Saturday, October 28, 2023
HomeArthamulla Aanmeegamதிருமலை திருப்பதிக்கு ஏன் செல்ல வேண்டும்?

திருமலை திருப்பதிக்கு ஏன் செல்ல வேண்டும்?

திருமலை திருப்பதிக்கு ஏன் செல்ல வேண்டும்?

கந்த புராணத்தில் இந்த திருமலை திருப்பதி பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும். பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன. வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும். உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள்.

அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும். சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது. மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது. வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தி உடன் உள்ளது. இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் பக்தா்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர். குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள். நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது. நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.

குறிப்பு:

சந்திர தசை மற்றும் சந்திர புத்தி நடப்பவர்கள், தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகார தலமாகும். திங்கட்கிழமை இரவு தங்குவது சிறப்பாகும்.

ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ

சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம்:

“ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே … !!!

பொதுப் பொருள்:

திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − two =

Most Popular