Wednesday, October 18, 2023
HomeArthamulla Aanmeegamஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிது?

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிது?

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிது?

ஹோலி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இரணியகசிபு என்ற அசுரன் வாழ்ந்து வந்தான். அவனை மனிதர்களாலும், உயிரினங்களாலும் கொல்ல முடியாத அளவிற்கு சாகா வரம் பெற்றவனாக இருந்தான். நாளுக்கு நாள் தொடர்ந்து மக்களை துன்புறுத்தி வந்துள்ளான். உலகிலுள்ள மக்கள் அனைவரும் மகா விஷ்ணுவை விட்டுவிட்டு தன்னை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காக துன்புறுத்தி வந்தான்.

ஆனால், அவனது மகனான பிரஹலாதன் தந்தையின் கொடூரத்தனத்தை மறந்து மகா விஷ்ணு மீது தீவிர பக்தி கொண்டிருந்தான். இதையடுத்து, தனது சகோதரி ஹோலிகா என்ற அரக்கியின் உதவியுடன் மகனை கொல்ல முடிவு எடுத்தான். ஹோலிகாவிடம் உள்ள ஒரு சால்வை அவளை நெருப்பிலிருந்து பாதுகாக்கும். ஆனால், மற்றவர்களை அது எரித்துவிடும். இதன் மூலமாக அவனை கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்த ஹோலிகா, பிரஹலாதனை தன்னோடு பெருநெருப்பில் வந்து அமருமாறு பணித்தாள்.

இருவரும் பெருநெருப்பிற்குள் இறங்கினா். அவள் மட்டும் தனது சால்வையால் தன்னை மூடிக் கொண்டாள். நெப்பானது அதிக வெப்பத்துடன் எாியத் தொடங்கியது. அப்போது விஷ்ணுவின் அருளால் ஹோலிகா சுற்றியிருந்த சால்வையானது தானாக பிரிந்து, அவளை விட்டு பறந்து சென்று பிரஹலாதனை சுற்றிக் கொண்டது. விஷ்ணு பகவானின் அருளால் பிரஹலாதன் நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டான். ஹோலிகா நெருப்பில் சாம்பலானாள்.

ஹோலிகா எரிந்து சாம்பலான தினத்தை ஹோலி பண்டிகை என்று கொண்டாடுகிறோம். விஷ்ணு பகவான் பாதி மனித வடிவமும், பாதி சிங்க வடிவமும் எடுத்து, பகலும், இரவும் இல்லாத அந்தியிருட்டில் வீட்டின் தாழ்வாரப் பகுதியில் (வீட்டிலோ வெளியிலோ இல்லாத ஒரு இடத்தில்) இரணியகசிபுவை தனது மடியில் வைத்து (விண்ணிலும் மண்ணிலும் இல்லாதபடி) தனது விரல் நகங்களால் கிழித்துக் கொன்றார்.

கண்ணன் பிறந்து வளர்ந்த இந்த விரிந்தாவனத்திலும் மதுராவிலும் இந்த திருவிழாவானது 16 நாட்கள் கண்ணன் ராதாவின் தெய்வீக காதலை கொண்டாடும் அரங்கபஞ்சமி நாள் வரை கொண்டாடப்படுகிறது. கண்ணன் கோபியர்களுடன் கொஞ்சி விளையாடி இந்த நாள் தான் ஹோலி பண்டிகை. இந்தப் பண்டிகையானது கண்ணன் மற்றும் ராதா இருவரும் விளையாடிய விளையாட்டு. கண்ணன் தனது தோலின் நிறம் கருப்பாகவும், ராதா சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாகவும் தனது தாயாரிடம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கண்ணனின் தாயார்

யசோதா, ராதையின் முகத்தில் வண்ணம் பூசிட செய்ததாகவும் கூறப்படுகிறது. ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனி (பிப்ரவரி/மார்ச்) (பங்குனிப் பெளர்ணமி) மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது. இது பொதுவாக பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தின் இறுதியில் வரும். கடந்த 2009 ஆம் ஆண்டில் ஹோலிப் பண்டிகை மார்ச் 11 ஆம் தேதியன்றும், ஹோலிகா தகனம் மார்ச் 10 ஆம் தேதியன்றும் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சமிக்கு சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்க பஞ்சமியுடன் ஹோலி பண்டிகை முடிவடையும்.

இந்த ஆண்டு மாசி 24 ஆம் தேதியான இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது, மார்ச் 07 ஆம் தேதியான நேற்று பௌர்ணமி. நேற்று ஹோலிகா தஹான் (ஹோலிகா தகனம் – எரிக்கப்பட்டது) விழாவும், இன்று மார்ச் 08 வண்ணங்களின் விழாவான ஹோலியும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது. வசந்தத்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் அன்று ஹோலி கொண்டாடப்படுகிறது. அதன்படி, மார்ச் 07 ஆம் தேதியான நேற்று ஹோலிகா தஹான் (ஹோலிகா தகனம் – எரிக்கப்பட்டது) விழாவும், இன்று மார்ச் 08 வண்ணங்களின் விழாவான ஹோலியும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வசந்த கால விழா என்றும் அழைக்கப்படுகிறது. வசந்த த்தை வரவேற்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஹோலி பண்டிகை உருவானதற்கு மற்றொரு புராணக்கதையும் சொல்லப்படுகின்றது. அதாவது, காமதேவனைப் பற்றியது. பார்வதி தேவி சிவபெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு தவம் செய்து கொண்டிருந்த சிவபெருமான் மீது காமன் தனது பூக்கணையைச் செலுத்தி தவத்தைக் கலைத்தார். இதனால், அவரது உடல் அழிந்தது. சிவபெருமான் தனது 3ஆவது கண்ணைத் திறந்ததால் அவரது பார்வையை தாங்க முடியாமல் காமனின் உடல் சாம்பலானது.

காமனின் மனைவியான ரதியின் வேண்டுதலுக்கிணங்க காமனை மீண்டும் சிவபெருமான் உயிர்ப்பித்தார். ஆனால், உணர்வு வழி மட்டுமெ அன்பை வெளிப்படுத்த முடியுமே தவிர, உடல் வழி காமத்தை வெளிப்படுத்த முடியாத அருவ உருவத்தை உருவாக்கினார். இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் தான் ஹோலி பெருந்தி கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + seventeen =

Most Popular