திருமணத்திற்கு பொருத்தமும் மணமக்களின் வாழ்கையும்

493

பொதுவாக மக்கள் தங்களது மகன் மற்றும் மகள் திருமண வயதை தொட்டவுடன் உடனே வரனை தேட ஆரம்பித்துவிடுவார்கள் பிறகு மகனாக இருந்தாலும் சரி மகளாக இருந்தாலும் சரி அவர்களுக்கு வரனை பிடித்துவிட்டால் உடனே ஜோதிடரை அணுகி இருவரின் ஜாதகத்தை ஆய்வுசெய்து பிறகு அவர்கள் வைக்கும் கேள்வி:-

1. பையனுக்கும் பொண்ணுக்கும் “குருபலம்” இருக்கா??

2. எத்தனை பொருத்தம் இருக்கு???

3. இரண்டு பேரோட ஜாதகம் சுத்த ஜாதகமா??? அப்படி இல்லை என்றால் இது எதாவது தோஷம் இருக்கா?? அப்படி தோஷம் இருந்தா இதுக்கு என்ன பரிகாரம் பண்ணலாம்???

எதோ சொத்துகளை வைத்து பேரம் பேசுவது போல இவர்கள் ஜோதிடர்களை வருத்தெடுத்துவிடுவார்கள்இப்படி அடுக்கடுக்காக ஜோதிடர்களிடம் கேள்விகளை கேட்பார்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த பையனுக்கு இந்த பொண்ணதான் கட்டனும்ன்னு கங்கணம் கட்டி சுற்றுபவர்களும் ஒரு ரகம் சிலர் காசுபணத்திற்காக மணமக்களை கட்டிவைக்க முற்படுபவர்கள், ஒருசிலர் சுயநலம் மற்றும்
ஆதாயத்திற்காகவும், பேராசை, இப்படி ஒரு சில காரணத்திற்காக குடும்பத்தில் உள்ள பெருசுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பேச்சை கேட்டு வலுகட்டாயமான வாழ்க்கையை மணமக்களுக்கு ஏற்படுத்தி தந்துவிடுகிறார்கள் இதனால் பெரும்பாலான மணமக்களின் வாழ்கை சூனியம் அடைந்ததுதான் மிச்சம்.. குறிப்பாக தமிழகத்தில் திருமணம் ஆனவர்கள் சுமார் 70% மணமக்கள் வாழ்கை நரகமாகத்தான் இருக்கிறது மேலும் குறிப்பாக குற்றவழக்குகளை விட குடும்பம் மற்றும் அதன் சார்ந்த வழக்குகள் தான் அதிகமாக உள்ளது அதிலும் வருடத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குபதிவுகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

சரி விசியத்துக்கு வருவோம்…

திருமண வரனின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள் நற்பலன்களை வாரி வழங்கினால் போற்றுவதும் தீயபலன்களை சொல்லிட்டால் தூற்றுவதும் வாடிக்கையாகிவிட்டது மேலும் சொன்ன பலன்கள் விரைவாக நடைமுறைக்கு வரவில்லை என்றால் அவர்களை அசிங்கபடுத்துவதும் நடைமுறையில் உள்ளன இதில் இன்னும் சிலர் ஜோதிடமே பொய் என்று சொல்லி விளம்பரம் செய்பவர்களும் உண்டு இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகள் நடைமுறையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன இதற்கெல்லாம் முழு காரணம் கணித்த ஜோதிடர்களையே சாரும்… ஏனென்றால் இவர்கள் அறைகுறையாக கற்றுகொண்டு அவர்களின் சுயலாபத்திற்கான பலன்களை வாரி வழங்குவதும் வாடிக்கையாவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் அதேநேரத்தில் மணமக்களின் குடும்பத்தாரின் அலட்சியமும் காரணமாக இருக்கின்றன இதற்கு போதிய விழிப்புணர்வு இவர்களிடம் இல்லாததே முக்கிய காரணம் ஆகும்..

சரி இதற்கு என்ன வழி???

முதலில் ஜோதிடர்களுக்கு:-

1. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்கள் முதலில் லக்னம் மற்றும் அதன் சார்ந்த பலன்களை இருவரது ஜாதகத்தில் ஆய்வு செய்யவேண்டும்…

2.மேலும் ராசி மற்றும் ராசிநாதன் ஆகியோரது நிலை ஆகியவற்றை இருவரது ஜாதகத்தில் ஆய்வுசெய்து பலனை எடுக்கவேண்டும்…

3. மணமகனின் ஜாதகத்தில் 1,2,4,7, இடம் அதன் அதிபதிகள் அங்கே அமர்ந்த கிரகம் அதிபதிகளுடன் இணைந்த கிரகம் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரனின் நிலையை காணவேண்டும்…

