Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamஅபிஷேக தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!

அபிஷேக தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!

அபிஷேக தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி அறிவோம்!

பொதுவான அபிஷேகம் என்றால் பாலாபிஷேகம் தான். ஒவ்வொரு கோயிலில் இருக்கும் மூலவருக்கும் ஒவ்வொரு விதமான அபிஷேகம் சிறப்பாக செய்யப்படுகிறது. அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும்.

ஆலய வழிபாடு ஏன் அவசியமாகிறது என்று தெரிந்துகொண்டால் அபிஷேகத்தின் அவசியமும் எளிதாக உணர்ந்துகொள்ள முடியும். ஆலயங்கள் நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இடமாக உள்ளது என்பது விஞ்ஞான பூர்வ மாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இறைவழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் மன நிம்மதி பெறும் வகையில் மனதில் இருக்கும் எதிர்மறையான ஆற்றல் வலுவிழக்கும் வகையில் நேர்மறையான ஆற்றலை பெறுவதும் இதனால் தான்.

அத்தகைய ஆற்றலை அளிக்கும் இறைவனது ஆற்றல் பொலிவாக நம்மீது பட வேண்டாமா? அதற்குதான் அபிஷேகங்களும் ஆராதனைகளும் இறைவழிப் பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்து மதமானது பதினாறு வகையான உபசாரங்கள் ஆண்டவனுக்கு உரியது என்று கூறுகின்றன. அவற்றுள் ஆற்றல் பொருந்திய அபிஷேக வழிபாடு முக் கியத்துவம் பெற்றவை. தமிழில் இதை திருமுழுக்கு என்று கூறுவார்கள். அதி காலையில் ஆலயம் திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வேண்டுதலுக்காக வரும் பக்தர்கள் அபிஷேகங் களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

அபிஷேகத்தின் வகைகள்:

நமது முன்னோர்கள் அபிஷேகங்களுக்கு 26 வகை திரவியங்களைப் பயன் படுத்தினார்கள். பிறகு படிப்படியாக 18 ஆகி தற்போது 12 வகை திரவியங்கள் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. கோயிலில் இருக்கும் மூலவர் சிலை வெளிப்படுத்தும் அபரிதமான ஆற்றல் அந்த சிலைக்கு செய்யப்படும் அபிஷேக திரவியங்களின் எண்ணிக்கை, அளவை செய்யப்படும் சிறப்பை வைத்தே வெளிப்படுத்தும்.

குறிப்பாக பழைமையான ஆலயங்களில் அருள்பாலிக்கும் மூலவர் சிலைகள் அரிய மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் அந்த சிலையின் அடியில் சக்தி வாய்ந்த மந்திரத் தகடுகள் பதித்து வைக்கப்பட்டிருக்கும். இந்த சக்திகள் அபிஷேகம் செய்யும் போது அதிக ஆற்றலை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் அபிஷேக தீர்த்தத்தைக் குடிக்கும் போதும், நம் உடலில் தெளித்துக் கொள்ளும் போதும் ஆன்ம பலம் அதிகரிக்கிறது. அபிஷேகம் செய்யும் போது கருவறையில் இருக்கும் மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் உண்டாகிறது. இங்குள்ள காற்று மண்ட லத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிக்கப்படுகிறது. அப்போது காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும்.

அதனால் ஒளிவேகமும் அதிகமாக இருக்கும். அபிஷேக மும், மந்திரமும் சொல்லப்பட்டு மூலவர் சிலையில் பட்டு வெளிவரும் போதும் நேர் அயனியாக வெளிவருகிறது. தீப ஒளி மூலவருக்கு காட்டும்போது கரு வறையில் இருக்கும் காற்றுமண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வந்து நேர் அயனியாகவும், எதிர் அயனியாகவும் பக்தர்களுக்கு ஆற்றல் அளிப்பதாக கூறுகிறார்கள். இதுவும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. இதைப் பற்றிய விளக்கங்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு கோயிலில் இருக்கும் மூலவருக்கும் ஒவ்வொரு விதமான அபிஷேகம் சிறப்பு. அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். பொதுவான அபிஷேகம் என்றால் பாலாபிஷேகம் தான். பக்தர்கள் விரும்பி செய்வதும் பாலாபிஷேகம் தான். பக்தர்கள் அபிஷேகத்துக்கு பால் கொண்டு செல்லும் போது ஆலயத்தை ஒரு சுற்று சுற்றி கொடுத்தால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்று இந்துமதம் கூறுகிறது.
குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்திக்கு செய்யப்படும் பல்வேறு அபிஷேகங்களில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தீர்த்த அபிஷேகம் – மனசுத்தம்
எண்ணெய் – பக்தி
நெல்லிப்பொடி – நோய் நிவாரண்ம்
பால் அபிஷேகம் – சாந்தம்
மஞ்சள் பொடி – மங்கலம்
தயிர் – உடல் நலம்
நெய் – நல்வாழ்வு
பன்னீர் – புகழ்
நாட்டு சர்க்கரை – சோதிடம்
விபூதி – ஞானம்
சந்தனம் – சொர்க்க லோகம்
தேன் – குரல் வளமை, ஆயுள்
பழச்சாறு – ஜனவசீகரம்
பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள்
பஞ்ச கவ்யம் – பாவம் நீக்கல்
இளநீர் – புத்திரப் பேறு
அன்னம் – அரசு உதவி
மாப்பொடி – குபேர சம்பத்து

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + twelve =

Most Popular