Sunday, October 22, 2023
HomeArthamulla Aanmeegamசீடன் குருவை விட எப்போது உயர்ந்தவனாகிறான்?

சீடன் குருவை விட எப்போது உயர்ந்தவனாகிறான்?

சீடன் குருவை விட எப்போது உயர்ந்தவனாகிறான்?

குருவை கடவுளாக எண்ணும் குருபக்தி உள்ள ஒவ்வொரு சீடனும் தன் குருவை விட உயர்ந்து விடுகிறான். உதாரணத்திற்கு வியாசரும் சுகபிரம்மமும். பாரத தேசத்தின் சம்பிரதாயப்படி குரு சிஷ்ய உறவு ஒரு இனிய நீரோட்டம் போன்றது. உயர்ந்த பனிப் பாறைகளைப் பாருங்கள். அவை குருவுக்கு அடையாளம். அவற்றின் மீதிருந்து பாயும் கங்கையை தரிசியுங்கள். அது சீடனுக்கு அடையாளம். அதாவது நம்மைச் சுற்றி உள்ள இயற்கைலேயே குரு சீட சம்பந்தம் நிறைந்துள்ளது. அதனால்தான் இயற்கையே முதல் குரு என்பார்கள். அப்படிப்பட்ட மிக உன்னதமான குரு சம்பிரதாயத்தின் ஆதி குரு பாதராயண மகரிஷி. இவரையே கிருஷ்ண துவைபாயனர் என்றும் வேத வியாசர் என்றும் அழைக்கிறோம்.

ஆஷாட (ஆடி) மாதம் பௌர்ணமி திதியை வியாச பௌர்ணமியாக கடைபிடிக்கிறோம். பண்டைய குருகுலங்களில் இன்றைய நாளில்தான் ‘சமாவர்த்தன உற்சவம்’ (தற்காலத்தில் பட்டமளிப்பு விழா) நடத்துவார்கள். குரு சீட சம்பிரதாயத்திற்கு மூல புருஷரான ஸ்ரீவியாச பகவானை நினைத்துத் தொடங்கினால் அறிவுப் பெரும் முயற்சியில் தடைகள் இருக்காதென்று சாட்சாத் விநாயகரின் வாயால் கூறப்பட்ட தியான சுலோகம் இது.

நிருக்தம் கூறும் பொருள்:-

வேதத்தின் ஒரு பகுதியான நிருக்தம் வியாச பகவானை இவ்விதம் புரிந்து கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது. வியாச பகவான் ஞானத்தை விஸ்தாரமாக விளக்கி அளித்தவர். ஞான விஷயங்களை பிறருக்கு விளக்கிக் கூறி புரிய வைக்கும் சாமர்த்தியம் கொண்டவர். உண்மையில் வேத வியாசர் என்ற பெயரிலேயே இந்த பொருள் உள்ளது. வேதம் என்றால் ஞானம். வியாசம் என்றால் விரிவான விளக்கம். வேத வியாசர் என்ற சொல்லுக்கு நிருக்தம் கூறும் உட்பொருள் இது.

குருவின் கோபம்:-

நம் கலாசாரத்தில் குரு என்பவர் பரா, அபரா வித்யைகளை அளிப்பவர். பரம்பொருளை அடைவதற்கு ஒளிபொருந்திய வழி காட்டுபவர். சிவபிரானின் கோபத்தைக் கூட குரு நீக்கக்கூடியவர். அப்படிப்பட்ட குருவுக்கு கோபம் வந்தால் பரமசிவன் கூட எதுவும் செய்ய இயலாது. அனைவருக்கும் குருகிருபை என்பது மிகவும் முக்கியம்.

குருவுக்கு சிரத்தையோடு சேவை செய்து உயர்ந்த இடத்தை அடைந்தவர்களுள் ராமர், கிருஷ்ணர், பாண்டவர்கள், பக்த கண்ணப்பா, சுகர், சத்தியகாம ஜாபாலி போன்றோர் புகழ் பெற்றவர்களாக மதிக்கப்படுகின்றனர். குருவை நிராகரித்த அருணி, கர்ணன் போன்றோர் தோல்வியடைந்தனர். அருணி குருவிடம் கற்ற கல்வி அனைத்தையும் இழக்க வேண்டி வந்தது.

