Saturday, October 21, 2023
HomeArthamulla Aanmeegamஅமெரிக்காவில் அமைந்த இந்து கோயில்கள்!

அமெரிக்காவில் அமைந்த இந்து கோயில்கள்!

அமெரிக்காவில் அமைந்த இந்து கோயில்கள்!

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கோயில்கள் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவில் இந்து சமய கோயில்கள் பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க.

மகா வல்லப கணபதி:

அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் இந்து கோயில் என்ற சிறப்புக்குரிய கோயில் மகா கணபதி கோயில்.
இது ‘ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானம்’ என்றும், ‘கணேஷ் கோவில்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1977-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய மற்றும் மத நிகழ்வுகளை நடத்துவதற்காக 1970-ல் திறக்கப்பட்டது. இது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான இந்துக் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

லட்சுமிதேவி ஆலயம்:

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் எல்லைப் பகுதியான ஆஷ்லாந்து பகுதியில் லட்சுமி தேவி ஆலயம் இருக்கிறது. ‘ஸ்ரீ லட்சுமி கோவில்’ என்று அழைக்கப்படும் இந்த ஆலயம், 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. 1980-ல் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானம், இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று மக்களின் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆலயம் தரையில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் மகாலட்சுமி தவிர, கணபதி, வெங்கடேஸ்வரா, நடராஜர், சுப்பிரமணியர், ஹரிஹரபுத்ரா, கருடன், நவக்கிரக சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

வெங்கடேஸ்வரா கோவில்:

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் என்ற இடத்தில் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்’ உள்ளது. இந்த ஆலயம் தென்னிந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலை நினைவுபடுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளஹ்டு. 1975-ம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது. அமெரிக்காவின் பழமையான இந்து கோயில்களில் இந்தக் கோயிலும் ஒன்று. இக்கோவிலில் விநாயகர், பார்வதி தேவி மற்றும் சிவன் சன்னிதிகள் இருந்தாலும், வெங்கடேஸ்வரர்தான் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த ஆலயம் தங்க ரதத்திற்கு பிரசித்திப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவ – விஷ்ணு கோவில்:

அமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள, சிவ- விஷ்ணு ஆலயம் இது. இவ்வாலயத்தில் விநாயகர், ராமர், கிருஷ்ணர், துர்க்கை, மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களைக் குறிப்பிடும் தெய்வங்களும் வழிபடப் படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கிய தெய்வமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

வெங்கடேஸ்வர சுவாமி கோவில்:

திருப்பதி வெங்கடாஜலபதியை நினைவுபடுத்தும் வகையில், அமெரிக்காவின் மத்தியப் பகுதியான இல்லினொய்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம். இதனை ‘பாலாஜி கோவில்’ என்றும் அழைப்பார்கள். மகாவிஷ்ணுவை பிரதான தெய்வமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட கோயில் இது. அமெரிக்காவில் உள்ள பழமையான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர், சிவன், பார்வதி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

சிவ – விஷ்ணு கோவில் – கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள, சிவ – விஷ்ணு கோவில் இது. இந்து சமயத்தவரால் நன்கு அறியப்பட்ட சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்ட ஆலயம்.

சிவ – விஷ்ணு கோவில் – புளோரிடா:

அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள புளோரிடாவில் சிவன் மற்றும் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இதனை ‘சிவ – விஷ்ணு கோவில்’ என்று அழைப்பது உண்டு. சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான கணபதி ஸ்தபதி வழிகாட்டுதலின்படி, மகாபலிபுரத்தைச் சேர்ந்த 12 கட்டிடக் கலைஞர்கள் உதவியுடன் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.

அட்லாண்டா ஆலயம்:

1980-களின் முற்பகுதியில் கட்டப்பட்ட அழகு வாய்ந்த ஆலயம் இதுவாகும். இங்கு, விநாயகர், அனுமன், துர்க்கை, நாகேந்திரன் மற்றும் பைரவரை வழிபாடு செய்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிவன் மற்றும் விஷ்ணுவின் சன்னிதிகள் கோவிலின் சிறப்புகளின் ஒன்றாகும். வெங்கடேஸ்வரர் என்ற பெயரில் மகா விஷ்ணுவும், ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும் அருள்பாலித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × five =

Most Popular