Saturday, October 14, 2023
HomeAstrological Remediesகண் திருஷ்டி நீங்க இலை பரிகாரம்!

கண் திருஷ்டி நீங்க இலை பரிகாரம்!

விழுந்து போன வாழ்க்கையை மீட்டெடுக்க இந்த மூன்று இலை போதும். இந்த மூன்று இலை உங்கள் கையில் இருந்தால் போதும் எப்பேற்பட்ட ஆபத்திலிருந்தும் தப்பித்து விடலாம்.

நாம் பலரை சந்தித்திருப்போம் நன்றாக வாழ்ந்து தான் கொண்டிருப்பார்கள். குடும்பம், பணம், சொத்து என்று அவ்வளவு அமைதியான ஒரு சந்தோசமாக இருப்பார்கள். திடீரென ஒருநாள் மொத்தமாக எல்லாம் போய் நொடிந்து ஒன்றும் இல்லாமல் ஆகி விடுவார்கள். இது பணம் வைத்திருப்பவர்களுக்கு தான் என்று இல்லை நாம் நன்றாக உடை உடுத்திக் கொண்டு இல்லை அலங்காரம் செய்து கொண்டு போகும் போது யாராவது பார்த்து இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்க என்கிற இந்த ஒரு வார்த்தை சொன்னால் போதும், அடுத்த நாள் உங்களால் எந்திரிக்கவே முடியாது.

இந்த கண் திருஷ்டி ஆனது பலவகை உண்டு நாம் உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் ஆடை, வாங்கும் பொருள் என்று ஒவ்வொன்றிற்குமே தனித்தனியாக திருஷ்டி உண்டு. இதில் முக்கியமானது பண விரய திருஷ்டி. நம் கையில் பணம் இருக்கும் போது அல்லது நம் வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கும் போது யாராவது பார்த்து, இவர்களிடம் பணம் இருக்கிறது என்று நினைத்தால் அல்லது அவர்களுக்கென்ன பணப் புழக்கம் தாராளமாக இருக்கும் என்று சொன்னாலும் போதும் அந்த பணம் உங்களிடம் தங்காமல் வீண் விரயம் ஆகிவிடும்.

இந்த பண விரைய கண்திருஷ்டி ஆனது வந்து விட்டால் அவர்களால் வாழ்க்கையில் முன்னேறுவது மிகவும் சிரமம். பணம் தானே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளது பணம் இல்லாமல் நம்மால் எதை வாங்க முடியும் எதை செய்ய முடியும். ஆகையால் தான் மத்த திருஷ்டிகளை விட இந்த பண விரயம் திருஷ்டி மிகவும் ஆபத்தானது
சொல்லும் வார்த்தைகள் எல்லாம் இப்படி கண் திருஷ்டியாகும் என்று சொல்ல முடியாது. மனதில் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு, நாம் நன்றாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் சொல்பவர்களின் வார்த்தை கட்டாயம் ஆக பயங்கரமான கண் திருஷ்டியாக மாறி நம்மை தாக்கும்.

கண் திருஷ்டி நீங்க இலை பரிகாரம்:

இந்த இலை பரிகாரத்திற்கு நமக்கு தேவை மூன்று இலைகள். அது எருக்கன் இலை, வேப்ப இலை, துளசி இலை இந்த மூன்று இலைகளையும் விரல் நகம் படாமல் எடுத்துக் கொள்ளுங்கள் (அதாவது இலையை நகர்த்தால் கிள்ளக் கூடாது). இந்த மூன்று இலையும் நன்றாக கசக்கி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறுடன் பசுங்கோமியம் கலந்து கொள்ள வேண்டும். பசுங்கோமியம் கிடைக்காதவர்கள் கங்கா திருத்தம் வாங்கி கலந்து கொள்ளலாம். இது நாட்டு மருந்து காய்களில் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, இந்த மூன்று தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த மூன்று நாட்களில் ஏதாவது ஒரு நாளில் இந்த மூன்று இலைகளின் சாரில் பசுங்கோமியத்தை கலந்து நம் வீட்டை சுற்றியும், வீட்டிற்கு உள்ளயேயும் தெளித்து விட வேண்டும். தொழில், வியாபாரம் செய்யும் இடங்களிலும் இதை தெளித்து விடலாம். இதை தொடர்ந்து 9 வாரங்கள் செய்ய வேண்டும் (வாரத்தில் ஏதாவது ஒரு நாள் மட்டும் ) தவறாமல் செய்து விடுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 9 =

Most Popular