குருமந்திரத்தின் உயர்வு:-

அதனால்தான் குருவுக்கு கௌரவம் அளிக்கும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்டி, குரு மந்திரம் நம்மை பவ சாகரத்திலிருந்து உய்விப்பதற்கு மிக மிக தேவை என்று குருகீதையில் உள்ள இந்த சுலோகம் குறிப்பிடுகிறது.

நம்மை நல்வழியில் நடத்துவிப்பதற்கு குரு நம்மை தண்டித்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பகையை வளர்த்துக் கொண்டு குருவை தூஷிப்பதோ துன்புறுத்துவதோ கூடாதென்று ‘குரு சதகம்’ போதிக்கிறது.

அதிர்ஷ்டசாலி குரு யார்?

தனக்கு கல்வி போதிக்க மாட்டேன் எனறு நிராகரித்த குருவுக்கு விரலை வெட்டிக் கொடுத்த சீடன் ஒருவன். குருவின் புத்திர சோகத்தைப் போக்கடிப்பதற்கு வருண தேவனையே சபிப்பதற்கு பின்வாங்காத சீடன் ஒருவன். இதே வரிசையில் பயணித்து தன் குருவின் ஆசீர்வாத பலத்தோடு திக்பாலகர்களையே எதிர்த்த உதங்கன் போன்ற சிஷ்ய இரத்தினங்களை அடைந்த அந்த குருமார்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

குரு நிந்தை?

குருவையே கடவுளாக எண்னும் சீடர்கள் குரு நிந்தையை காதால் கூட கேட்க மாட்டார்கள் என்று ‘குரு ரத்னாகரம்’ போதிக்கிறது.

குரு ஏன் தேவை?

பெண்ணிற்கு தாய்மை முழுமையளிப்பது போல் இல்லறத்தானுக்கும் பிரம்மச்சாரிக்கும் குருவின் சத்சங்கம் பரிபூரணத்தை அளிக்கிறது. நாம் எத்தனை மேதாவியானாலும் அந்த மேதமையில் உள்ள ஆத்ம ஜோதி தூண்டப்படாவிட்டால் நாம் முழுமையடைந்ததாக பொருள் அல்ல. அப்படிப்பட்ட தூண்டப்படுதல் அல்லது உத்தீபனம் அல்லது சக்தி பாதம் சத்குருவால் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்டவர்களே சத்குருமார்கள். அவர்கள் நமக்கு அளிப்பதே உண்மையான அறிவு.

குரு போதிக்காத கல்வி குருடு என்ற பழமொழி கூட உள்ளது. குருவின் தத்துவ ஜோதியை கவரும் சக்தி யாரிடம் உள்ளதோ அவரே குருவின் கிருபையைப் பெற்று உத்தம சீடமாரக வளர்ச்சி அடைவார்.

போலி குருமார்கள்:-

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த சுலோகத்தில் கூறப்படுவது போன்ற குருமார்களே அதிகமாக தென்படுகிறார்கள்

உண்மையான குருபூர்ணிமா எப்போது?

குருமார்கள் தம் குருத்துவத்தை நிலைநிறுத்திக் கொண்டு பொருளாசையின்றி ஞானம் நிறைந்தவர்களாய் குருகுலங்களை அரசியல்வாதிகளின் தலையீட்டால் தூய்மைக் கேடடையாமல் மாசுபடாமல் நடத்துவார்களானால் மாணவன் மனம், சொல், செயல் மூன்றும் திரிகரண சுத்தமாக உண்மையான வித்யையை பெற முடியும்.

அப்போதுதான் குரு சிஷ்யரின் இடையில் தந்தை மகன் உறவு நிலைபெறும். மாணவர்கள் குருவை கத்தியைக் காட்டி மிரட்டாமல் கௌரவமாக, நேர்மையாக தேர்வு எழுத முடியும். மாணவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் வழிமுறைகள் மாறும் போது ஞானமும் விஞ்ஞானமும் நிறைந்த குருமார்கள் அடையாளம் காணப்பட்டு முழுமையான குருஸ்தானத்தில் நிலை பெற முடியும் அப்போது மட்டுமே உண்மையான குருபூர்ணிமா திருநாளின் லட்சியம் பரிபூரணமாக நிறைவேறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 12 =

Most Popular