கோடிக்கணக்கான கடன் நீங்க பரிகாரம்!
காலமும், நேரமும், கிரக நிலைகளின் மாற்றங்கள் காரணமாக கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. ஏழை கோடீஸ்வரனாகும் நிலையும், கோடீஸ்வரன் ஏழையாகும் நிலையும் கால நிலை மாற்றம் காரணமாக ஏற்படுகிறது. அப்படி ஏற்றத்தாழ்வுகள் வரும் போது யாரையும் இழிவாகவும், குறைத்தும் மதிப்பிடக்கூடாது. சரி, கடன் வந்துவிட்டது. அதனை எப்படி அடைப்பது என்று புலம்பிக் கொண்டிருக்கும் நமக்கு அதற்கான வழியும் பிறக்கும். அதுவரையில் சும்மா இருக்கணுமா என்றால், இல்லை. அப்படி சொல்ல வரவில்லை. அதற்காக இறைவனை வழிபட்டு அதற்குரிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.
அது என்ன என்பது பற்றி பார்க்கலாம் வாங்க. கோடிக்கணக்காக இருக்கும் கடனை கூட சுலபமாக அடைத்து விடலாம். இந்த பரிகாரத்தை செய்தால். உங்களுக்கு கோடி ரூபாய் கடன் இல்லை என்றாலும், உங்களுடைய தகுதிக்கு கடன் வாங்கி வைத்திருப்பீர்கள் அல்லவா. அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு மிக மிக எளிமையான முறையில் இந்த பாசிப்பருப்பு பரிகாரத்தை செய்து பாருங்கள். கடன் கஷ்டம் ஏதாவது ஒரு வகையில் உங்களை விட்டுப் போய்விடும். பெரிய பெரிய பரிகாரங்கள் பூஜைகள் எல்லாம் செய்ய முடியாது என்பவர்களுக்கு, இந்த எளிமையான பரிகாரம் உடனடியாக கைமேல் பலனை கொடுக்கும்.
கடன் தீர்க்கும் பாசிப்பருப்பு பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் பாசிப்பருப்பு. இந்த பருப்பை ஒரு கிலோ அளவு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சிறிய கிண்ணத்தில் 1 கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெள்ளம் அல்லது நாட்டு சர்க்கரை உங்கள் விருப்பம் தான். ஏதோ ஒன்று போட்டு அதில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலை இது நன்றாக ஊறிவிடும் அல்லவா. இதை கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு உங்கள் கையால் கொடுத்து விட வேண்டும். கடனெல்லாம் தீர்ந்து போக வேண்டும் என்று அந்த கோமாதாவிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
அந்த கோமாதாவின் ஆசிர்வாதம் மனப்பூர்வமாக உங்களுக்கு கிடைக்கும். இத்தனை நாட்கள் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பது கிடையாது. உங்கள் கையால் பாசிப் பருப்பை எவ்வளவு பசு மாட்டிற்கு கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு செல்வ செழிப்பு உங்களுக்கு கூடிக்கொண்டே செல்லும். கடனை எல்லாம் திருப்பி கொடுத்துவிடுவீர்கள். கஷ்டம் என்று வருபவர்களுக்கு உங்கள் கையால் உதவி செய்யும் அளவிற்கு கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றால் பாருங்களேன். இதே பாசிப்பருப்பை முடிந்தவர்கள் தானமாக கொடுக்கலாம். புதன்கிழமை அன்று பாசிப்பருப்பு தானம் கொடுக்க வேண்டும்.
யாருக்கு தானம் கொடுப்பது?
கோவிலில் இருக்கும் குருகளுக்கு தானம் கொடுக்கலாம். ஆசிரமங்களுக்கு தானம் கொடுக்கலாம். ஏழை குடும்பத்திற்கு ஒரு கிலோ பாசிப்பருப்பு வாங்கி தானம் கொடுக்கலாம். அதை அவர்கள் சமைத்து சாப்பிட்டால் உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் தீரும். வறுத்த பாசிப்பருப்பு கடைகளில் விற்கும் அல்லவா அதை வாங்கி காக்கை குருவிகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப நல்லது. பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு சாப்பிட கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம். ஆசிரமங்களுக்கு பாசிப்பருப்பு பாயாசம் உங்கள் கையாலேயே செய்து கொண்டு போய் அன்னதானம் செய்ய வேண்டும்.
பாசிப்பருப்பை வாங்கி உங்களால் எந்த அளவுக்கு தானம் செய்ய முடியுமோ அந்த அளவுக்கு தானம் செய்து வாருங்கள். பண கஷ்டங்கள் எல்லாம் குறையும். வீட்டில் இருக்கும் மன கஷ்டங்கள் எல்லாம் தீரும். சந்தோஷம் நிறைவாக இருக்கும்.
