Monday, October 23, 2023
HomeAstrological Remediesஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்!

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்!

ஏழேழு ஜென்மத்து பாவத்தைப் போக்கும் ஏலக்காய் பரிகாரம்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கிரக நிலைகளின் மாற்றங்கள் காரணமாக கஷ்டங்கள் வரும். அப்படி கஷ்டமே இல்லாத மனிதனும் இல்லை, வாழ்க்கையில் எல்லா நாளுமே சந்தோஷமாக இருந்தேன் என்று சொல்லும் நிலை கூட யாருக்கும் இல்லை. கஷ்ட காலங்களை கடந்து வாழ்க்கையில் முன்னேறிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள். சரி, இந்தப் பதிவில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்காலம் வாங்க.

பாவம் நீங்க காகத்திற்கு வைக்க வேண்டிய உணவு:

வாழ்வில் வற்றாத செல்வம் கிடைக்க, வருமானம் பெருக, வீட்டில் இருக்கக்கூடிய சின்ன பிரச்சினையில் இருந்து பெரிய பிரச்சனை வரை ஒவ்வொன்றாக எல்லாம் சரியாக, காகத்திற்கு ஏலக்காய் கலந்த உணவை வைக்க வேண்டும். ஏலக்காயை அப்படியே கொண்டு போய் முழுசாக வைத்தால் காகம் எடுத்து சாப்பிடாது. ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஏலக்காய் தூளை குறிப்பாக உளுந்து வடையில் கலந்து இனிப்பு வடையாக செய்து காகத்திற்கு வைக்கலாம்.

வடையை சின்ன சின்னதாக கிள்ளி காகத்திற்கு வைத்து விடுங்கள். காகம் விருப்பமாக வந்து இந்த வடையை சாப்பிட சாப்பிட உங்களுடைய கஷ்டங்கள் படிப்படியாக குறையும். காகத்தைத் தவிர மற்ற பறவைகள் வந்து சாப்பிட்டாலும் தவறு ஒன்றும் கிடையாது. பொதுவாகவே முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற தயிர் சாதத்தை காகத்திற்கு வைக்கலாம் என்று சொல்லுவார்கள். அந்த தயிர் சாதத்தோடு இந்த வடையை சேர்த்து காகத்திற்கு வைப்பது இன்னும் சிறப்பு. ஏலக்காய் வாசம் நிறைந்த வேறு எந்த பொருளை காகத்திற்கு வைத்தாலும் அது குடும்ப கஷ்டத்தை குறைக்கும். வீட்டிலேயே உங்கள் கையால் அந்த உணவை சமைத்து வைக்க வேண்டும்.

குறிப்பாக இந்த பரிகாரத்தை அமாவாசை தினத்தன்று செய்தால் முன்னோர்களின் சாபம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நாட்களிலும் ஏலக்காய் சேர்த்த உணவு பொருளை காகத்திற்கு வைக்கலாம். இதன் மூலம் உங்களை பின்தொடரும் பெண் சாபம், விதவை சாபம், பூமி சாபம், பிரேத சாபம், குலதெய்வ சாபம், என்று 13 வகையான சாபங்களில் எது உங்களுடைய ஜாதக கட்டத்தில் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

ஏலக்காய் கலந்த பலகாரத்தை காகத்திற்கு வைப்பதன் மூலம் நமக்கு அதிக செலவும் கிடையாது. இதன் மூலம் புண்ணியத்திற்கு புண்ணியமும் சேரும். செய்த பாவத்திற்கான கணக்குகளும் படிப்படியாக தீரும். வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் யார் கையாலும் இதை காகத்திற்கு கொண்டு போய் வைக்கலாம். ஆனால் எச்சில் படுவதற்கு முன்பு முதலில் காகத்திற்கு இந்த உணவை வைத்து விடுங்கள்.

இப்படி எத்தனை நாட்கள் உங்களால் செய்ய முடியுமோ, எப்போதெல்லாம் இதுபோல காகத்திற்கு ஏலக்காய் சேர்த்த உணவை வைக்க முடியுமோ அப்போதெல்லாம் வைத்துக் கொண்டே இருக்கலாம். வளமான வாழ்வு நிரந்தரமாக உங்களுடனே இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காமல் இந்த பரிகாரம் காலங்காலத்திற்கும் உங்களை காத்து நிற்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 1 =

Most Popular