Saturday, October 21, 2023
HomeArthamulla Aanmeegamபணம் தங்க பீரோ மற்றும் பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

பணம் தங்க பீரோ மற்றும் பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

பணம் தங்க பீரோ மற்றும் பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

தற்போதைய காலத்தில் அனைவருடைய பிரச்சனை என்றால் பணம் குறைவாக வருகிறது. ஆனால் செலவு மட்டும் வருமானத்தை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்பது தான். வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் அவர்கள் சம்பாதிக்கும் பணம் அவர்கள் கையில் தங்குவதில்லை அதற்கு மாறாக ஏதாவது ஒரு வகையில் வீண் செலவாகி கொண்டே இருக்கிறது.

அப்படி நீங்கள் சம்பாதிக்கும் மனம் உங்கள் வாழ்க்கைக்கு பற்றவில்லை என்றால் உங்கள் வீட்டில் பண வரவை அதிகரிப்பதற்காகவும் உங்கள் வீட்டில் மடமடவன பணம் சேர்வதற்காகவும் உங்கள் வீட்டு பீரோவை சரியான திசையை நோக்கி வைத்தாலே போதுமானதாக இருக்கும். அதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்…

பீரோ, பண பெட்டி வைக்கும் திசை:

உங்கள் வீட்டில் இருக்கும் பீரோ அல்லது நீங்கள் பணம் வைத்திருக்கும் பெட்டிகளை வடமேற்கு திசையில் வைத்திருந்தால் உங்களுக்கு வரும் பணமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும். வேறு பணத்தை உங்களால் சேமிக்க முடியாது மாறாக கடன்காரர் ஆகவும் மாறி துன்பப் பட வைக்கும். அதனால் வீட்டின் வடமேற்கு திசையில் பீரோ அல்லது பணப்பெட்டியை வைக்கக் கூடாது.

தென்கிழக்கு திசையைப் பார்த்தவாறு பீரோ அல்லது பணப்பெட்டியை வைத்து இருந்தால் உங்களுக்கு வீண் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் அடுத்தவர்களுக்கு கடனாக பணம் கொடுத்தால் அந்த பணமும் கூட திரும்ப கிடைக்காது. வீட்டில் குபேர மூலை என்று சொல்லப்படும் தென்மேற்கு சார்ந்த மூலையில் நீங்கள் பீரோ அல்லது பணப்பெட்டியை வைத்திருந்தால் உங்கள் வீட்டிற்கு தடையில்லாமல் பணம் வந்து கொண்டே இருக்கும் பணம் கஷ்டம் என்ற வார்த்தைகே இடம் இருக்காது.

அதேபோல் கிழக்கு திசையில் இருந்து மேற்கு பார்த்தவாறு பீரோ அல்லது பணப்பெட்டிகளை வைத்து இருந்தால் பணம் அதிக அளவில் வந்தாலும் அப்படி வரும் பணங்கள் மருத்துவ செலவுக்கு என வீண் செலவாகி கொண்டு இருக்கும். அப்படி வீட்டில் இருக்கும் பீரோ அல்லது பணம் பெட்டிகளை கிழக்கு பார்த்து நீங்கள் வைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியான செலவுகளையே அதை தரும். மேலும் நல்ல லாபத்தையும் தந்து உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். அது மட்டும் இல்லாமல் உங்கள் வீட்டில் மங்களகரமான காரியங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

குபேரர் பூஜை:

உங்கள் வீட்டிலும் எப்போதும் பணவரவு நிலைத்திருக்க வேண்டும் என்றால் திருமகள் அருள் வேண்டும் திருமகளின் செல்வங்களின் அதிபதியான குபேரரின் படத்தையும் மகாலட்சுமி தாயாரின் படத்தையும் எப்பொழுதும் சேர்த்தவாரே வணங்க வேண்டும். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது. பக்த்தர்கள் கிரிவலப் பாதையில் இருக்கும் குபேர லிங்கத்தை மறக்காமல் வழிபட்டு செல்லுங்கள் ஏனென்றால் குபேர லிங்கத்தை வழிபட்டு வந்தால் உங்கள் வீட்டில் உள்ள செல்வம் பல மடங்காக பெருகும்.

பூச நட்சத்திரத்துடன் வரும் வியாழக்கிழமை குபேரருக்கு மிகவும் விசேஷமான நாள் அந்த நாட்களில் குபேரரே பூஜை செய்து வழிபட்டு வந்தால் நீங்கள் எண்ண முடியாத அளவிற்கு அதிகமான செல்வங்கள் உங்கள் வீட்டில் சேரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − four =

Most Popular