விநாயகரின் வினோதப் பெயர்கள்!

35

விநாயகரின் வினோதப் பெயர்கள்!

திருக்கச்சூர் – கருக்கடி விநாயகர்
நாகப்பட்டினம் – மாவடிப் பிள்ளையார்
வயலூர் – கீழைப் பிள்ளையார்
சுசீந்திரம் – உதயமார்த்தாண்ட விநாயகர்
திருமுருகன்பூண்டி – கூப்பிடுபிள்ளையார்
கொட்டையூர் – கோடி விநாயகர்
வடசேரி – ஆகசாலை விநாயகர்
திருப்பனையூர் – துணையிருந்த பிள்ளையார்
திருவிழிமலை – படிக்காசு விநாயகர்
திருநெல்வேலி – சந்திப் பிள்ளையார்
சிவகங்கை – கௌரி விநாயகர்
செங்கோட்டை – ஆதிசூர விநாயகர்
குன்றக்குடி – தோகையடி விநாயகர்
ஸ்ரீவைகுண்டம் – தூண்டில் விநாயகர்
திருவிதாங்கோடு – உமை அர்தபாக விநாயகர்
ஸ்ரீ பெரும்புதூர் – வழித்துணை விநாயகர்
பழநி – கோசல விநாயகர்
தென்காசி – அணுக்கை பிள்ளையார்
திருவாதவூர் – கபில விநாயகர்
மயிலாடுதுறை – அகத்திய விநாயகர்

ப்ராஹ்கெனேஸ் என்பது, கம்போடியாவில் கணேசருக்கு வழங்கும் பெயர்.
மங்கோலியர்கள் விநாயகரை தோத்கார் அவுன்காரகன் என்றழைக்கின்றனர்.
கணபதிக்கு திபத்தியர்கள் வைத்துள்ள பெயர் ட்ஸோக்ப்டாக்.
ஜாவா தீவில் விநாயகர் கபால மாலையணிந்து காணப்படுகிறார்.
பர்மாவில் கணபதி மகாபைனி என்றழைக்கப்படுகிறார்.

விநாயகரை வழிபட 16 மந்திரங்கள்:

ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக 16 மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு.

ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

விநாயகப் பெருமானை, அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப ஆனைமுகனை கீழ்கண்டவாறு அலங்கரித்து, இந்தப் 16 மந்திரங்களால் வழிபட்டால் பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.

அஸ்வினி – வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அறுகம்புல் மாலை.
பரணி – சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை – வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகிணி – சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் – கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.
திருவாதிரை – தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை.
புனர்பூசம் – சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூசம் – கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.
ஆயில்யம் – உங்கள் விருப்பப்படி அலங்காரம், அருகம்புல் மாலை.
மகம் – உங்கள் விருப்பப்படி அலங்காரம், அருகம்புல் மாலை
பூரம் – உங்கள் விருப்பப்படி அலங்காரம், அருகம்புல் மாலை
உத்திரம் – திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.
ஹஸ்தம் – சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.
சித்திரை – வெள்ளி கவசம், அறுகம்புல் மாலை.
சுவாதி – தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.
விசாகம்- திருநீறு அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை, ரோஜா மாலை.
கேட்டை – தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
மூலம் – சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அறுகம்புல் மாலை.
உத்திராடம்- அறுகம்புல் மாலை.
திருவோணம்- சுவர்ணம், அறுகம்புல் மாலை.
அவிட்டம் – மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.
சதயம் – குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.