4.மணமகளின் ஜாதகத்தை பொறுத்தவரை 1,2,4,7,8, ஆகிய இடங்கள் அதன் அதிபதிகள் மற்றும் அங்கே அமர்ந்த கிரகம் அதன் அதிபதிகளுடன் அமர்ந்த கிரகம் மற்றும் செவ்வாயின் நிலையை காணவேண்டும்…

5.மேலும் இருவரின் ஜாதகத்தில் ஜீவனகாரகன் குருபகவானின் நிலை மற்றும் ஆயுள்காரகன் சனி ஆகியோரது நிலை காணவேண்டும்…

6. பிறகு இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷ நிலவரங்களை பார்க்கவேண்டும் வெறும் செவ்வாய் ராகு கேதுவை மட்டுமே பார்க்ககூடாது மற்ற கிரகங்களின் தோஷ நிலவரங்களை பார்க்கவேண்டும்….

7.இதற்கு பரிகாரம் கேட்டால் உடனே பரிகாரத்தை சொல்லக்கூடாது இருவரின் ஜாதகத்தில் 1,5,9 மற்றும் அதன் அதிபதிகள் நிலை அங்கே அமர்ந்த கிரகம் அதன் அதிபதிகளுடன் இணைந்த கிரகம் அதன் நிலை மற்றும் இயற்கை சுபர்கள் மற்றும் சூரியபகவானின் நிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு பரிகாரத்திற்கான பலனை எடுத்து சொல்ல வேண்டும்…

8.மேலும் இருவரின் ஜாதகத்தில் தற்போதைய தசா புத்தி நிலவரங்கள் தசா நாதன் புத்தி நாதன் ஆகியோரது நிலை சேர்க்கை தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்து பலனை எடுக்கவேண்டும்

9. மேலே சொன்ன அடிப்படை விசியங்கள் ஆய்வுசெய்த பிறகே திருமண பொருத்தத்தை பார்க்கவேண்டும்…

10. இறுதியாக இருவரது ஜாதகத்தில் உள்ள கோட்சார நிலவரங்களை ஆய்வு செய்த பிறகே இருவரது ஜாதகத்திற்கான நம்மை மற்றும் தீமைக்கான பலன்களை அவர்களுக்கு எடுத்து கூறி ஒரு முடிவையும் வழிமுறைகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்…

இந்த விதிகளை 90% ஜோதிடர்கள் பின்பற்றுவதில்லை ஆகவே தான் ஜோதிடர்கள் பிரச்சனைகளுக்கும் சர்ச்சைகளிலும் சிக்கி ஆளாகிறார்கள். மேலும் மணமக்களின் வாழ்கையும் நரகம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்…

திருமணம் செய்யும் வீட்டாருக்கு சில விழிப்புணர்வு கருத்துக்கள்:-

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிராகும் ஒரு முறை விதைத்தால் அதை காலத்திற்கும் அதன் போக்கில் வளரவிட வேண்டும் மேலும் அதற்கான நீரை ஊற்றி வளர்ப்பதும் மணமக்கள் மற்றும் இருகுடும்பத்தாரின் கடமையாகும்..அதை புரிந்துகொண்டு செயல்படவேண்டும்…

அவர்களுக்கு சில வழிகள் :-

1. மகனிக்கோ அல்லது மகளுக்கோ திருமண வயது வந்துவிட்டால் உடனே வரன் பார்ப்பதை தவிர்த்து முதலில் அவர்களது விருப்பத்தை பெறவேண்டும்..

2. ஒரு வேலை அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டால் எடுத்தவுடன் வரன் பார்ப்பதை தவிர்த்துவிட்டு முதலில் ஒரு நல்ல ஜோதிடரை பார்த்து மகன் / மகள் ஜாதகத்தை தந்து திருமணத்திற்கான வரன் தேடுவதற்கான காலநிலவரங்களை கேட்டு ஆராயவேண்டும்…

3.பிறகு ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி செயல்படவேண்டும் மகன்/மகள் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை கேட்டு அதன் பிறகு வரன்களை பார்க்கவேண்டும்…

4.பிறகு மகள் / மகனுக்கு பிடித்துவிட்டால் அவர்களது ஜாதகத்தை எடுத்துகொண்டு ஜோதிடரை அணுகி இருவரது ஜாதகத்தை மேலே குறிய விதிகளின் படி ஜோதிடர்கள் ஆய்வு செய்த பிறகு அவர்களது வழிகாட்டுதலின் படி திருமணத்திற்கான முடிவை எடுக்கவேண்டும்…

5. இருவரது ஜாதமும் ஒத்துபோனால் தாராளமாக திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்யலாம் அதற்கு முன் ஜோதிடர்களிடம் முகூர்த்த நாளை குறித்த பிறகு ஆலோசனை செய்து முடிவுக்கு வரவேண்டும்…

