சனி மகா பிரதோஷம், சிவ வழிபாடு, நந்தி வழிபாடு!
சனி மகா பிரதோஷம் சிவாலயங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலகால விஷயத்தை அருந்திய நாள் சனிக்கிழமை என்பதால் சனி மகா பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி மகா பிரதோஷ தினத்தன்று இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும், அதனால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரோதத்தை விட சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதம் இருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் கோயிலில் நடைபெறும் பிரதோஷ பூஜைகள் கலந்து கொண்டால், ஒரு ஆண்டு சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும். இந்நிலையில் சனி மகா பிரதோஷ தினத்தன்று சிவன் கோயிலுக்கு சென்றால் ஐந்து ஆண்டுகளாக தினமும் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்று சிவபுராணம் கூறுகிறது.
வழிபாடு முறை:
சனி பிரதோஷ தினத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து, சிவபெருமானின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு காலை முதல் மாலை 06.30 மணி வரை உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமையில் வரும் சனி மகா பிரதோஷத்தின் போது விரதம் இருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.பிரதோஷ நேரத்தில் நந்தி பாகம் அவனுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.
பிரதோஷ நேரம் தொடங்குகின்ற மாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு சென்று நந்திக்கும், சிவபெருமானுக்கும் அபிஷேகம் நடைபெறும் போது “ ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை கூறி வழிபட வேண்டும். ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை கூறிய பின்பு, லிங்காஷ்டகம், தேவார, திருவாசகம் போன்றவற்றை படிக்க வேண்டும்.
தேவர்களையும் மானிடர்களையும் காக்கும் வகையில் ஆலகால விஷயத்தை அருந்திய இறைவன், திரயோதசி தினத்தன்று மாலை வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடனம் ஆடுவதாக ஐதீகம். எனவே பிரதோஷ காலத்தில் நந்தியின் இரண்டு கொம்பிற்கும் இடையே சிவபெருமானை பார்த்து தரிசிப்பது சிறப்பானது.
சனி மகா பிரதோஷ பலன்கள்:
சனி மகா பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வதால் முக்தி அடையாத முன்னோர்களுக்கு முக்தி கிடைத்திட வழி கிடைக்கும். சனி பகவானால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் நீங்கும். கிரக தோஷத்தால் ஏற்படும் அனைத்து பாவங்களும் நீங்கி சிவபெருமான் அருளால் புண்ணியம் கிடைக்கும்.
ஏழரை சனி, அஷ்டம சனி நடப்பவர்கள், சனிநாள் ஏற்படும் துன்பத்தைப் போக்குவதற்கு கண்டிப்பாக சனிக்கிழமை பிரதோஷ நேரத்தில், சிவபெருமானின் மந்திரங்களை உச்சரித்து வழிபாடு மேற்கொள்ள கெடுதி பலன்கள் படிப்படியாக குறையும்.
இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிடைக்கும். பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகலதோஷங்களும் விலகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும்., வருமானம் அதிகரிக்கும். கடன், தரித்திரம் முதலான பொருளாதார சிக்கல்களும், பிரச்சனைகளும் நீங்கும். மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.
சிவபெருமானை தரிசனம் செய்வதால் அனைத்து பாவங்களும் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பதால் சிவபெருமானுக்கு விருப்பமான ருத்ராட்சம், சிவபுராணம் நூல், நாட்டுப்பசு விபூதி போன்றவற்றை சிவ பக்தர்களுக்கு வாங்கிக் கொடுப்பது மகத்தான புண்ணியங்களை கொடுக்கும்.
