Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamகீழே கிடக்கும் காசு, பணத்தை எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? 

கீழே கிடக்கும் காசு, பணத்தை எடுத்தால் என்ன செய்ய வேண்டும்? 

கீழே கிடக்கும் காசு, பணத்தை எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?

பணம் என்பது ஒருவருடைய வாழ்க்கைக்கு தேவையான மிகவும் முக்கியமான பொருள் ஆகும். இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக தான் காலை முதல் மாலை வரை பாடுபடுகிறோம். பணம் இருந்தால் தான் பிறர் நம்மை மதிக்கவும் செய்வார்கள். அப்படிப்பட்ட இந்த பணம் பலரிடமிருந்தும் தெரியாமல் கீழே விழுந்து விடுவது உண்டு. கீழே கிடக்கும் இந்த பணம் கிடைப்பது நல்லதா? கெட்டதா என்று இந்த பதிவில் பார்க்கலாம். அப்படி கீழே கிடப்பது காசாகவோ, பணமாகவோ இருந்து அதனை எடுத்து பயன்படுத்தலாமா என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

நம்மில் பலர் சிறு வயதில் அம்மா, அப்பாவின் பணத்தை எடுத்து விளையாடவும், மிட்டாய் வாங்கவும் செய்திருப்போம். மேலும் சில சமயங்களில் நமக்கு கீழே கிடக்கும் பணம் கிடைத்திருக்கும். அப்படி பணம் கிடைத்தால் ஏதாவது தீயது நடக்குமா என்ற பயம் கூட ஏற்பட்டிருக்கலாம். சில சமயங்களில் அப்படி அடுத்தவரின் உழைப்பில் கிடைத்த பணத்தை நாம் எடுத்தால் அவர் நம்மை சாபம் விடுவாரோ என பயம் நமக்கு வந்திருக்கும்.

ஆனால் உண்மையில் பணம் என்பது தீட்டை ஏற்படுத்தும் பொருள் அல்ல. ஏனென்றால் பணம் மகாலட்சுமியின் அம்சம். அப்படிப்பட்ட இந்த பணம் கீழே கிடந்து நமக்கு கிடைத்தால் அது பூமா தேவியின் வரமாக தான் பார்க்க வேண்டும். அதனால் பணம் அல்லது நாணயம் கீழே கிடந்தது என்றால் அதை எடுக்க எந்த கலக்கமும் வேண்டாம்.

கீழே கிடந்த பணம் யாருடையது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கும் வரை அதை உங்களுக்கு சொந்தமானதாக பார்க்க வேண்டும். ஆனால் அது யாருடையது என்பது தெரிந்துவிட்டால் அதை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். யாருடைய பணம் என தெரியாத போது, அந்த பணத்தை வைத்துக் கொள்வதில் பலருக்கும் மனக்குழப்பம் ஏற்படும்.

அதாவது அதை தவறவிட்ட நபர் என்ன பாடுபடுகிறாரோ, சாபமிடுவாரோ என்ற எண்ணம் வரும். ஆகவே இந்த பணத்தை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் உங்களுக்கு கீழே கிடந்து பணம் கிடைத்தால் அதை உங்கள் சொந்த பணம் பயன்படுத்துவது போல் இல்லாமல் பணத்தை எடுத்து நீரில் கழுவி பத்திரமாக வைத்துக் கொள்ளலாம்.

ஒருவேளை உங்களுக்கு மன் உளைச்சலாகவே இருப்பின், கீழே கிடந்து எடுத்த பண அளவிற்கு உங்கள் சொந்த பணத்தை கோயில் உண்டியலில் காணிக்கையாக போட்டால் உங்கள் மன கலக்கம் நீங்கும். இப்படி நீங்கள் பணம் உண்டியலில் சேர்த்தால் உங்களுக்கு புண்ணியமும் கீழே கிடந்து எடுத்த பணத்தால் நன்மையும் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 5 =

Most Popular