Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamகிருஷ்ணரும் குசேலரும்

கிருஷ்ணரும் குசேலரும்

சுகமுனிவர் கிருஷ்ண, குசேலம் (ஸுதாமா) சரிதம் கூறலானார். குசேலர் விஷய சுகங்களில் பற்றற்றவராய், ஞானியாய், சாந்த சீலராய் விளங்கினார். புலன்களை வென்று, தீவிர வைராக்கியத்துடன், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் தன் மனைவி க்ஷத்க்ஷமா (சுசீலை) மற்றும் இருபத்தேழு குழந்தைகளுடன் எளிய, வறிய வாழ்க்கை நடத்தி வந்தார்.

ஒருநாள் அவர் மனைவி குடும்பத்தின் தரித்திர நிலையைக் குறிப்பிட்டு குசேலரின் பால்ய சினேகிதர் கிருஷ்ணனைத் தரிசித்து திரவிய சகாயம் பெற்று வருமாறு வேண்டினாள். சரணமடைந்தவரைக் காத்திடும் அச்சரணாகத வத்சலன் அள்ளித்தரும் அச்சுதன் அல்லவா என்றாள். அப்போது குசேலர் வெறுங்கையுடன் கிருஷ்ணனிடம் எவ்வாறு செல்வது என்று கூறிட, அவர் மனைவி தான் சேர்த்து வைத்திருந்த சிறிதளவு அவலை மூட்டை கட்டி அவரிடம் கொடுத்தாள்.

மகாபிரபுவான கிருஷ்ணனின் தரிசனம் ஏழை பிராம்மணனாகிய தனக்கு கிடைக்குமா என்ற ஐயத்துடன் புறப்பட்ட குசேலர் துவாரகையை அடைய காவலர் அவரை அனுமதிக்கவில்லை. அப்போது ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்துள்ள கிருஷ்ணனைக் கண்டார்.

வெகுதொலைவில் வரும்போதே குசேலரைக் கண்டுவிட்ட கிருஷ்ணன் தனது பால்ய சிநேகிதன் நலிவுற்றிருந்த குசேலரைக் கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து வரவேற்று, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று வெகுவாக உபசரித்து, ருக்மிணிக்கும் அவரை அறிமுகம் செய்துவித்தார். பாதபூஜை செய்தார். கிருஷ்ணன் குசேலரின் க்ஷேமநலம், குடும்பத்தில் மனைவி மக்கள் பற்றி எல்லாம் விசாரித்து கடைசியில், எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்? என்று வினவ, குசேலர் மவுனமாக இருக்க, கிருஷ்ணன் அவர் மேல் துணியில் இருந்த முடிப்பைக் கண்டு, அதனை அவிழ்த்து அதிலிருந்த அவலை ஒரு பிடி கையில் எடுத்துக் கொண்டு, தனக்கு அவல் என்றால் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஆவலுடன் உட்கொண்டார்.

அவர் இன்னொரு பிடி அவலை உட்கொள்ள ருக்மிணி அதனைத் தடுத்தாள். உமது திருப்திக்கு அது போதும் என்றாள். கிருஷ்ணன் குசேலரின் வருகையின் காரணம் அறிந்து ஒரு பிடி உட்கொண்டதன் மூலமே மிகுதியான செல்வத்தைக் குசேலருக்கு அளித்துவிட்டார். இது கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் மட்டுமே தெரியும். குசேலர் உதவி கேட்கவில்லை. பகவான் அளித்ததை அறியவுமில்லை. இதை நினைத்துக் கொண்டே கிருஷ்ணனிடம் விடைபெற்று வீடு திரும்பினார். பகவானுடைய தரிசனம் கிடைத்ததே பெருத்த லாபமென்று எண்ணிக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தன் ஊர் அடைந்த அவர் தன் இல்லம் இருக்குமிடம் தெரியாமல் தவித்தார்.

அவர் வீடு சிறந்த மாளிகையாக மாறி சகல வசதிகளுடன் விளங்கியது. இதையெல்லாம் கண்டு வியந்து, பகவான் கருணையை எண்ணி தியானத்தில் இருந்த அவரை ஒரு லக்ஷ்மி போன்ற மங்கை எதிர்கொண்டு அழைக்க அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். தன்னை வரவேற்பவள் தன் மனைவி என்று தெரியவே சிறிது நேரம் ஆயிற்று. அப்போது அவர் மனதில் எண்ணினார், பகவான் பக்தர்கள் அளிப்பது குறைவாயினும், அதனைப் பெரிதாக எண்ணி அவர்களுக்கு நிறைவான செல்வத்தை அளிக்கிறார். அவர் அருளால் எனக்கு எல்லாப் பிறவிகளிலும் அவருடைய நட்பும், அவரிடம் இடையறாத பக்தி, அவர் சேவையில் மனம் லயித்து இருக்க வேண்டும் என்று எண்ணினார். குசேலர் இடைவிடாமல் பகவானைத் தியானம் செய்து, அகங்காரம், மமகாரம் நீக்கி, பற்றற்று பந்தபாசங்கள் விட்டு சத்புருஷர்களால் அடையப்பெறும் திவ்ய பதத்தை அடைந்தார்.

ஓம் க்ரிஷ்ணாய நமஹ! கிருஷ்ண மந்திரம் ஒன்றே தெரிந்த குசேலனின் கதை.

ஒரு சுயமரியாதையை உயிருக்கும் மேலாக மதிக்கும் நல்ல மனிதனர். அவர் குடும்பம் நம்பவொண்ணா வறுமையில் வாடுகிறது. அவர் மனைவி வசுந்தரா கண்வன் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு அளவில்லை.

