நினைத்த வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!
எல்லோருக்கும் ஆசைப்பட்ட வேலை கிடைப்பது கிடையாது. மேலும் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருப்பார்கள். மனதிற்கு பிடித்த வேலை செய்யும் பொழுது தான் அந்த வேலையில் இருக்கும் சுமை நமக்கு தெரியாமல் இருக்கும். இஷ்டப்பட்டு செய்யும் வேலையில் தான் நம்மால் முன்னேற்றமும் காண முடிகிறது.
எனவே நல்ல வேலையும், ஆசைப்பட்ட திருப்தியான வேலையும் நமக்கு கிடைக்க பிள்ளையாருக்கு என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். நீங்கள் ஆசைப்பட்ட வேலை உடனே கிடைக்க/நீங்கள் நினைத்த வேலை கிடைக்க, நீங்கள் பார்க்கும் வேலையில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க பிள்ளையாருக்கு 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கோர்த்து சாற்றி வழிபட வேண்டும்.
பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி இலையின் மீது அதீத பிரியம் உண்டு. இந்த கற்பூரவள்ளி இலையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது. எனவே 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கோர்த்து பிள்ளையாருக்கு போட்டு வாரம் தோறும் புதன் கிழமையில் வழிபடலாம். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள்.
ஆசைப்பட்ட வேலை வேண்டி பிரார்த்திப்பவர்கள் புதன் கிழமையில் வழிபடுவது நல்லது.
கற்பூரவல்லி இலைகளுக்கு பதிலாக 9 செவ்வாழை பழங்களை மாலையாக கோர்த்தும் 12 வாரங்கள் விநாயகருக்கு சாற்றி வழிபடலாம். கற்பூரவல்லி இலையை
விட செவ்வாழைக்கு அதிக சக்தி உண்டு. இந்த 9செவ்வாழை பழங்களை இடைவெளி விட்டு நூலில் மாலை போல கட்டிக் கொள்ளுங்கள். இதை விநாயகப் பெருமானுக்கு மாலையாக போட்டு வாரம் தோறும் புதன்கிழமையன்று வழிபட்டு வர வேண்டும்.
தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.
இது போல நீங்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் செய்து வரும் பொழுது 12 வாரத்திற்குள் உங்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். வேலை தேடி ஒவ்வொரு வாரமும் நேர்காணலுக்கு சென்று அலைந்து, திரிந்து, ஓய்ந்து போனவர்களுக்கு விநாயகப் பெருமான் நல்லாசி வழங்குகிறார். நீங்கள் படித்த படிப்பிற்கு
ஏற்ற வேலையை செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருக்காமல், இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொண்டு, உங்கள் மனதிற்கு பிடித்த வேலையையும் தேடுவது தான் நல்லது.
இப்படி வேலை தேடுபவர்கள் வாரம் தோறும் விரதம் இருந்து அசைவ உணவு எடுத்துக் கொள்ளாமல் பிள்ளையாரை முழுமனதாக ஏற்று நம்பி இந்த 9 செவ்வாழை பழ மாலையை சாற்றி உண்மையான பக்தியுடன் மனதிற்குள் வேண்டி வணங்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் எதிர்பார்த்த வேலையும், இஷ்டப்பட்ட வேலையும் மன நிறைவுடன் உங்களுக்கு கிடைக்கும்.
சிலருக்கு அரசாங்க வேலையில் நாட்டம் அதிகமாக இருக்கும். அதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்கிற கனவும், லட்சியமும் இருக்கும். அதற்காக உரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள். இப்படி முயன்று கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது தடைகள், தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையில் பிள்ளையாருக்கு இந்த எளிய 9 செவ்வாழைபழ மாலையை சாற்றி வழிபடும் பரிகாரத்தை செய்து வரலாம்.
