Monday, October 16, 2023
HomeAstrological Remediesதீராத நோய் நீங்க பரிகாரம்!

தீராத நோய் நீங்க பரிகாரம்!

தீராத நோய் நீங்க பரிகாரம்!

செவ்வாய்க்கிழமையில் இந்த பொருளை ஒரு கைப்பிடி மட்டும் எடுத்து வைத்தால் போதும், உங்களை பிடித்திருக்கும் பிணி, பீடை, தரித்திரம் எல்லாம் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் அதிசயம் நடக்கும்.

நம் வீட்டில் பெரியவர்கள் ஒவ்வொன்றையும் நாள் கிழமை பார்த்து தான் செய்தார்கள். அப்படி பார்த்து பார்த்து செய்ததால் தான் அவர்கள் எந்த துன்பத்திற்கும் ஆளாகாமல் அழகான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் நாம் அப்படி எதையுமே பார்ப்பதில்லை, எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டோம். அப்படி மாற்றிக் கொண்ட தன் விளைவு தான் என்று எவ்வளவு பணம் காசு இருந்தும் சிலரால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாமல், வைத்திய செலவு, வீண் விரையம் ஆகி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்வார்கள். ஒரு மனிதன் எவ்வளவு சம்பாதிக்கிறான், எவ்வளவு சொத்து சேர்த்து வைக்கிறான் என்பது எல்லாம் முக்கியமில்லை. எந்த அளவிற்கு உடல் ஆரோக்கியத்துடன் நோய் நொடி இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான் என்பது தான் இன்றைய காலக் கட்டத்தில் மிகவும் முக்கியம். இந்த நோய் நொடி பிணி பீடை தரித்திரம் போன்ற எதுவும் நம்மை நெருங்காமல், நல்ல ஆரோக்கியத்துடன் வளமான வாழ்க்கை வாழ்வதற்கு இந்த துவரம் பருப்பு பரிகாரம் நல்ல பலனை கொடுக்கும்.

ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதே போல இந்த துவரம் பருப்பு தானமானது, நீண்ட நாள் நோயின் பிடியில் இருந்து மீளாதவர்களை கூட மீட்டு தரும். அது மட்டும் இன்றி, வீட்டிற்க்கு செல்வ வளத்தையும் தரக்கூடியது இந்த துவரம் பருப்பு பரிகாரம்.

தீராத நோய் நீங்க பரிகாரம்:

செவ்வாய்க்கிழமையில் துவரம் பருப்பு வாங்க வேண்டும். வாங்கிய துவரம் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து வைக்க வேண்டும் . இதை போல் வாரம், வாரம் செவ்வாய்க் கிழமையில் துவரம் பருப்பை கொஞ்சமாவது வாங்கி அதில் கைப்பிடி பருப்பை எடுத்து வைத்து கொள்ளுங்கள். அது ஒரு குறிப்பிட்ட அளவு சேர்ந்தவுடன், அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு அதை தானமாக கொடுத்து விடுங்கள். பல காலமாக தீராத வியாதியால் சிரமம் அனுபவிப்பவர்கள் இந்த தானத்தை செய்தால் சீக்கிரம் குணமாவார்கள்.

செவ்வாய்க்கிழமையில் துவரம் பருப்பு வாங்கி பயன்படுத்தினால் குடும்பத்திற்கு மிகவும் நல்லது. இந்த துவரம் பருப்பு அன்னபூரணி தாயாரின் பூரண அருள் பெற்ற பொருள். வெள்ளிக் கிழமையில் வாங்கும் உப்பு எப்படி மகாலட்சுமி தாயாருக்கு உகந்த பொருலோ, அதே போல் செவ்வாய் கிழமையில் வாங்கும் துவரம் பருப்பிற்கும் செல்வதை தரும் பலன் உண்டு. செவ்வாய் கிழமையில் இந்த துவரம் பருப்பை தானமாக கொடுத்தாலும் வீட்டில் செல்வம் பெருகும்.

நம் வழக்கத்திலும் அன்றிலிருந்து இன்று வரை வீட்டில் எந்த விசேஷமானாலும் அது நல்லது, கெட்டது என எதுவாக இருந்தாலும் இந்த துவரம் பருப்பை சேர்க்காமல் எந்த சமையலும் இருக்காது. இந்த பரிகாரத்திற்கு என இல்லாமல், பொதுவாகவே செவ்வாய் கிழமையில் துவரம் பருப்பு வாங்கி வைத்தால் நல்லது. இந்த துவரம் பருப்பை தானமாவும் தந்து, வீட்டில் நோய், தரித்திரம் விலகி, செல்வம் பெருகி நல்ல சுகமான வாழ்வை வாழுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − nine =

Most Popular