அந்தக் கால பிராமணதர்மப்படி குசேலசுதாமா ஒவ்வொரு நாளும் ஐந்து வீடுகளில்
பிக்ஷை எடுத்து அதையே குழந்தைகளுக்கும் மனைவிக்கும் பகிர்ந்து கொடுக்கும் வழக்கம் தினசரி நடக்கும்.

அதையே நல்ல உணவாக சமைத்துப் பகிர்ந்து கொடுப்பார் வசுந்தரா.சுசீலை என்று பெயர்க்காரணமும் அவளுக்கு உண்டு.. அவ்வளவு சீலமான குணத்தைக் கொண்டவள்.

கணவனின் பக்தியையும் சம்சார பந்தத்தில் அவ்வளவு ஈடுபாடு காண்பிக்காததையும் அவள் மதித்தாலும் குழந்தைகள் பசியில் வாடுவதைப் பொறுக்க முடியவில்லை.

சுதாமவின் தோழன் ஒருவர் அந்த ஊர் அரசனைப் புகழ்ந்துபாடிப் பிழைக்கிறார்.
அவர் சுதாமிவின் வறுமையைப் போக்க ஏண்ணி அரசனிடம் அழைத்துப் போக, அரசவையில் ஸ்ரீகிருஷ்ண துதி பாடுகிறார் சுதாமா. மது போதையில் இருந்த அரசன் அவரை விரட்டி அடிக்கிறான். உள்ளமும் உடலும் நொந்து வீட்டுக்கு வந்து அரற்றும் கணவனைத் தேற்றுகிறாள்.

அடுத்தநாள் கணவனிடம் இதமாக எடுத்துச் சொல்லுகிறாள் ”நீங்கள் உங்கள் நண்பர் கிருஷ்ணனைப் பார்த்துவரலாமே. அவர் உங்களைப் பார்த்ததுமே புரிந்து கொள்வார்”
என்று சுதாமாவைப் பலவழியில் இத உபதேசம் செய்து பக்கத்து விட்டில் கடனாக வாங்கின அவலைச் சுத்தம் செய்து அவர் கையில் கொடுக்கிறார். பிறகு நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

குசேலரும் கிருஷ்ணரைப் பார்த்து மகிழ்ந்து கண்ணீர்விட்டு நெகிழ்ந்து அவன் உபசாரத்தில்திளைது அவலைக் கொடுக்கிறார். ஸ்ரீகிருஷ்ணனும் அதை உண்டபிறகு,நண்பனின் கால்களைப் பிடித்தவாறு

அவரது குடும்பத்தைப் பற்றியும் விசாரிக்கிறார்.

நட்பின் பரிசாகச் சுதாமவுக்குத் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேகும்போது சுதாம மறுக்கிறார்.

தன் குடும்பம் களிப்புடனும், நிம்மதியாக சங்கடமில்லாமல் இருப்பதாகவும் மனதாரச் சொல்கிறார். ஸ்ரீகிருஷ்ணனுக்கு உண்மை நிலை தெரியும்.

பக்கத்தில் லக்ஷ்மி தேவியான ருக்மணியும் குசேலசுதாமாவுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தவிக்கிறாள்.

கண்ணன் அவளைச் சமாதானப் படுத்தி, குசேலரின் வாய்வழியாக வந்த வார்த்தைகளைத் தான் மெய்ப்பிப்பதாகச் சொல்லி
தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைக்கிறார்.

அவரிடம் சுதாமாவின் விவரங்களைச் சொல்லி உடனே வ்ரிந்தாபுரிக்குச் சென்று ஒரு மாளிகையை அமைக்கும்படி கேட்டுக் கொள்கிறார். அவரும் உடனே வசுந்தரா வீட்டில் பிரத்தியட்சமாகிறார். கிருஷ்ணரின் கட்டளையை நிறைவேற்றத் தான் வந்திருப்பதாகச் சொல்கிறார்.

பிரமிப்புடன் கேட்ட வசுந்தரா, தான் அந்த உதவியை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகச் சொல்கிறாள். விஸ்வகர்மா சுற்றும் முற்றும் பார்த்து விசனப்படுகிறார். அவரிடம் வசுந்தரா தெளிவாகத் தன் நிலையை விளக்குகிறாள்.

இந்த இருபது வருடங்களாக இந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை மக்களும் எங்கள் ஒரு வேளைபோஜனத்துக்காவது வழிவகுத்திருக்கிறார்கள்.

நாங்கள் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்பொழுது உங்கள் கருணையால் எங்கள் வீடு மட்டும் கிருஷ்ணரின் த்வாரகா போலக் காட்சி அளித்தால் அது தர்மமாகாது என்று சொல்லி நிறுத்துகிறாள்.

விஸ்வகர்மா, வறுமையிலும் ஒளிவிடும் அவள் கருணையையும் நேர்மையையும் கண்டு வியந்து ஸ்ரீகிருஷ்ணரிடம் விண்ணப்பிக்க

அவரும் வசுந்தராவிம் தயாள உள்ளத்தை மெச்சி அவள் விருப்பபடியே பிருந்தாபுரி வீடுகள் அத்தனையும் மாளிகையாக வேண்டும் என்று கட்டளை இடுகிறார்.

வெளியே வந்து அந்த ஊர்மக்கள் அனைவரிடமும் வசுந்தராவின் பெருமையைச் சொல்கிறார் விஸ்வகர்மா! அவர் பேசின சில நொடிகளில்

அந்த ஊரே த்வாரகா புரி போல ஒளிர்கிறது. மக்களின் இன்பத்துக்கு அளவில்லை.
வசுந்தராவின் கருணையை வாய்விட்டு மெச்சுகிறார்கள்.

ருக்மணி தேவி தன்பங்குக்கு வீடுகளில் செல்வம் செழிக்கச் செய்கிறாள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 7 =

Most Popular