Tuesday, October 24, 2023
HomeArthamulla Aanmeegamசனி பகவானுக்குரிய கோயில்கள்!

சனி பகவானுக்குரிய கோயில்கள்!

சனி பகவானுக்குரிய கோயில்கள்!

ஏழரை சனி மூலமாக வாழ்க்கையின் அனுபவத்தை கற்றுக் கொடுக்கக் கூடியவர் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சனீஸ்வரன் தான். அப்படிப்பட்ட சனீஸ்வரன் கோயில் கொண்டுள்ள தலங்கள் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்:

இந்தியாவில் புகழ்பெற்ற சனீஸ்வரத் தலங்களில் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தலத்தில் சனீஸ்வரனுக்கென தனியாக சன்னதி காணப்படுகிறது. காசியில் சிவபெருமானை வழிபட்ட பிறகு சனீஸ்வரன் இங்கு வந்து வழிபட்டதாக கருதப்படுகிறது.

குச்சனூர் சனீஸ்வரன் கோயில்:

தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் சனீஸ்வரன் சுயம்புவாக உள்ளார். இக்கோயிலின் மூலவராக சனீஸ்வரன் உள்ளது சிறப்பாகும்.

திருகோணமலை சனீஸ்வரன் கோயில்:

இலங்கையில் சனீஸ்வரன் கோயில் திருகோணமலை நகரத்தின் மடத்தடி என்றழைக்கப்படும் இடத்தில் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இவ்வாலயம் 1885 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டது.

லோகநாயக சனீஸ்வரன் கோயில்:

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் எனும் ஊரில் லோக நாயக சனீஸ்வரன் கோயில் உள்ளது. இங்கு உலோகத்தினால் ஆன சனீஸ்வரின் சிலை மூலவராக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சனி ஷிங்கனாபூர், மகாராஷ்டிரா:

இந்தக் கோயில் மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள நேவாசா தாலுகாவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் சுவர்கள் அல்லது கூரை இல்லாததால் மிகவும் தனித்துவமாக இருக்கிறது.

மேலும் ஒரு மேடையில் 5 அடி உயரக் கருப்பு கல் உள்ளது. இது சனி பகவானாக வழிபடப்படுகிறது. சோனாய் என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் மேடை கிராமத்தின் நடுவில் அமைந்துள்ளது.

சனிதாம் கோயில், டெல்லி:

டெல்லியில் சத்தர்ப்பூர் சாலையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பிரபலமான ஒரு சனி பகவான் கோயில். இந்த கோவிலில் உலகின் மிக உயரமான சனிபகவான் சிலை உள்ளது.

யெர்டனூர் சனி கோயில், தெலுங்கானா

இந்தக் கோயில் தெலுங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 20 அடி உயர சனிபகவான் சிலை உள்ளது.

மண்டபள்ளி மாண்டேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரா

இந்த கோவில் ஆந்திராவின் மடப்பள்ளியில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரு சனிபகவான் சன்னதி உள்ளது.

ஸ்ரீசனி கோயில், தித்வாலா

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள தித்வாலாவில் அமைந்துள்ள இந்த சனி கோயில் சனி பகவானின் மற்றொரு புகழ் பெற்ற கோயிலாகும். இது தித்வால கணேஷா கோயில் மற்றும் ஸ்ரீ சுவாமி சமர்த் மாதா அருகே அமைந்துள்ளது.

பன்னஞ்சே ஸ்ரீ சனி ஷேத்ரா, கர்நாடகா

இந்த கோயில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள பன்னஞ்சியில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் 23 அடி உயர சனிபகவான் சிலை உள்ளது.

சனி மந்திர், இந்தூர்

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் காணப்படும் இந்த கோவில் சனி பகவானால் அவருக்காக கோவில் கட்ட சொன்ன இடம்.

ஒருமுறை சனி பகவான் திவாரி கனவில் தோன்றி சனி பகவானின் சிலையை கண்டுபிடிக்க மலையில் தோண்ட சொன்னாராம். திவாரி பகவானிடம் எனக்கு கண் தெரியாது நான் எப்படித் தோன்ற முடியும் என கேட்டாராம்.

சனி பகவான் திவாரியின் கண்களைத் திறக்க சொன்னாராம். அவருக்கு கண் பார்வை கிடைத்ததாம். இந்த அதிசயத்திற்கு பிறகு திவாரி சனி பகவான் பக்தராகவே மாறியிருக்கிறார். சனி பகவான் சொன்ன படி மலையின் அடியில் சனி பகவான் சிலையையும் கண்டாராம். அன்றிலிருந்து இந்த கோயிலில் இருந்து பிரபலமாகி விட்டது.

சனி தேவாலயம், மும்பை:

இந்த கோயில் மும்பைக்கு அருகில் உள்ள தியோனார் சிலைக்கு அருகில் அமைந்துள்ளது. இது சனேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. சனி பகவானின் 7 அடி உயரம் உள்ள கருப்பு சிலை இங்கு உள்ளது.

ஆரத்தி முடிந்ததும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை கோவிலில் மிகவும் விசித்திரமான சம்பவம் நிகழ்கிறது. இந்த சமயத்தில் சனி பகவான் கோயிலின் பிரதான பூசாரி மீது இறங்குகிறார். பக்தர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்கிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + twelve =

Most Popular