Wednesday, October 18, 2023
HomeArthamulla Aanmeegamசனி மஹா பிரதோஷம்: சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி கிடையாது!

சனி மஹா பிரதோஷம்: சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி கிடையாது!

சனி மஹா பிரதோஷம்: சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி கிடையாது!

சிவனுக்கு உகந்த காலம் பிரதோஷம் காலம். பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுபவர்களுக்கு சகல, சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கி, புண்ணியங்கள் சேர பிரதோஷ வேளையில் சிவனுக்கு வில்வம் கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு. அந்த வகையில் சனிக்கிழமை சனி பிரதோஷ நாள். இந்த நாளில் சிவனை இப்படி வழிபாடு செய்தால் அடுத்த பிறவி எடுக்காத அளவிற்கு நமக்கு முக்தி கிடைக்குமாம்.

சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மஹா பிரதோஷம். இந்த நாளில் சிவனை தரிசனம் செய்தால் எல்லையில்ல இன்பம் சேரும். தெரிந்தோ, தெரியாமலோ சிவபெருமானை தரிசனம் செய்து வில்வ இலையால் அர்ச்சித்து விடுபவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்கிறது சிவபுராணம். ஒவ்வொரு சனி பிரதோஷ நாளன்றும் நாம் முறையாக சிவனை வழிபட என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

இந்த சனி பிரதோஷ நாளில் தான தர்மங்கள் செய்யலாம். இன்றைய நாளில் நீங்கள் செய்யும் சிறு தானம் கூட பெருமளவு பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேக பொருளை உங்களால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுத்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த நாளில் நந்தி பகவானுக்கு சிறப்பான விசேஷ பூஜைகள் நடைபெறும். நந்தி பகவானுக்கு பிரதோஷ காலத்தில் அருகம்புல், வில்வ இலை மாலை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி மற்றும் வெல்லம் கலந்து நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்தால் பிரார்த்தனைகள் யாவும் தடையின்றி நடக்கும்.

இந்த நாளில் சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்ள வேண்டும். சோமசூக்த பிரதட்சணம் என்பது நந்தி பகவானை வணங்கி பின்னர் சிவனுக்கு அபிஷேகம் செய்த நீரானது வெளியில் செல்லும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடம் வரை சென்று வழிபட வேண்டும். பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பிச் சென்று சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும். பின்னர் திரும்பவும் கோமுகி தீர்த்தம் இருக்கும் இடத்திற்கு சென்று வணங்க வேண்டும். இப்படி சோமசூக்த பிரதட்சணம் மேற்கொள்பவர்களுக்கு கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை பிரதோஷ பிரதக்ஷணம் என்றும் அழைப்பது உண்டு. இந்த வரிசையில் 20 வகையான பிரதோஷங்கள் இருக்கின்றன.

இந்த சனிப்பிரதோஷ நாளில் அடுத்த பிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள் இந்தப் பிறவியில் புண்ணியத்தை சேர்க்கும் வகையில் தான, தர்மங்களை செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலமாக அவர்களுக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையில் சிவன் கோயிலுக்கு சென்று சிவனை நினைத்து மனதார வழிபட வேண்டும். அப்படி வழிபடுவோருக்கு வேண்டிய வரன் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 8 =

Most Popular