Saturday, October 14, 2023
HomeArthamulla Aanmeegamகிருஷ்ண பகவானை தரிசிக்க செல்ல வேண்டிய 6 வைணவ தலங்கள்!

கிருஷ்ண பகவானை தரிசிக்க செல்ல வேண்டிய 6 வைணவ தலங்கள்!

கிருஷ்ண பகவானை தரிசிக்க செல்ல வேண்டிய 6 வைணவ தலங்கள்!

நாட்டில் பல புண்ணிய திருத்தலங்கள் இருந்தாலும் அவற்றில் சிறப்புடைய சில திருத்தலங்கள் பக்தியையும் கிருஷ்ண பரமாதமாவின் மேல் அளவற்ற பற்றும் கொண்ட பக்தர்களை ஆனந்தமடைய செய்கிறது.
இத்தகு சிறப்புடைய தலங்களில் உற்சாகமும் அழகும் நிறைந்து காணப்படுவது ஜென்மாஷ்டமி நாளில் தான். கிருஷ்ணனின் அருளுக்காக யாத்திரை செல்ல விரும்புபவர்களுக்கு பயண திட்டத்திற்கான சில முக்கிய திருத்தலங்கள் இது…..

மதுரா;

கிருஷ்ண பகவான் பிறந்த இடம். ஸ்ரீ கிருஷ்ணர் கம்சராஜனால் சிறை வைக்கப்பட்ட காலத்தில் அவர் பெற்றோருக்கு சிறையில் பிறந்த தெய்வீக குழந்தை. பிறந்தவுடனே வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணரை கோகுலத்திற்கு கொண்டு சென்றுவிட்டார். ஆண்டுதோறும் ஜென்மாஷ்டமி நாளில் மதுரா முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஜகுலன் உற்சவ எனப்படும் ஊஞ்சலாட்டும் உற்சவம் மதுராவில் கொண்டாடப்படும். மதுராவில் ஸ்ரீ பாங்கி பிஹாரி கோயில், துவாரகதிஷ் கோயில், ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி, மற்றும் மிக பிரபலமான இஸ்கான் (ISCKON) கோவில் ஆகியவை தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்கள் ஆகும்.

பிருந்தாவனம்:

மதுராவிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது பிருந்தாவனம் திருத்தலம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவத்தின் மற்றும் இளம் பருவத்தின் லீலைகள் நடந்த இடம். பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் பிரபலமான ராச லீலை நடந்ததாக ஐதீகம் உள்ளது. மிகப்பழமையான தலமான ஸ்ரீ கோவிந்த தேவ் ஆலயம் இங்கு நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய தலம். கிருஷ்ண பகவானின் சிறப்பை கூறும் மற்றொரு தலம் நித்திய வனம் ஆகும். இன்றளவிலும் கிருஷ்ணபகவான் தன் அன்பிற்குரிய ராதை மற்றும் கோபிகை பெண்டிரோடு ராசா லீலா புரிய நித்தியவனத்திற்கு வருவதாக ஒரு ஐதீகம் உள்ளது. துளசி வனம் நித்தியவனத்தின் இன்னொரு சிறப்பம்சமாகும்.

கோகுலம்:

கிருஷ்ணபகவான் தன குழந்தைப் பருவத்தை கழித்த புனிதத் தலமே கோகுலம். இந்த கோகுலத்தைச் சுற்றியுள்ள காடுகளுக்கு தான் ஸ்ரீ கிருஷ்ணர் பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். கோகுலத்தின் சிறப்பு என்னவென்றால், கணக்கிடப்பட்ட ஜென்மாஷ்டமிக்கு அடுத்த நாளே, இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஏனெனில் வசுதேவர் ஸ்ரீ கிருஷ்ணனை அவர் பிறந்த நாளன்று நள்ளிரவில் தான் கோகுலத்திற்கு கொண்டு வந்தார். இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களும் தனிதுவுமனாவையே. கோகுலத்தில் உள்ள மக்கள் தயிர் மற்றும் மஞ்சள் நீரால் தங்களை நனைத்து விளையாடி ஸ்ரீ கிருஷ்ணர் வந்தருளிய தினத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். கோகுலத்தில் உள்ள ராதா ராமன் ஆலயம், ராதா தாமோதர் ஆலயம், ஆகியவை முக்கியமாக தரிசிக்க வேண்டியவை.

துவாரகை:

ஸ்ரீ கிருஷ்ண பகவான் வளர்ந்த பின் வாழ்ந்த இடம் துவாரகை. அசல் துவாரகாபுரித் தீவு குஜராத்தின் அருகே கடற்கரையோரத்தில் உள்ளது. ஆனால் அது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் இறுதி காலத்திற்கு பின் கடலோடு கலந்து விட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. தற்போதைய துவாரகை ஹட்ச்சில் உள்ள கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் மேல் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள் தரிசிக்க வேண்டிய மிக முக்கிய திருத்தலமான துவாரகதிஷ் இங்கு உள்ளது. இங்குள்ள மற்றொரு கோயில், ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவி ஸ்ரீ ருக்மணி தேவியின் கோயில். நீங்கள் துவாரகாவின் வெளிப்புறத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஜீவா சாந்தியடைந்ததாக கூறப்படும் இடத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

பூரி:

புகழ் பெற்ற ஜெகந்நாதர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் அல்லது ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களது சகோதரர்களான பலராமன் மற்றும் சுபத்ரனோடு வசித்த இடம் பூரி என்று புராணம் கூறுகிறது.
இங்கு ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்கள் ஜென்மாஷ்டமிக்கு 17 நாட்கள் முன்னரே தொடங்கி விடுகிறது.

உடுப்பி:

தென்னிந்தியாவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் திருத்தலம் ஒன்றிற்கு செல்ல வேண்டுமென்றால் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய புனிதமான இடம் உடுப்பி. இங்குள்ள ஸ்ரீ கிருஷ்ண மடம், நடுவில் ஒரு கோயிலை கொண்டு சுற்றிலும் எட்டு மடாலயங்களை கொண்ட மிகப்பெரிய கோயில். உடுப்பியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களை பெரும்பான்மையான இடங்களில் காணலாம். உடுப்பி நகர வீதிகளில் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பால்ய கதைகள் நாடங்களாக அரங்கேற்றப்படும். களிமண்ணாலான ஸ்ரீ கிருஷ்ண பகவான் சிலைகளை கலைஞர்கள் காட்சிக்கு வைப்பார்கள். ஆடல் பாடல் கலாச்சார நிகழ்வுகள் ஜென்மாசக்டமி நாளன்று இரவு களைகட்டும்.
யக்ஷ கானங்களும் புல்லாங்குழல் கச்சேரிகளும் உடுப்பியில் ஜென்மாஷ்டமி கொண்டாட்டங்களில் உள்ள மற்ற சிறப்பம்சங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 12 =

Most Popular