உடனடி பலன் தரும் பரிகாரங்கள்!

9262

உடனடி பலன் தரும் பரிகாரங்கள்!

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, அப்படி செல்லும் காரியம் தடையில்லாமல் முடிவடையும்.

புதிய வீடு அல்லது கடைகளுக்கு: முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு, உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால் சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு, ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய் வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நோய் விலகும்.

கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு: ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள கோர்ட் வழக்கு தீர்வு கிடைக்க, கோர்ட்டுக்கு செல்லும் போது விநாயகரை வழிபட்டு செல்ல வேண்டும். இல்லையென்றால் ஆஞ்சநேயரை வழிபடலாம்.

முழு ஞானம் பெற்ற ஞானி தான் முற்பிறவியில் அரசமரம். நல்ல குருமார்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள், வாரந்தோறும் வியாழக்கிழமையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் அரச மரத்தை தொடாமல் 108 முறை வலம் வர வேண்டும். மேலும், தூபம் தீபம் வைத்து, 10 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நல்ல குரு அமைவார்.

குளிகை நேரத்தில் சுப காரியங்கள் ஆரம்பித்தால் வெற்றி உண்டாகும். குரு சாபம் நீங்க குருவை உணவருந்த வைத்து அவருக்கு வஸ்திர தானம் தாம்பூலம் கொடுத்து ஆசிர்வாதம் பெற்றால் குரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது திருநீற்றுப் பச்சிலை ஒன்றை பறித்து பாக்கெட்டில் வைத்துச்செல்ல சகல காரியங்களும் வெற்றி பெறும்.

தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் முதல் நாளே தயிரில் ஊற வைத்த கையளவு கருப்பு உளுந்துடன் சிறிது வெல்லப்பொடி சேர்த்து, அரச மரத்தின் அடியில் இட்டு விட்டு திரும்பி பார்க்காமல் செல்ல வேண்டும். காலை முதல் பிற்பகல் 12 மணிக்குள் செய்யலாம். அப்படி செய்வதன் மூலமாக பணத்தேவைகள் பூர்த்தியாகும்.