ஶ்ரீந்ருஸிம்ம்ர்_அவதார_தத்துவம் !
*”அதர்மம் எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதாரம் எடுக்கிறேன் “,*
இது கிருஷ்ண பகவான் மஹாபாரத யுத்தத்தின்போது வீரஅர்ஜுனனுக்கு கீதையின் மூலம் கூறியது. இது மிகப் பிரபலமான வரிகள் மட்டுமல்ல, மிக மிக
உண்மையான வரிகளும் கூட. ஸ்ரீமந்நாராயணன் எடுத்த அவதாரங்கள் பத்து. தசாவதாரம் எனப்படும் இந்த
அவதாரங்கள் ஒவ்வொன்றுக்கும் மிகச்சரியான மற்றும் சிறப்பான காரணங்கள் உண்டு. துஷ்ட நிக்ரஹம்
செய்து இஷ்ட பரிபாலனம் அமைய,பூலோக மக்களுக்கு உதவவே வைகுண்டநாதன் பல அவதாரங்களை எடுத்தார்.
ஒரு சாதாரன மனிதனாக வாழ்ந்து காட்டி, உலகிற்கு தனி மனித ஒழுக்கத்தை போதித்து, தனக்குரிய கடமைகளை
நிறைவேற்றி, இறுதியில் இராவண வதம் செய்தது திரேதா யுகத்தின் ஸ்ரீராம – லக்ஷ்மண அவதாரம். மனிதசமூகத்தின்
வாழ்வியல்நெறிக்காக ” பகவத்கீதை ” எனும் அருளுரையப் போதித்து, கம்சன் -நரகாசுரன் போன்ற அரக்கர்களை அழித்து
தர்மத்தை நிலை நாட்டியது துவாபர யுகத்தின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்.இப்படி பகவான் எடுத்த தசாவதாரங்களுள் ” ஸ்ரீ ந்ருஸிம்ம்ர் ”
எனும் சிங்கமுகப் பெருமானாக பகவான் எடுத்த அவதாரம் தனிச்சிறப்பு வாய்ந்தது.
காரணம்,பிறப்பிறபின்றி ஒருநொடிப்பொழுதிலேதோன்றி, பக்தனான பிரகலாதனைக்
காப்பாற்றுவதற்கும், உண்மையானபக்தியுடன் வணங்குபவர்களை தான்கைவிடுவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்துவத்ற்குமாக எடுத்த சிறப்பான அவதாரமாகும் இது.
சில நாழிகைகளுக்கு மட்டுமே பூவுலகில் கோலோச்சிய அவதாரம் இது. இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்
( ” அந்தர்யாமி” -எங்கும் நிறைந்தவர் ) என்ற பேருண்மையை அனுபவப்பூர்வமாக வெளிப்படுத்திய அவதாரம் இது.அக்கிரமத்தை ஒழிக்கவேண்டுமென்றால் உக்கிரம் அவசியமாகிறது.
நல்லோர்க்குக்காலனாக இருந்த ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்ய இறைவனுக்கு உக்கிரம் தேவைப்பட்டது. பக்தபிரகலாதரின் பரிபாலனத்திற்கும்,துஷ்ட ஹிரண்ய நிக்ரஹத்திற்கும் என்றே தோன்றிய அவதாரம் ஸ்ரீ ந்ருஸிம்ம்ர் அவதாரம்.
பகவான், பகைவனான ஹிரண்யகசிபுவிடம் சீற்றமும்,அன்பான பிரகலாதரிடம் அருளும் ஒரே சமயத்தில் ஏற்று, கூடாதவைகளைக்
கூடப்பெற்ற சிறப்புடையது இந்த அவதாரம். இரண்யாசுரனை ஆச்சரியமான தோற்றத்துடன் வதம் செய்து பால்ய பக்தன் பிரகலாதனை ஆழ்வாராக்கிப்
பெருமைப்படுத்திய அவதாரம் ஶ்ரீ ந்ருஸிம்ம்ர் அவதாரம்.
ஸ்ரீ விஷ்ணுபகவானின் தசாவதாரங்களில் இந்த ஶ்ரீ ந்ருஸிம்ம அவதாரமே மஹா உக்கிரஅவதாரமாகும். மிகக்கோபமுடையவராகவும்,
வீரமுடையவராகவும், எங்கும் நீக்கமற நிறைந்தவராகவும், எல்லாப்பக்கங்களிலும் ஒளி வீசுபவராகவும்,எமனுக்கே எமனாக நிற்பவராகவும், நரனும் சிங்கமுகமும் கலந்த உருவம்கொண்டவராகவும்விளங்குபவர் ஸ்ரீ ந்ருஸிம்ம பெருமான். இதையே
திருமங்கையாழ்வார் பின்வருமாறு வருணிக்கிறார்.பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்வாயிலோ ராயிர நாமம் ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்கொன்று
மோர்பொறுப்பிலனாகிபிள்ளையைச் சீறி வெகுண்டு
தூண்புடைப்பப்பிறையெற் றனல்விழிப் பேழ்வாய்
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்திருவல்லிக் கேணிகண் டேனே. ”
அது என்ன சிங்க முகம் என்று ஒரு கேள்வி எழும் ! இரணியன் தூணை எட்டி உதைக்கும்முன் பிரகலாதனை நோக்கி, ” இந்தத்தூணில் உன் ஹரி இல்லையெனில்,சிங்கம் யானையைக் கொல்வதுபோல் நான் உன்னைக்கொல்வேன் ” என்றான்.
ஆகவே பகவான் தானே சிங்கமுகத்துடன் தனது பக்தன் பிரகலாதனுக்காக ஒரேநொடியில் தூணைப்பிளந்துகொண்டு
அவதரித்தார். இரணியன் பெற்றவரங்களுக்குச்சற்றும்பொருந்தாதஒருஉருவத்தைஎடுத்துயானையைக்கொல்வதுபோல்அசுரனைவதம்செய்து,
அதர்மத்தை அழித்து தர்மத்தைக்காத்தார் பகவான் ஸ்ரீ விஷ்ணு. ஶ்ரீந்ருஸிம்ஹ பூர்வதாபநீ யோபநிஷத் :
ஶ்ரீந்ருஸிம்ம மூர்த்தியின்
உபாசனையையும்
ஶ்ரீ ந்ருஸிம்ம மஹா சக்கிரத்தைப் பற்றியும் கூறுகிறது.
ஆதிசங்கரர் இதற்குப்பாஷயம் எழுதியுள்ளார். இதில் ஶ்ரீ ந்ருஸிம்ம ரூபமும் அனுஷ்டுப் சந்தஸ்கொண்ட மூலமந்திரமும் அதன்
அக்ஷ்ரங்களைப் பிரித்து எடுத்துக் காட்டும் ஸாரமாகவும் சொல்லப்படிருக்கிறது. அவை உக்கிரம், வீரம், மஹாவிஷ்ணும்,
ஜ்வலந்தம், சர்வதோமுகம், ந்ருசிம்ஹம், பீஷணம், பத்ரம், ம்ருத்யும்ருதம், நமாமி, சுகம் ஆகியனவாகும்.
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !