Wednesday, October 25, 2023
HomeArthamulla Aanmeegamபூஜையறை வைக்க சிறந்த இடம் எது?

பூஜையறை வைக்க சிறந்த இடம் எது?

பூஜையறை வைக்க சிறந்த இடம் எது?

வீட்டில் லட்சம் கடாட்சம், சுபிட்சம் உண்டாக வேண்டுமென்றால் பூஜையறை சரியான திசையில் இருக்க வேண்டும். சரி பூஜையறை அமைக்க சரியான இடம் எது என்று பார்க்கலாம்.

வீட்டில் பூஜை அறை இருக்க வேண்டிய திசையென்றால் அது,

  1. தென்கிழக்கு பகுதி
  2. வடமேற்கு பகுதி
  3. தெற்கு நடுப்பகுதி
  4. மேற்கு நடுப்பகுதி

இந்த இடங்களில் மட்டுமே பூஜையறை வரவேண்டும். இந்த பகுதியில் வரக்கூடிய பூஜையறையினால் மட்டுமே ஏராளமான நன்மைகள் வந்து சேரும்.

பூஜையறை வரக்கூடாத இடங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும்:

நாம் குடியிருக்கும் வீட்டில் எங்கு பூஜையறை வரவேண்டும் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தை தவிர வேறு எங்கு வந்தாலும் தவறே.

வடகிழக்கு பூஜையறை:

வடகிழக்கு பூஜையறை மிக மிக தவறு. அதனுடைய கெடுதலான பலன் அனைத்தும் வீட்டின் ஆண்கள் மீதே இருக்கும்.

  1. ஆண்கள் வேலைக்கு போகமுடியாத நிலை ஏற்படும். சில சமயம் ஆண்களுக்கு வேலையே அமையாமல் கூட போக நேரிடும்.
  2. குடும்ப உறவுகளில் பிரிவினை ஏற்படும். அதாவது தந்தை, மகன் உறவு பாதிப்பு, கணவன் மனைவி உறவு கூட சிலநேரங்களில் பாதிக்கப்படுகிறது.
  3. உடல் நிலை பாதிப்பு, விபத்து போன்றவைகள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.

இதுபோல இன்னும் நிறைய பாதிப்புகள் உண்டு. கவனம் தேவை.

தென்மேற்கு  பூஜையறை:

தென்மேற்கு பூஜையறை என்பதும் தவறான அமைப்பே. இங்கு பூஜையறை வந்தால் ஆண்கள், பெண்கள் இருவருமே பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

  1. வியாபாரத்தில் நஷ்டம் அல்லது வியாபாரம் தொடர்ந்து செய்ய முடியாமல் போவது.
  2. கடன் சுமை கூடும்.
  3. கொடுக்கல் வாங்கலில் சிக்கல் ஏற்படும்.
  4. கணவன் மனைவி பிரிவு உண்டாகும்.
  5. விவாகரத்து கூட ஏற்படலாம்.
  6. வெளியூர் அல்லது வெளிநாட்டிலேயே கணவன் தங்கிவிடுவது
  7. பில்லி சூன்யம், செய்வினை மீது தேவையற்ற நம்பிக்கை வைப்பது
  8. வீட்டில் உள்ள பெண்கள் எப்பொழுதுமே கோவில் கோவில்லாக சுற்றுவது
  9. தன்னுடைய சொத்தை அல்லது தன்னுடைய முழு வருமானத்தை முழுவதும் வீண் செலவு ஆவது போன்றவை நடக்கலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 2 =

Most Popular