விநாயகருக்குஏன் செந்தூரம் பூசப்படுகிறது?

21

பிரம்மா படைப்பு தொழிலில் ஈடுபட்ட போது சோம்பலில்
கொட்டாவி விட்டார்.
அந்த கொட்டாவியில் இருந்து சிவப்பு
நிறத்தில் அரக்கர் பிறந்தார்.
அவன் பிரம்மாவை நோக்கி கை கூப்பியபடி தந்தையே என்றார்.
நான் தங்களிடம் இருந்து நான் தோன்றியுள்ளேன்
இனி தங்களோடு தங்கள் பிள்ளையாக நான் இருப்பேன்
என சொன்னவுடன் பிரம்மன்
சம்மதிக்கவில்லை.
சரி நீங்கள் நான் கேட்கும் வரமாவது தாருங்கள் என்றான்
எனது பெயர் சிந்தூரன் என பெயரை அவனே வைத்துக்கொண்டான்.
அவன் கேட்ட வரம்
நான் யாரை கட்டிப்பிடிகிறேனோ
அவர்கள் சாம்பலாக வேண்டும் என்றார்.
சரி கொடுத்தேன் வரம் என்ற பிரம்மனை கட்டி அணைக்க சிந்தூரன் முற்பட,
பிரம்மா அவன் கைகளில் சிக்காமல் ஓட்டம் பிடித்தார்.
பார்ப்பவர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்து பஸ்பமாக்கி வந்தான்
சிந்தூரன்.
மகேஸ்வரன் என்ற மன்னர் குரு பிரகஸ்பதி பக்தன், அவரை தினமும் கோயிலில் சென்று வணங்குவான்.
குரு அவன் பக்திக்கு மகிழ்ந்து, என்னை வணங்கிய உன் சிரம் இந்த உலகத்தாரால் வணங்கப்படும் என வரமளித்தார்.
மகேஸ்வரன். ஒருநாள் அவன் தன் பரிவராங்களுடன் வீதியுலா சென்ற போது, அவ்வூருக்கு நாரதர் வந்தார்.
மன்னன் அவரைக் கவனிக்காமல் சென்றான்.
கோபமடைந்த நாரதர் அவனை அசுரனாகும்படியும், யானத்தலையுடன் திரியும்படியும், சிவனால் அத்தலை அறும்படியும் சபித்தார்.
இதன்பிறகு மகேஸ்வரன் அட்டூழியம் செய்து திரிந்தான். சிவபெருமான் அவன் சிரத்தை அறுத்தார்.
அந்தத் தலையை விநாயகர் வாங்கி பொருத்தி கொண்டார்.
அன்று முதல் கஜானர் என்ற பெயர்கொண்டார்.
ஒருமுறை அசுரனான சிந்தூரனைக் காணவந்த நாரதர், “சிந்தூரா! உனக்குச் சமமான வீரதீர பராக்கிரமசாலிகள் இம்மூவுலகிலும் இல்லை!” என்றார்.
“ஆனால், கைலாயத்தில் உமாதேவிக்கு யானை தலையோடு கஜானனர் என்று பெயரில் ஒர் குழந்தை உள்ளது.
ஞானமும், பெரும் பராக்கிரமமும் கொண்டிருக்கிறது. அவருக்கு சமமாக யாரும் எங்கேயும் கிடையாது என்று சொல்கிறார்கள்” என்று நாரதர் கூற, சிந்தூரன் மிரண்டான்.
அக்குழந்தையே தனக்கு எதிரியாக அமையலாம் என்று நினைத்தான்.
ஒரு பாலகனோடு போர் தொடுப்பது தனக்கு இழுக்கு என்று எண்ணிய சிந்தூரன்,
க்ஷேமன், குசலன் எனும் இரு அசுரர்களை கஜானனரிடம் அனுப்பினான்.
அவர்கள் இருவரும் தங்களுள் யார் பெரிய வீரர் என
தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டே விநாயகரோடு சண்டையிட வந்தனர்.
தங்களுக்குள் சண்டையிட்ட இருவரும் கணேசர் எதிரே இருப்பதை பாராமல் அவரின் மார்பில் வந்து விழுந்தனர்.
இரண்டு அரக்கர்களின் மேல் கஜானர் மோதியவுடன் அவர்களின் உடல் முழுவதும் தாங்கமுடியாத வலி, ஏற்பட்டு, துடிதுடித்து இறந்தனர்!
க்ஷேமன், குசலன் இருவரும் இறந்ததை கேள்விபட்ட சிந்தூரன்
அடுத்து குரூராசுரனை அனுப்பி வைத்தான்.
குரூராசுரன்
குழந்தையாகிய கஜானனரை மஞ்சத்தோடு வானிலே தூக்கிச் சென்றான் .
குழந்தை கஜானனர் அவ்வசுரனின் இரு காதுகளை பிடித்து தொங்கிக் கொண்டே அவன் மார்பில் தன்னிரு கால்களால் ஓங்கி உதைத்தார்.
அவன் இறந்தே போனான்
சிந்தூரன் அசரவில்லை.
பாலாசுரன், வியோமாசுரன், என அடுத்தடுத்து அனுப்பினான்.
அவர்களும் இறந்து போகவே,
சிந்தூரன், தானே ஒரு படையுடன்
கஜானனரோடு சண்டையிட வந்தான்.
விநாயகரிடம் “
சிறிய குழந்தையான உன்னோடு
நான் சண்டையிட மனம் வரவில்லை.
அழகான உன் உரு கண்டவுடன் உன்னை
கொல்ல மனம் வரவில்லை. குழந்தையான நீ, உன் அன்னையிடம் பால் அருந்திவிட்டு முற்றத்தில் போய் விளையாடு” என்று ஏளனமாகப் பேசினான்.
“சிந்தூரா! என் சக்தி உனக்கு தெரியாதல்லவா
இப்போது பார்!” என்று கூறிய கஜானனர் விஸ்வரூபம் எடுத்தார்.
மூவுலகங்களும் தமக்குள் அடங்கும்படியாக காட்சி தந்தார் கஜானனர்.
அதைக் கண்ட சிந்தூரன் அஞ்சி நடுங்கினான்.
பயந்து நின்ற சிந்தூரனை, கணேசர் தனது நீண்ட தும்பிக்கையால் வாறியெடுத்து நசுக்கி தமது மத்தகத்தில் பூசிக்கொண்டார். மத்தகத்தில் சாந்தாக மாறிவிட்ட அவன் உயிர், அவருடைய திருவடிகளை அடைந்து பேரானந்த நிலைபெற்றது.
அதன்பின் மீண்டும் பாலகனாகக் காட்சி அளித்தார் கஜானனர்.
இன்றும்
விநாயகர் உடல் முழுவதுமே செந்தூரம் பூசுவதன் காரணம் இதுவே.