Tuesday, November 7, 2023
HomeHealthy Recipesஇஞ்சி பூண்டு புதினா நீர்

இஞ்சி பூண்டு புதினா நீர்

தேவையான பொருட்கள்:

  1. இஞ்சி – 50 கிராம் (தோல் நீக்கியது)
  2. பூண்டு – 50 கிராம் (தோல் நீக்கியது)
  3. எலுமிச்சைப் பழம் – ஒன்று (சாறு பிழியவும்) 
  4. தேன் – ஒரு டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – 650 மில்லி லிட்டர்
  6. புதினா இலை – 10.

செய்முறை: இஞ்சியுடன் பூண்டு சேர்த்து இடிக்க வேண்டும். அதனுடன் 650 மில்லி தண்ணீர் சேர்த்து, கசக்கிய புதினா இலைகளும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு 200 மில்லி நீராக வற்றியதும் வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து இளஞ் சூடாகக் காலை வேளையில் 50ல் இருந்து 100 மில்லி வரை பருகலாம்.

பயன்கள்: 

இது செரிமான மண்டலம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். சிறந்த நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு நீங்க உதவும்; இதய தமனி அடைப்பைச் சரி செய்யும்; தொற்று நோய்களுக்கு மருந்தாகும். கருப்பை கோளாறுகளைச் சரி செய்யும். முகம் வசீகரமாகும்; ஆழ்ந்த தூக்கம் வரும்.

இஞ்சியின் பயன்கள்:

தினந்தோறும் இஞ்சியை காலையில் சாப்பிட்டு வர உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செரிமான பிரச்சனை சரியாகும். பசி உணர்வு அதிகரிக்கும். சிறிதளவு இஞ்சியை எடுத்து அரைத்து நன்றாக பேஸ்ட் செய்து நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றை தலைவலி சரியாகும். ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர ஆஸ்துமா பிரச்சனை சரியாகும்.

அஜீரணக் கோளாறுகள் சரி செயப்படும். நெஞ்சு கரிப்பு, நெஞ்சு எரிச்சல் பிரச்சனைக்கு இஞ்சி முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இஞ்சி டீ குடித்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரத்த நாளங்கை விரிவடையச் செய்யும் தன்மை இஞ்சிக்கு உண்டு. இதனால் ரத்த கொதிப்பு பிரச்சனை சரியாகிறது. இதன் விளைவாக ரத்த ஓட்டம் சீராகும். இஞ்சியில் பொட்டாஷியம் எனும் வேதிப்பொருள் உள்ளதால் இரத்த கொதிப்பு குறைகிறது.

இஞ்சியில் வைட்டமின் ஏ, சி, பி6, பி12, கால்சியம், சோடியம், இரும்புச் சத்து ஆகியவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், சீராகவும் வைக்க இஞ்சி பயனுள்ளதாக இருக்கிறது.

புதினாவின் நன்மைகள்:

வாய்வுத் தொல்லை பிரச்சனையை சரி செய்கிறது. சளி, இருமல் பிரச்சனைகளுக்கு மருந்தாக புதினா பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் புதினாவை பக்குவம் செய்து சாப்பிட்டு வரலாம். அப்படி செய்வதன் மூலமாக ஆஸ்துமா நோய் நீங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 2 =

Most Popular