சகஸ்ரநாமத்திலே சமயபுரத்தாள்.

325

மறைத்து கூறி தெய்வம் இன்னது என்று கூறியவைகளே வேதங்கள் … ஊரில் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய மூத்தவர்கள் பெயரை யாரும் உச்சரிப்பதில்லை… அதனையே சகஸ்ரநாம வாக்தேவதைகளும் பின்பற்றினர் …

பண்டாசுர வதம் முடித்து அன்னையின் ரௌத்திரம் அடங்கும் வேளையில் பஞ்ச பெரும் பிரம்ஹ வடிவங்கள் ராஜசிம்மாசனம் ஏற்படுத்தி ரக்தவர்ண ஸ்வரூபிண்யை பரிபாலன கோலத்தில் காமேஸ்வர மஞ்சத்தில் அமர்ந்தவளாய் தன் விபூதி துகளில் உதித்த வசின்யாதி வாக்தேவதைகளின் திருவாய்கள் மலர்ந்தருளும் ஶ்ரீ மகா சகஸ்ரநாமம் கேட்டு பூரிப்படைந்து சாந்தமடைகிறாள் பராசக்தி … அவளின் அடிவயிற்றில் பால்வார்ப்பது போல , ” அம்மா … ஶ்ரீ மாதா ” என்று சகஸ்ரநாமம் ஸ்தோத்திர மாலை ஒலிக்கும் வேளையில் தாய்மையின் உச்சிநிலையில் லயித்தவளாய் இருக்க …. அவளின் நாமங்களை வாக்தேவியர் சிலவற்றை நேரிடையாக பலவற்றை சற்றே மறைத்து கூறினர் …

ஶ்ரீ சாக்தம் ஏற்று ஶ்ரீவித்யா மார்க்கமாக பூர்ண திருவடிவான லலிதா மகா திரிபுர சுந்தர்யை ஒவ்வொருவரின் நாவில் நாமா ஒலிக்கும் போதும் ஆக்ஞாபீடத்தில் ஆட்சிசெய்பவள் அந்த திருநாமாவுக்குரிய வடிவத்தில் மனதில் திருவடிவம் தாங்கி , ஜ்வலிக்கின்றாள்…

அப்பேற்பட்ட சகஸ்ரநாமம் ,சாட்ஷாத் பரதேவதை ஸ்வரூபமான லலிதா தேவியை #காமாக்ஷி என சட்டென்று வெளியிடையாக ஒலித்தது … அவள் அண்டசராசரங்களுக்கு தாயாயினும் காஞ்சி தேசத்தில் பாலை தானே .. கொஞ்சி விளையாடும் லீலா வினோதினி …அல்லவா

ஆனால் அதிதீர்க்க நித்ய சுமங்கலி ஸ்வரூபிணியான மதுராபுரி நாயகியை அப்படி ஒலிக்கவில்லை … அவள் பழுத்த சுவாசினி…வயதில் லோகமாதா.. அண்டங்களுக்கு
முன் உதித்த அன்னையை #மீனாட்சி என்று தலையில் அடித்தாற்போல் கூறாமல் இரண்டு முறைகள் மறைத்து மறைத்து கூறப்படுகிறது ..

#வக்த்ரலக்ஷ்மீ பரீவாகசலந் #மீனாப__லோசனா – மீன்கள் போன்ற பார்வையை உடையவள் என்று ஒருமுறையும்

#கதம்பவனவாசினி – மதுராபுரி க்ஷேத்திரம் ஆதிகாலத்தில் கதம்பவனக்காடாக இருந்த காரணத்தால் அன்னை ஶ்ரீ மீனாக்ஷிக்கு #கடம்பவனக்குயில் என்றும் பெயர் இருந்தது …அதனைதான் சகஸ்ரநாமத்திலும் கடம்பமர காடுகளில் வாசம் புரிபபவள்… என்று மறுமுறையும் பாடியிருக்கிறது….

இவை இருப்பினும் … பின் பல்நூறு ஆண்டுகள் கழித்து தோன்றிய கோவில் #சமயபுரம் … ஜகத்ரட்சனீ ஶ்ரீ மகா மாரியம்மன் தேவியின் வடிவம் பெருமையை சகஸ்ரநாமம் ஆதிகாலத்தினிலேயே ஒழித்து புகழ்ந்து உள்ளாற்போல் ஒரு ஸ்லோகமே உண்டு…

ஆம் … சகஸ்ரநாமத்தில் 65வது ஸ்லோகம்..

#பத்மாஸநா பகவதீ பத்மநாப ஸஹோதரீ || 65

உந்மேஷ நிமிஷோத்பந்ந விபந்ந புவநாவளீ |
ஸஹஸ்ரசீர்ஷ வதநா #ஸஹஸ்ராகஷீ ஸஹஸ்ரபாத் || 66

பத்மாசனா :
” தாமரை மலர் அமர்த்திருக்கோலம் ”
ஆதிகாலத்தில் ஶ்ரீரங்கம் க்ஷேத்திரத்தில் நித்யகன்னிகையாக #தாமரைமலர்பீடத்தில் அமர்ந்தவளாய் பூலோக வைகுண்ட ஸ்தானத்தில் அருள் மழை பொழிந்தவள் ஶ்ரீ #சமயபுரத்தாள்…

பகவதீ__பத்மநாபசகோதரீ :

ஆயிரமாண்டு காலமாக மன்னர் காலம்துவங்கி பங்குனி பெருவிழா , ஆடிப்பெருக்கு , தைப்பூச பிரம்மோற்சவம் அனைத்திலும் தம் சோதரனான ஶ்ரீரங்கம் ரங்கராஜன் திருக்கோயில் சீதனத்தை பெற்று மகிழ்பவள் இந்த #சமயபுரத்தினாள்
இவளே பத்மநாபன் சகோதரி…

உந்மேஷ_நிமிஷோத்பந்ந_விபந்ந_புவநாவளீ

தன் கண் அசைவுகளை கொண்டு கண் விழித்திருந்து சிருஷ்டியும் , கண்கள் இமைத்தால் பிரளயமும் நிகழ்த்திய பராசக்தி … சமயபுரம் சேத்திரத்தில் தேவியின் கண்கள் அத்தனை ஒளிபொருந்தியவை… இத்தகைய பெரும் கற்பக்கிரக திருமேனியும் நெடுங்கண்களும் பூமியில் வேறெங்கும் இல்லை
( சக்தி பீடங்கள் தோன்றிய போது கண் விழுந்த இடம் சமயபுரம் என்றும் கூற்றுக்கள் உள்ளன )

#சகஸ்ர_சீர்ஷ_வதனா_சகஸ்ராக்ஷி….
நாமங்களில் மிகவும் வெளிப்படையாக அன்னை சமயபுரம் உறை மகாமாரியம்மன் வடிவத்தை ஒலிக்கும் அத்புதமான நாமாவாகும்… “#ஆயிரங்கண்ணுடையாள் ” என்றால் அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும் அது ஶ்ரீ சமயபுரம் மகாமாயை திருநாமம் என்று….

ஆயிரம் சீரான நட்சத்திர வரிசை போன்ற புருவங்களை உடையவளே…

சகஸ்ராக்ஷி – ஆயிரம் கண்கள் உடையவள் ..