Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamவீட்டில் ஹோமங்கள் செய்வது எதற்கு ?

வீட்டில் ஹோமங்கள் செய்வது எதற்கு ?

பொதுவாகவே, பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படும் அதிகாலை வேளையில் செய்யப்படும் எல்லாஹோமங்களும் விசேஷமானவை. கூடுதல் பலன்களைத் தருபவை.

அக்னியை தூதுவனாக பாவித்து, குறிப்பிட்ட தெய்வத்துக்கு அவிர்பாகம் அனுப்பி அருள் பெறுவதே ஹோமம். இவற்றில் ஸ்ரீகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீசௌபாக்ய லட்சுமி ஹோமம். ஆகியவற்றை கண்டிப்பாகஅதிகாலையில் செய்ய வேண்டும். அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் செய்வதால் தெய்வ அருள்பரிபூரணமாகக் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

செல்வம் சேர – குபேர லட்சுமி, வியாதிகள் அகல – தன்வந்தரி பகவான், திருமண பாக்கியம் கிட்ட – ஸ்ரீகாமேஸ்வரி, குழந்தைப்பேறு கிடைக்க – சந்தான கோபால ஹோமம், வீடு வாஸ்து தோஷ நிவர்த்திக்கு – வாஸ்து சாந்தி ஹோமம், செய்வினை அகல – சுதர்சன ஹோமம், உயர்கல்வி பெற – ஸ்ரீநீல சரஸ்வதி போன்றஹோமங்களை வீட்டிலேயே செய்யலாம்.

முக்கியமாக, ஹோமங்களை மதியம் 12 மணிக்குள் முடித்து விடுவதே உத்தமம். திருமணமானவர்கள், தம்பதிசமேதராக அமர்ந்து ஹோமங்களைச் செய்வது அதிக பலன்களைத் தரும் என்கின்றனர் ஆச்சார்யப்பெருமக்கள்!

*கணபதி ஹோமங்கள்:* எல்லா மங்கள நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. புதுவேட்டில் குடிபுக. புது தொழில்தொடங்க இதைச் செய்வார்கள். இது பொதுவாக இடையூறுகள் நீங்கச் செய்யப்படுகிறது.

*சுதர்ஸன ஹோமம்* : நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறவும். எதிரிகளை வெற்றி கொள்ளவும்செய்யப்படுவது.

*நவகிரக ஹோமம்* : நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யப்படும் ஹோமம் இது.

*லட்சுமி-குபேர-ஹோமம்* : தன லாபத்துக்காகவும், வியாபார வளர்ச்சிக்காகவும் செய்யப்படுகிறது.

*சரஸ்வதி ஹோமம்* : கல்வி அறிவு பெருகச் செய்யப்படுவது.

*சண்டி ஹோமம்* : நம் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் தடைகளை அகற்றச் செய்யப்படுவது.

*ஆயுஷ்ய ஹோமம்* : நீண்ட ஆயுள் வேண்டிச் செய்வது.

*தன்வந்திரி ஹோமம்* : நோயற்ற வாழ்வு பெற செய்யப்படும் ஹோமம்.

*தில ஹோமம்* : எம பயம் நீங்க செய்யப்படுவது.

*ஆவஹந்தி ஹோமம்* : தானியம் செழிக்க விவசாயிகள் செய்யும் ஹோமம்.

*மாக ம்ருத்யுஞ்ஞய ஹோமம்* : அகால மரணத்தை வென்று நீண்ட நாள் வாழவும் எல்லாவிதமான பயங்கள்நீங்கவும் செய்யப்படுவது.

*வாஸ்து ஹோமம்* : வீட்டு பிரச்சனைகள் நீங்க பயன்படுவது.

*புருஷஸுக்த ஹோமம்* : ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிச் செய்யபடுவது.

*ஸ்ரீஸுக்த ஹோமம்* : பெண் குழந்தை பிறப்பதற்காக.

*பகவத்கீதா ஹோமம்* : வீட்டில் அமைதி நிலவ.

*சுயம்வரா பார்வதி-பரமேஸ்வரா ஹோமம்* : திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கசெய்யப்படுவது.

*சந்தான கொபால கிருஷ்ண ஹோமம்* : குழந்தை பாக்கியம் வேண்டிச் செய்யபடுவது.

*ஐக்கிய மத்திய ஹோமம்* : குடும்ப பிரச்சனைகளால் சிதறாமல் ஒற்றுமையாக இருக்கச் செய்வது.

*வித்யாவிஜய ஹோமம்* : நாம் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்க வேண்டிச் செய்யப்படுவது.

https://swasthiktv.com/madhura-gaanam-registration/

*ருண மோசன ஹோமம்* : கடன் தொல்ல தீர.

இது போல ஒவ்வொரு வேண்டுதலுக்கும் ஹோமங்கள் இருக்கின்றன. நமக்கு நன்மை வேண்டிச் செய்யப்படுவன ஹோமங்கள்.

வாழ்க வளமுடன்….

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + four =

Most Popular