Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamவீட்டில் பைக், காரை எந்தப் பக்கம் நிறுத்த வேண்டும்?

வீட்டில் பைக், காரை எந்தப் பக்கம் நிறுத்த வேண்டும்?

வீட்டில் பைக், காரை எந்தப் பக்கம் நிறுத்த வேண்டும்?

தற்போது உள்ள நவீன காலத்தில் வாகனங்கள் இல்லாத வீடே கிடையாது. வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள் என அனைவருமே வாகனங்களை வைத்திருக்கின்றனர். அப்படி நாம் வைத்திருக்க கூடிய வாகனங்களை வாஸ்து முறைப்படி சரியான இடத்தில் விடுவது தான் நல்லது. வாஸ்து படி எங்கு வாகனங்களை நிறுத்தினால் நல்லது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாஸ்து படி எங்கு வாகனங்களை நிறுத்தினால் நல்லது என பார்க்கும் போது மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்க்கின் உச்சத்தில் வீட்டின் கேட் இருக்கும் போது வாகனங்களை நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதி இருப்பது நல்லது. உச்ச ஸ்தானங்களில் கேட்டை அமைத்து அதன் வழியே வாகனங்கள் செல்லுமாறு கட்டலாம்.

கிழக்கு பார்த்து வீடு இருப்பவர்கள் வடகிழக்கில் உச்சஸ்தானத்தில் வீட்டின் கேட் இருக்கும் போது கார் நிறுத்துமிடமாக வடமேற்கு பகுதி இருப்பது நல்லது. தெற்கு பார்த்து வீடு இருப்பவர்கள் உச்ச ஸ்தானமான தென்கிழக்கில் வீட்டின் கேட் இருக்கும் போது வாகனங்களை நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதியாக இருப்பது நல்லது.

வடக்கு பார்த்து வீடு இருப்பவர்கள் வடகிழக்கின் உச்ச ஸ்தானத்தில் வாசற்படி இருக்கும் போது கார் நிறுத்துமிடமாக தென்கிழக்கு பகுதி இருப்பது நல்லது. வீட்டில் இடப் பற்றாக்குறை உள்ளவர்கள் நீச ஸ்தானங்களில் வண்டி வாகனங்களை நிறுத்த கூடிய இடத்தில் கேட் அமைக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அந்த வழியை வாகனங்கள் நிறுத்தவதற்கு மட்டும் அமைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே செல்வதற்கு உச்ச ஸ்தானத்தில் கேட்டை அப்பது நல்லது.

செய்ய கூடாதவை:

ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு மூலையில் அதிக எடையுள்ள வாகனங்களை நிறுத்த கூடாது. ஏனென்றால் ஈசான்ய மூலை ஈசன் குடியிருக்க கூடிய இடம் என்பதால் இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது. மேலும் டயர்களில் ஒட்டியிருக்கும் அழுக்குகள் மற்றும் அதிலிருந்து வழியும் ஆயில் பெட்ரோல் ஆகியவை அந்த இடத்தில் படுமேயானால் அந்த இடத்தின் தூய்மையானது அழுக்காகி விடும் ஆகவே வடகிழக்கு மூலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது.

ஒரு கட்டிடத்தின் எந்த பகுதியையும் உடைத்து போர்டிகோ அமைக்க கூடாது. ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் (Basement) கார் நிறுத்துவதற்காக கண்டிப்பாக இடம் அமைக்கக்கூடாது. வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் இடம் தாய் சுவரையும், மதில் சுவரையும் தொடாமல் தனியாக அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + two =

Most Popular