குழந்தைகளை அரிசி அல்லது நெல்லில் எழுத சொல்வது ஏன்?
கல்வி இன்றியமையாத ஒன்று. அனைவருக்கும் பொதுவானது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். அள்ள அள்ள குறையாத செல்வம் கல்விச் செல்வம் மட்டுமே. கொடுத்தாலும் அழியாது, அழித்தாலும் அழிக்க முடியாத செல்வம் என்றால், அது கல்விச் செல்வம் மட்டும் தான். அப்படிப்பட்ட கல்விஐ குழந்தைகள் கற்க ஆரம்பிக்கும் போது அரிசி அல்லது நெல்லில் எழுத சொல்கிறார்களே? அது ஏன் என்று யாராவது நினைத்து பார்த்தது உண்டா?
கல்வியின் முக்கியத்துவம்:
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயம் கல்வி ஆகும். ஆகையால் தான் கல்வி கற்க ஆரம்பிக்கும்போது, முதலில் அன்னை சரஸ்வதிக்கு பூஜை செய்கின்றோம். அதிலும் விஜயதசமி அன்று இந்த பூஜை நிகழ்த்தப்படுவது மிகவும் சிறப்பாகும். ஏனெனில் விஜயதசமி அன்று இச்சா, கிரியா மற்றும் ஞானம் என்ற மூன்று சக்திகளும் ஒன்று சேர்ந்து கல்வி கற்க உதவுகின்றனர்.
அட்சய திருதியைக்கு அட்சய பொருட்களை வாங்கி உங்கள் வீட்டில் வைக்க, இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் படிப்படியாக கிடைக்கும். மேலும் குழந்தைகள் இந்த நாளில் தான் முதன்முதலில் எழுத தொடங்குகின்றனர். அதாவது அவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் எழுத்துக்களை எவ்வாறு எழுதுவது? என்பதை கற்று கொள்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்கள் இந்த நாளில் கல்வி கற்க ஆரம்பித்து, தொடர்ந்து படிக்கும்போது ஒரு வாக்கியத்தை எவ்வாறு உருவாக்குவது? என்பதை கற்று கொண்டு, தங்களுடைய எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது? என்பதையும் அறிந்து கொள்கின்றனர்.
அரிசி அல்லது நெல்லில் எழுத சொல்வது ஏன்?
ஓங்காரம் ஒரு செயலின் தொடக்கம் மற்றும் இறுதியை குறிப்பது ஓம் என்ற சொல்லாகும். அதனால் தான் குழந்தைகள் முதலில் ஓம் எனும் சொல்லை எழுதி தனது கல்வி பயணத்தை தொடங்குகின்றனர். ரம்ப காலத்தில் குழந்தைகள் தங்களுடைய குருகுலத்தில் ஓம் என்ற சொல்லை மணல் அல்லது நெல்லில் எழுதி கல்வி கற்க தொடங்கினர். ஆனால் தற்போது ஒரு தட்டில் அரிசியை பரப்பி அதில் ஓம் என்ற சொல்லை எழுதுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த காலத்தில் ஐந்து வயதில் தான் கல்வி கற்க தொடங்குவார்கள். ஆனால் தற்போது மூன்று வயதிலேயே குழந்தைகள் கல்வி கற்க தொடங்கி விடுகின்றனர்.
கல்வி தீட்சை, வெற்றியின் அடையாளம், எழுத கற்று கொள்வது மற்றும் ஓங்காரம் போன்றவைகளின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளவே நாம் ஓம் என்ற சொல்லை மணல், நெல் அல்லது அரிசியில் குழந்தைகளை எழுத சொல்கிறோம்.