6. மணமகன்/ மணமகள் வீட்டார் குடும்பம் மற்றும் அவர்களது பின்னணி மற்றும் அவர்களது இதர நிலவரங்கள் தற்போதைய நிலவரங்களை தீர விசாரித்து ஆலோசனை செய்த பிறகு திருமணத்திற்கான ஏற்படுகளை துவங்கி இருவருக்கும் திருமணம் செய்யவேண்டும்…

7. ஜாதகம் ஒத்துபோகவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கையை இருவீட்டாரும் எடுக்கவேண்டும் இதற்கு ஜோதிடர்களின் ஆலோசனை செய்த பிறகு மேற்படி தங்களது எது சரிபடுகிறதோ அதன் படி நடக்கவேண்டும்…

8.மணமகனுக்கொ மகளுக்கோ ஒத்துபோகவில்லை என்றால் திருமண செயல்பாடுகளில் பின்வாங்கிக்கொள்வது நல்லது அவர்களின் விருப்படி மற்ற. இடத்தில் வரன் தேடுவதற்கான செயலில் இறங்கவேண்டும்… அதற்கு முன் ஜோதிடர்களின் ஆலோசனை அவசியம்…

9. ஒருவேலை மகள் / மகன் கல்யாணம் வேண்டாம் என்றால் அவர்களை வலுகட்டாயபடுத்த வேண்டாம் அதற்கான காரணத்தை ஆலோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள் இதற்கு ஜோதிடர்களின் அலோசனை மற்றும் காரணத்தை ஜாதகத்தை வைத்து ஆராய்ந்த பிறகு ஜோதிடரின் ஆலோசனை படி செயல்படவேண்டும்…

10. ஒருவேளை காதல் விவகாரம் என்றால் மேலே சொன்ன விதிமுறைகளை பின்பற்றவேண்டும்… இதற்கு இருவரது விருப்பமும் அவசியம் ஆகும்…ஜாதகம் ஒத்துபோகவில்லை என்றாலோஅல்லத் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லையென்றால் பிரசித்திபெற்ற சிவன் அல்லது பெருமாள் கோவில் இருவரையும் இறைவனுக்கு தத்துகொடுத்து அங்கே திருமணம் செய்து வைக்கலாம்…. (இரு வீட்டாரின் ஒப்புதல்படி)…. குலதெய்வ கோவிலாக இருக்கும் பட்சத்தில் திருமணத்தை தாராளமாக நடத்தாலாம்…
ஏனென்றால் மகள்/மகள் விருப்பம் அவசியம்….

ஆகவே வெறும் திருமண பொறுத்தை பார்த்து திருமணம் செய்து வைப்பதை தவிர்த்து மேலே சொன்ன விதிகளின்வபடி நடக்கவேண்டும் தாங்கள் என்னதான் உங்களது வலுகட்டாயத்துக்கோ அல்லது உங்களை விருப்பத்திகோ ஆசைப்படி திருமணம் செய்தால் அதற்கான கர்மவினையை தாங்கள் சந்திப்பீர்கள் மேலும் மகன்/மகளுக்கு விதிக்கப்பட்ட கர்மபலன் நடந்தே தீரும் நன்மையாக இருக்கும்பட்சத்தில் அதைபற்றி தாங்கள் கவலைபடதேவையில்லை அதுவே தீமை என்றால் அதற்கான கர்மபலனை இருவரும் சந்தித்தே ஆகவேண்டும் பரிகாரம் செய்தாலும் அவற்றின் தீவிரம் குறையுமே தவிர நடக்கவேண்டிய பலன் நடந்தேரும்.. அதை இருவரும்… கட்டாயம் எதிர்கொண்டே ஆகவேண்டும்…

(எ-டு)…

பத்து பொருத்தம் கொண்டு திருமணம் செய்து கொண்டவர்களின் வாழ்கை விவாகரத்து வழக்கில் நிற்பதும் இரண்டு பொருத்தம் கொண்டு திருமணம் செய்து வாழ்கையில் வெற்றி பெற்ற தம்பதிகளும் உண்டு இவையெல்லாம் இருவருக்கான பூர்வபுண்ணிய கர்மபலனாகும்….

ஆகவே வெறும் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வதை தவிர்த்துவிட்டு மேலே கூறிய விதிகளின் படி மகள் /மகன் வீட்டார்களும் மணமக்களும் புரிந்துகொண்டு செயல்படவேண்டும் அதேபோல் ஜோதிடர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொள்வது நல்லது அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது… ஏனென்றால் நல்ல வாழ்கையை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வழிகாட்டுவது நம் கடமையாகும்……

https://swasthiktv.com/madhura-gaanam-registration/