ஆன்மீக கதை: பக்தி

72

ஆன்மீக கதை: பக்தி

ஒர் ஊரில் ஒருவர் நெசவு தொழிலாளி சிவத்தின் மீது பக்தியுடன் கூடிய ஒழுக்கத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருடைய பக்தியையும் ஒழுக்கத்தையும் பார்த்த இறைவன் சிவம் அவர் கனவில் சென்று நாளை உன் வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லி மறைந்தார்.

இதனால் மனம் மகிழ்ச்சி அடைந்த சிவபக்தன் இறைவன் சிவம் கைலாயத்தில் இருப்பதால் அவருக்கு தருவதற்காக ஒரு போர்வை ஒன்று வாங்கினார். இறைவன் சிவபெருமானுக்கு அன்னம் அளிக்க அன்புடன் உணவை தயார் செய்தார். சிவபக்தர் தான் நெய்த துணியான வேட்டி துண்டு ஒன்றையும் எடுத்த வைத்தார். சிவபக்தன் இறைவன் சிவபெருமானை எதிர்பார்த்து காத்து இருக்கிறான். கொஞ்ச நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்கிறது.

சிவத்தின் வருகையை எதிர்பார்த்து வாசலிலேயே காத்து கொண்டு இருக்கிறான். அப்போது வீதி வழியே சிறுவன் ஒருவர் மழையில் நனைந்த படி நடுங்கி கொண்டு வருகிறார். இவரை பார்த்த சிவபக்தன் சிவத்திற்காக வைத்திருந்த போர்வையை மழையால் நடுங்கிய சிறுவனிடம் கொடுத்து விடுகிறார். மழை நின்றது நேரம் சென்று கொண்டு இருந்தது இறைவன் சிவபெருமான் வருகைக்காக காத்து இருந்தான்.

அப்போது அவர் வீட்டின் வாசலில் வந்து நின்ற தள்ளாடிய பெரியவர் கடுமையாக பசிக்கிறது தங்களிடம் உணவு இருந்தால் கொஞ்சம் தாருங்கள் என்று சிவ பக்தரிடம் கேட்கிறார். சிவபக்தர் சிவத்திற்காக செய்த உணவை வயதான பெரியவருக்கு கொடுக்கிறார். வயதான பெரியவர் உணவு அருந்தி விட்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்தி விட்டு சென்றார். நேரம் சென்று கொண்டு இருந்தது சிவ பெருமானின் வருகையை காத்து இருந்தான் பக்தன் .

சிவபக்தரின் வீட்டு வழியாக மன நலம் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞன் சென்று கொண்டு இருந்தான் . அவன் உடுத்திய உடைகள் கிழிந்து இருந்தன . இதை பார்த்த சிவபக்தன் இறைவன் சிவத்திற்காக வைத்து இருந்த வேட்டியும் துண்டையும் மன நலம் பாதித்த இளைஞருக்கு உடுத்தினார். இறைவன் வருகைக்காக காத்து இருந்த சிவபக்தன் சூரியனும் மறைய தொடங்கியது ஆனால் இறைவன் வராததை என்னி மன வருத்தத்துடன் இருந்தான். இறைவன் சிவபெருமான் என்னை ஏமாற்றி விட்டாரா என்று மன வருத்தத்தில் இருந்த போது அவர் வீட்டின் கதவை இறைவன் சிவபெருமான் தட்டினார்.

கதவை திறந்த சிவபக்தனுக்கு இறைவன் சிவபெருமான் பிரம்மாண்டமான நிஜ சொரூபத்தில் காட்சி தந்தார். சிவபக்தன் இறைவன் சிவத்திடம் ஐயா தங்கள் வருகைக்காக காத்து இருந்து தங்கள் வராதாதல் வருத்தம் அடைந்தேன் என்றார். சிவபெருமான் சிவபக்தரிடம் எடுத்துரைக்கிறார் நான் தங்கள் வீட்டிற்கு மூன்று முறை வந்துள்ளேன். முதலில் மழையில் நனைந்த சிறுவனாக வந்து உன்னிடம் போர்வையை பெற்றேன்.

இரண்டாவாதாக கடும் பசியில் தள்ளாடிய பெரியவராக வந்து உணவு அருந்தினேன். மூன்றாவாதாக மனநலம் குன்றிய இளைஞராக வந்து உன்னிடம் வேட்டியும் துண்டும் உடுத்திக் கொண்டேன் என்றார். உன் அன்பினால் மகிழ்ச்சி அடைந்தேன் . இப்பிறவியை கடந்து எம் திருவடியை அடைவாய் என்று சிவபெருமான் ஆசி வழங்கினார். அன்பே சிவம்.