கோபிகைகளின் பானையை கண்ணன் ஏன் உடைத்தார்?
உறியடியின் பின்னணி ரகசியம்..கிருஷ்ண ஜெயந்தி அன்று, உறியடி ஏன் விளையாடப்படுகிறது என்ற காரணம் தெரியுமா?
உடைத்தான் என்ற ரகசியம் தெரியுமா?
இது பண்டிகைக்காலம். கண்ணன் பிறந்த நன்னாளை கிருஷ்ணாஷ்டமி, கோகுலா ஷ்டமி என்று கொண்டாடுகிறோம். இன்று உறியடி விளையாட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். உறியடியில் பங்கேற்பதும், பார்த்துக் களி ப்பதும் மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்றாலும், உறியடி ஏன் விளையாடப் படுகிறது என்ற காரணம் தெரியுமா? கோபியர்களின் தயிர் பானைகளை கண் ணன் ஏன் உண்டிவில் கொண்டு
உடைத்தான் என்ற ரகசியமும் தெரியுமா?
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. கோவில்கள் முதல் வீடுகள் வரை இதற்கா ன ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வழக் கமாக பல இடங்களில் உறியடி விளையா ட்டிற்கும் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனாவின் தாக்கத்தால் கட்டுப்பாடுகள் உள்ளன.
கிருஷ்ணர் கோபிகளின் பானைகளை உடைப்பார் என்பது அனைவருக்கும் தெரி ந்தது. ஆனால் அதன் பின் உள்ள ஆழமா ன கருத்தும், காரியமும் அனைவருக்கும் தெரியாதது. நவீன யுகத்தில், ஸ்ரீ கிருஷ் ணர் நமது ‘ஆன்மீக தத்துவத்தின்’ மிகப் பெரிய தூண்.
ஸ்ரீ கிருஷ்ணர் மனித உருவத்தில் மட்டு மே அறியப்பட்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கை மனிதர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. கிருஷ்ணர், குழந்தையாக இருந்தபோது, கோகுலத்திலிருந்து மதுராவிற்கு வரிசை யாக சென்றுக் கொண்டிருந்த கோபியர் lகளின் பால் மற்றும் தயிர்ப் பானையை உடைத்தார்.
அரசன் கம்சன், கோகுலம் போன்ற கிராம ங்களின் மீதான வரியை அதிகரித்தார். இது மக்களின் மீதான பொருளாதார ஏகா திபத்தியத்தின் வடிவாக இருந்தது. இதை எதிர்க்கும்விதமாக கண்ணன் தனது உண் டிவில் கொண்டு பானைகளை உடைத்தார்
கொடுங்கோன்மையை எதிர்ப்பதற்கும், அப்பாவி பெண்களின் பானையை உடை ப்பதற்கும் என்ன தொடர்பு? அரசனுக்கு கப்பம் கட்டுவதற்காக தங்கள் உணவுப் பொருட்களை தலையில் சுமந்துக் கொண்டு, மதுராவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தனர்.
கோபியர்களின் தயிர் வெண்ணெய், பால் போன்ற பொருட்கள் அரசனுக்கு போய் சேரக்கூடாது என்று நினைத்ததால் தான் கண்ணன் கோபியர்களின் பானைகளை உடைத்தார். உடைந்த பானைகளில் இருந்த பால், தயிர், வெண்ணெய் போன்ற உணவுப் பொருட்களை தன்னுடன் இருந்த நண்பர் களுக்கும் கொடுத்தும், தானும் உண்டும் மகிழ்ந்தார் நந்தகோபனின் மகன் கோவிந்தன். உண்மையில், இந்த பால் மற்றும் வெண் ணெய் அந்த குழந்தைகளின் உரிமை என்பதை புரிய வைக்க கண்ணன் செய்த லீலைகள் இவை.
தனக்கு கப்பம் வந்து சேராததால், விசாரி த்து வர அனுப்பிய ஊழியர்களின் செய்தி யை அறிந்தான் அரசன் கம்சன். பிறகே கண்ணனையும், அவர் அண்ணனையும் மதுராவிற்கு வர வைத்ததும், கம்சன் மண் ணோடு மண்ணானதும் உலகம் அறிந்த உண்மை.
ஆனால், உறியடியின் பின் உள்ள பொரு ளாதார பின்னணி மட்டும் பாலில் உள்ள வெண்ணெய் போல மறைபொருளாய் அனைவருக்கும் தெரியாது. இன்று கோகு லத்தின் பாலகன் கண்ணன் உதித்த நன் னாள். உறியடித்து கொண்டாட முடியாவிட்டாலும், மனதார வழிபட்டு கிருஷ்ணனி ன் அருளைப் பெறுவோம்.
