53

கலியுக தர்மம் என்றால் என்ன?

கலியுகம் தொடங்குவதற்கு முன், சில முனிவர்கள் ஒன்று கூடி வேத வியாசரின் ஆசிரமத்துக்கு சென்றார்கள். வியாசரை அடிபணிந்த அம்முனிவர்கள், “சற்று முன் தேவ லோகத்தில் மிகச்சிறப் பான ஒரு யாகம் நடப்பதைக் கண்டோம். ஆனால் இப்போது பூலோகத்தில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது! கலியுகத்தில் பூமியில் வேள்விகள் நடக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றவில் லையே! அதனால் தான் மனம் வருந்தி, இதற்கான தீர்வு காண உங்களைத் தேடி வந்தோம்!” என்று சொன்னார்கள்.

வேத வியாசர், “முதலில் வேள்விகளை எதற்குச் செய்ய வேண்டும் என்று சொல் லுங்கள்!” என்றார். “வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளின் படி வேள்விகளைச் செய்தால், அதனால் இறைவனுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். இறைவனின் அருளைப் பெறலாம். ஆனா ல் வரப்போகும் கலியுகத்தில் இத்தகைய வேள்விகளை செய்யக்கூடிய ஞானமோ, சக்தியோ, திறமையோ மக்களுக்கு இருக் காது என்றே நாங்கள் கருதுகிறோம். என வே அவர்களால் இறை அருளைப் பெற முடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கம் எங்கள் மனதில் எழுகிறது.

அதனால் தான் இந்தச் சிக்கலுக்கான தீர்வைத் தேடி உங்களிடம் வந்துள்ளோம்!” என்றார்கள் முனிவர்கள். வியாசரோ, “நீங்கள் சொன்னது சரி.இறை வனை மகிழ்விக்கத் தான் வேள்விகள் செய்யப்படுகின்றன. கலியுகத்தில் வரப் போகும் மக்களில் வேள்வி செய்யும் ஞான மும் திறமையும் பெற்றவர்கள் சிலர் இருந் தாலும், பெரும்பாலான மக்களால் இவ்வே ள்விகளைச் செய்ய இயலாது. அப்படியா னால் அவர்கள் இறையருளைப் பெற என் ன வழி?..”

ஓர் எளிமையான வழியை எனது தந்தை யான பராசர முனிவர் கூறியுள்ளார்:
“த்யாயன் க்ருதே யஜன் யஞ்ஜை: த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன்யத் ஆப்னோதி தத் ஆப்னோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்” கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களுக்கும் வெவ்வேறு தருமங்கள் உள்ளன.
முதல் யுகமான கிருதயுகத்தில் தவம் புரிந்தால் இறைவனை மகிழ்வித்து அவன் அருளை ப் பெறலாம்.

இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து இறைவனை மகிழ்வித் து அவனருளைப் பெறலாம். மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில் அர் ச்சனை, பூஜைகள் செய்து இறையருளை பெறலாம். “ஆனால் கிருதயுகத்தில் தவம் புரிந்தவனும், திரேதா யுகத்தில் யாகம் செய்தவனும், துவாபர யுகத்தில் பூஜைகள் செய்தவனும் பெறும் அதே பலனைக் கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களைப் பாடுவ தால் மிக எளிமையாகப் பெற்று விடலாம்! எனவே கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே இறைவனை எளிதில் மகிழ்விக்கும் சாதனமாகும். அதுவே இறையருளைப் பெறுவதற்கான வழியுமாகும்!” என்றார்.
“வேத வியாசரே! மக்கள் இறையருளைப் பெற நல்ல வழி காட்டியமைக்கு மிக்க நன்றி! ஆனால்

இனியும் உலகில் தவமோ, யாகமோ செய்ய இயலாதா?” என்று முனிவர்கள் கேட்க,
“கலியுகத்தில் ஞானமும் திறமையும் கொண்ட சிலரால் மட்டுமே யாகம் செய்ய முடியும். அனைவராலும் அதை செய்ய முடியாது தான். எனினும், கலியுகம் நிறை வடைந்தவுடன் மீண்டும் கிருதயுகம் வரும்.

அந்தக் கிருதயுகத்தில் வாழும் மக்களுக்கு த் தவம், யாகம் போன்றவற்றைச் செய்யும் ஞானமும் திறமையும் இருக்கும்!” என்றார் வியாசர். “ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு தரு மம் இருப்பதாகச் சொல்கிறீர்களே! இந்தத் தருமங்கள் அந்தந்த யுகத்துக்கு ஏற்றபடிச் சரியாக நிலைத்து நிற்குமா? கிருதயுகத் தில் மீண்டும் தவமும் வேள்வியும் செய் யும் ஆற்றல் மக்களுக்கு கிட்டுமா?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.
“ஊழிக்காலத்தில் ஆலிலைக் கண்ணனா க வந்து உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காக்கிறார் திருமால். அந்நேரத்தில் அந்த உலகங்களோடும் உயிர்களோடும் சேர்த்து அவர்களுகுரிய தருமங்களையும் திருமா ல் காக்கிறார்.

“மீண்டும் உலகத்தைப் படைக்கும் போது முன்பிருந்த அதே தருமங்கள் மீண்டும் உலகில் தொடரும்படிச் செய்கிறார். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியு கம் ஆகிய நான்கு யுகங்களின் சுழற்சியை யும் திருமாலே உண்டாக்குகிறார்…”
“அவ்வாறு அந்த யுகங்கள் சுழற்சி முறையி ல் வரும் போது, அந்தந்த யுகங்களுக்குரி ய தருமங்களும் அந்த யுகங்களோடு சேர் ந்து சுழல்வதை உறுதி செய்கிறார் திருமால். எனவே அவரது கட்டுப்பாட்டின்கீழ் யுகங்களும் அவற்றுக் குரிய தருமங்களும்.

சரியான முறையில் நிலையாகச் சுழன்றுகொண்டே இருக்கும்! எனவே அடுத்து வரும் கலியுகத்தில் அதற்குரிய தருமமான நாம சங்கீர்த்தனத்தால் இறையருளைப் பெறலாம். மீண்டும் கிருதயுகம் வரும்போது நீங்கள் விரும்பிய படி உலகெங்கும் வேள்விகள் நடைபெறும் நிம்மதியாகச் சென்று வாருங்கள்!” என்று முனிவர்களை அனுப்பிவைத்தார் வியாசர் நாமமே பலம் நாமமே சாதனம்
ராம கிருஷ்ண ஹரி பாண்டு ரங்க ஹரி