Monday, October 23, 2023
HomeArthamulla Aanmeegamஏன், சம்மணம் போட்டு அமர வேண்டும்?

ஏன், சம்மணம் போட்டு அமர வேண்டும்?

ஏன், சம்மணம் போட்டு அமர வேண்டும்?

காலை முதல் இரவு தூங்கும் வரையில் காலை தொங்க வைத்த முறையில் தான் நாம் அமர்ந்திருக்கிறோம். இரு சக்கர வாகனத்தின் பயணம், சினிமா தியேட்டர், கார் பயணம், பேருந்து பயணம், இரயில் பயணம், பள்ளி, கல்லூரி என்று எல்லா நேரங்களிலும் காலை தொங்க விட்ட நிலையில் தான் இருக்கிறோம். இப்படி காலை தொங்க வைத்து அமர்வதால், உடல் உபாதைகள் ஏற்படுகிறது. காலை தொங்க வைத்த நிலையிலேயே இருப்பதால், ரத்த ஓட்டமானது, இடுப்பிற்கு கீழ் மட்டுமே அதிகமாக செல்கிறது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும். மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப் பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது. எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது. இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.

யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிர்க்க வேண்டும். கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமர வேண்டும். சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்.

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட வேண்டும்.

சாப்பிடும் முறை:

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிட வேண்டும்.
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது.
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்க கூடாது. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
5. அவசர அவசரமாக சாப்பிட கூடாது.
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்.
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்.
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழக வேண்டும்.
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க கூடாது
10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிட வேண்டும்.
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிட வேண்டும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்…
12. சாப்பிட வேண்டிய நேரம்…
காலை – 7 மணி முதல் 9 மணிக்குள்
மதியம் – 1 மணி முதல் 3 மணிக்குள்
இரவு – 7 மணி முதல் 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் இரவு தூங்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =

Most Popular