7 பிறவி என்றால் என்ன?
கடவுள் மனிதனாக பிறப்பது
நீர் வாழ்வன மனிதனாக பிறப்பது
மனிதன் மனிதனாக பிறப்பது
மிருகம் மனிதனாக பிறப்பது
பறவைகள் மனிதனாக பிறப்பது
புளு பூச்சிகள் மனிதனாக பிறப்பது
மரம் செடி, கொடிகள் மனிதனாக பிறப்பது
இப்படியாக மனித பிறவிகள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அந்தப் பிறவிகளில் அவர்கள் செய்யக் கூடிய பாவ, புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப மாறி மாறி பிறந்து, இறந்து வாழ்ந்து வருகின்றோம்.
கடவுள் மனிதனாக பிறப்பது:
கடவுள் மனிதனாக பிறந்தால் நீதி தர்மங்களை நிலைநாட்டி, கோயில்கள் எழுப்பி, அங்கு தான தர்மங்களை செய்வர். உலக ஜீவராசிகள் உயிர் வாழ தவம் தியானம் யாகம் என்று செய்வார்.
நீர் வாழ்வன மனிதனாக பிறப்பது:
நீர்வாழ்வன மனிதனாகப் பிறந்தால் அடுத்தவரை பழித்தல், நய வஞ்சகம் செய்தல், புறம் பேசுதல், இழிவாய் பேசுவது, குற்றச் செயல்கள் செய்வது இது போன்றவைகளை செய்வார்கள்.
மனிதன் மனிதனாக பிறப்பது:
மனிதன் மனிதனாகப் பிறந்தவர் நீதி நியாயமாய் வாழ்வார். தான தர்மங்களை செய்வார். மரங்களை நடுவார். மிருகம் பறவைகளுக்கு பசியினை போக்க வழிவகை செய்வர்.
மிருகம் மனிதனாக பிறப்பது:
மிருகம் மனிதனாகப் பிறப்பது எந்த நேரமும் உழைப்பான். ஆனால், அதனை சரிவர பயன்படுத்தாமல் வீண் செய்து விடுவார். நீதி நியாயம் எதையும் பார்க்காமல் எவர் பொருளானாலும் எடுப்பார்கள். மற்றவர் மனதை துன்புறுத்துவர்.
பறவைகள் மனிதனாக பிறப்பது:
பறவைகள் மனிதனாகப் பிறப்பவன் எப்போது உழைக்காமலே அடுத்தவர் பொருளை பறிக்கவே திட்டமிடுவார். மிருகம் பறவைகளை உயிரென்றும் பாராது அறுத்து உண்பர். நீநி தர்மம் எதையும் செய்யமாட்டார்கள்.
புளு பூச்சிகள் மனிதனாக பிறப்பது:
புளுபூச்சி மனிதனாகப் பிறந்தால் வீண்பழி போடுதல், எந்த வார்த்தையும் தவறாகவே வரும். எல்லோரையும் மகான்களையும் ஏன் கடவுளையும் கூட இழிவாகப் பேசுவார், கொலை களவும் செய்வார்கள்.
மரம் செடி மனிதனாகப் பிறந்தால்:
மரம் செடி மனிதனாகப் பிறந்தால் பூமியில் ஜடமாய் பிறந்து வாழும் எந்த வேலையும் செய்யாது, எதற்காக வாழ்வது என்றே அறியாமல், வாழும் பலவகை தவறுகளை செய்தாலும் மறந்துவிட்டு செல்வார். எதை வேண்டுமானாலும் உண்பார்கள். எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு போவார்கள்.
