குடிமல்லம் பழமையான சிவன் கோயில்!
திருப்பதி கோயிலுக்கு சென்றால், இங்கு சென்று வாருங்கள். அப்படி சென்றால் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும். உங்களது கர்ம வினை முற்றிலும் நீங்க கூடிய வாய்ப்பு கிடைக்கும். ரேணிகுண்டாவிலிருந்து 12 கிமீ தொலைவிலுள்ள குடிமல்லம் என்ற கிராமத்திலுள்ள பரசு ராமேஸ்வர கோயிலில் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. லிங்கம் 5 அடி உயரமும், 1 அடி தடிமனும் கொண்டதாக அமைந்துள்ளது.
லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியிலுள்ள மொட்டு ஒரு அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரியும் (பரசு) வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
பழமையான சிவலிங்கம்:-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பாவில் உள்ளது. அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. குடிமல்லம் என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய வரலாற்றின் படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர் தான் இது.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம். ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு முன்னேற விரும்புவர்கள் கண்டிப்பாக இந்த சிவன் கோயிலில் வழிபாடு செய்யலாம். மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர். அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்து விட்டு வர வேண்டும்.
