Sunday, October 15, 2023
HomeArthamulla Aanmeegamயாரெல்லாம் வைரம் நகைகளை அணியலாம்?

யாரெல்லாம் வைரம் நகைகளை அணியலாம்?

யாரெல்லாம் வைரம் நகைகளை அணியலாம்?

வைரம் என்றாலே அதற்கு தனி மவுசு அதிகமாக காணப்படுகிறது. மிகவும் விலையுயர்ந்தாகக் காணப்படும் வைரங்கள் பெண்கள் அணியும் ஆபரணங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வாறான வைர கற்களை அணிவதிலும் பல சிக்கல் ஏற்படுகின்றது. குறித்த வைரத்தினை யாரெல்லாம் அணியலாம் என்றும் யார் அணியக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வைரமானது அழகை அதிகரிப்பது மட்டுமின்றி, உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நீரிழிவு நோய் அல்லது இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டால் வைரத்தை அணியக்கூடாது. ஜோதிடத்தின் படி 21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே வைரத்தினை அணியலாம். மேலும் அது எவ்வளவு வெண்மையாக இருக்கின்றதா அவ்வளவு சிறந்ததாக பார்க்கப்படுகின்றது. கறை படிந்த அல்லது துண்டாக்கப்பட்ட வைரம் விபத்து அல்லது தோல்விக்கு காரணமாக இருக்கலாம். பவளத்தை வைரத்துடன் சேர்த்து அணியக்கூடாது.

வைரத்தை ஆள்காட்டி விரல் அல்லது கட்டைவிரலில் அணிவது சுக்கிரனை பலப்படுத்துகிறது. இதனால் நிதி பிரச்சனைகள் நீங்கும். இது தவிர, கவர்ச்சி, திரைப்படம் அல்லது ஊடகத் துறையில் உள்ளவர்களுக்கு வைரம் பயனுள்ளதாக இருக்கும்.

கிரகங்களின் இட அமைப்பைப் பொறுத்தே கல் அணிய வேண்டும். வைரம் பலபேருக்கும் ஒவ்வாததாய் இருக்கும். “காதில் வைரத்தோடு இருக்கலாம். மனத்தில் வைரத்தோடு இருக்கக் கூடாது” என்பது பழமொழி. வைரம் என்றால் நகையை மட்டுமின்றிப் பகையையும் குறிக்கும். புகழ்பெற்ற கோகினூர் வைரத்தால் எவ்வளவு கஷ்டம் வந்தது பார்த்தீர்களா? வைரம் பயன்படுத்தும்போது கவனமுடன் இருக்க வேண்டும்.

வைர நகைகளை யாரெல்லாம் அணியலாம்? யாரெல்லாம் அணியக்கூடாது?

பொதுவாய் உடை,வங்கித் தொழில், நாடகத் தொழில் (ஃபைன் ஆரிட்ஸ்) நடத்துபவர்கள் வைரம் அணியலாம். நிர்வாகப் படிப்பு படிப்பவர்கள் அணியலாம். நல்ல வெற்றி உண்டாகும். இதை அணிவதால் பட்டு, பீதாம்பரம் போன்ற செல்வங்களைப் பெற முடியும்.

பரணி நட்சத்திரக்காரர்கள் அணியலாம் வைரம் அணிவதால் சீனா, ஜெர்மன் மொழிப் புலமையும் தெலுங்கு மொழிப் புலமையும் உண்டாகும். உரவியாபாரிகள், விவசாயிகள், வாழை வாணிகர்கள் அணியலாம். மீனத்தில் சுக்கிரன் இருக்கப்பட்டவர்கள் அணியலாம்.

வண்டி வாகனம், சினிமாத் தொழில் குறிப்பாய் வில்லன் நடிகர்கள் அணியலாம். ஜாதகத்தில் சுக்கிரனுடன், இராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் அணியக் கூடாது. சுக்கிரன், செவ்வாய் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் வைரம் அணியலாம்.

எந்தெந்த ராசிக்கு உரியவர்கள் வைரம் அணியலாம்?

கன்னி மற்றும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வைரக்கல் மிகவும் அதிர்ஷ்டமான இரத்தினக் கல் ஆகும். இது அவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஏற்படுத்தும். மற்ற ராசிக்காரர்கள் சில நிபந்தைகளின் கீழ் வைரத்தை அணியலாம்.

மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் வைரம் அணிவது நல்ல பலன்களை தராது. இந்த ராசிக்காரர்கள் வைரம் அணிவதைத் தவிர்க்க வேண்டும். மறுபுறம், கடக ராசிக்காரர்கள் குறிப்பிட்ட தசாபுத்தி நடக்கும்போது வைரத்தை அணியலாம்.

இருந்தபோதிலும், அவரவர் ஜாதகப்படி, வைரம் அணிவது பலனைக் கொடுக்கும் என்றால் அணியலாம். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிகளில் வைரம் மிகவும் மங்களகரமானது. இது தவிர ஆன்மீகத்தில் ஈடுபட விரும்புபவர்கள் வைரம் அணியக்கூடாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × two =

Most Popular