Sunday, October 22, 2023
HomeArthamulla Aanmeegamமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமத்திற்கு இத்தனை சிறப்புகளா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குங்குமத்திற்கு இத்தனை சிறப்புகளா?

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழங்கப்படும் குங்குமத்திற்கு இத்தனை சிறப்புகளா?

இங்கிலாந்து அறிஞர் கண்டறிந்த அதிசயம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதமாக வழங்கப்படும் குங்குமமும் விபூதியும் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.

அதிசயம் நிறைந்த குங்குமம்:

இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு மீனாட்சி அம்மன் சன்னதியில் குங்குமம் பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்றபோது விபூதி பிரசாதம் தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல் ஏற்பட்டது.

உடனே, அதை பரிசோதனை செய்தாராம் சார்லஸ் டபிள்யூ. லெட்பீட்டர். மீனாட்சி அம்மனின் குங்குமத்திலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார் அவ்வறிஞர். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம்! எனத் தான் எழுதிய ‘தி இன்னர் லைப்’ என்ற புத்தகத்தில் அவர் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். அது என்னவென்றால், சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தாராம்; அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனாராம் அவ்வறிஞர். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை! என்று அவர் எழுதி வைத்திருக்கிறார் அவர் புத்தகத்தில்.

எனவே மீனாட்சி அம்மனின் பிரசாதமான குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்காமல், கவனமாகப் பயன்படுத்துவோம். அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். இதனால் மீனாட்சி அன்னையின் அருள் என்றென்றும் நம்மிடம் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

மீனாட்சி அம்மன் ஸ்லோகம்:

ஓம் உந்நித்ரியை வித்மஹே
ஸுந்தப ப்ரியாயை தீமஹி
தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத்

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மீனாட்சி அம்மனின் குங்குமம் எட்டுக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிப்பதன் பலனாக பெண்களுக்கு அழகு கூடும், அற்புதமான கணவன் அமைவார், வீட்டில் சுபிட்சம் பெருகும், மன நிம்மதி அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − fourteen =

Most Popular