Tuesday, October 17, 2023
HomeAstrological Remediesகாசு, பணம் சேர பரிகாரம்!

காசு, பணம் சேர பரிகாரம்!

உங்க மணி பர்சில் இதை 2 துண்டு வச்சு பாருங்க வராத பணம் கூட வந்து சேரும்! நம்மிடம் பணம் புழங்க பணத்துடன் இருக்க வேண்டியது என்ன?

கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் பல வழிகளில் கரைந்து போய் இருக்கும் மாத கடைசியில்! ரெண்டு வருடத்திற்கு முன்பு குறைந்த சம்பளம் வாங்கும் பொழுது பத்தாத பணம், இப்போது இரட்டிப்பாக வருமானம் வந்தும் பத்தவில்லையே என்று நினைப்பவர்கள் தான் இங்கு ஏராளம்! உழைக்கும் பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும், பணத்தை மென்மேலும் பெருக்கவும் செய்யக்கூடிய அற்புத சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு. அது என்ன பொருள்? எப்படி பயன்படுத்த வேண்டும்?

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தாங்காமல் போவதற்கு மகாலட்சுமி கடாட்சம் நமக்கு இல்லை என்பது தான் அர்த்தமாக இருக்கிறது. மகாலட்சுமி நிரந்தரமாக ஓரிடத்தில் வாசம் செய்வதற்கு சில பொருட்கள் உதவி செய்கிறது. அத்தகைய பொருட்களில் ஒன்றாக இருக்கக்கூடியது கிராம்பு! இது மசாலா பொருட்களில் சேர்க்கக்கூடிய ஒரு விஷயமாக மட்டுமே நாம் பயன்படுத்தி வந்திருக்கிறோம் ஆனால் ஆன்மீகத்தில் கிராம்பு மிகப்பெரிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது.

கிராம்பு இருக்கும் இடங்களில் எல்லாம் பணம் புழங்கும் என்கிற ஒரு சூட்சமமான குறிப்பு உண்டு. கிராம்பு மூலிகை சத்து மட்டும் அல்லாமல் பணத்தை ஈர்க்கக்கூடிய ஒரு அதி அற்புதமான பொருளும் கூட! பணத்துடன் இதை சேர்த்து வைக்கும் பொழுது பணம் வீண் விரயம் ஆகாது என்கிற நம்பிக்கையும் உண்டு.

உங்களுடைய மணி பர்சில் ரெண்டு துண்டு கிராம்பை போட்டு பணத்துடன் சேர்த்து வைத்தால் பணம் வீண் விரயம் ஆகாது. மென்மேலும் சேரும் என்பது நம்பிக்கை. மணி பர்ஸ் மட்டும் அல்லாமல் வீட்டில் நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் கூட இது போல கிராம்பு துண்டுகளை ஆங்காங்கே போட்டு வைக்கலாம். குறிப்பாக வியாபாரம், தொழில் செய்பவர்கள் கல்லா பெட்டிகளில் பணத்துடன் சேர்த்து சிறிதளவு கிராம்பு துண்டுகளை போட்டு வைக்கலாம்.

மேலும் பீரோவில் பணம் வைக்கும் இடங்களில் கூட கிராம்பு துண்டுகளை போட்டு வைத்தால் பணம் வந்து சேரும். பூஜை அறையில் கண்டிப்பாக கிராம்பு இருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அங்கு மகாலட்சுமி தங்கும் இடமாக இருப்பதால் கிராம்பு போட்டு வைத்தால் மகாலட்சுமி அருள் கிடைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. மகாலட்சுமிக்கு வைக்கும் கலச தண்ணீரில் சிறிதளவு பச்சை கற்பூரம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு வைத்தால் நறுமணமாக இருக்கும். அங்கு மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். வெள்ளிக் கிழமையில் கிராம்பை மாலையாக கோர்த்து லக்ஷ்மி தேவிக்கு சாற்றி வழிபட்டு வந்தால் வேண்டியது நிறைவேறும்.

சமைக்கும் சமையலிலும் அடிக்கடி கிராம்பு சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்முடைய சிந்தனையும் தீய வழியில் செல்லாது. இனிப்பு பொருட்களில் கிராம்பு சேர்க்கப்படுவது ரொம்பவே நல்ல ஒரு விஷயம். லட்டு, பாயாசம் போன்ற இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் பொழுது அதில் சிறிதளவு கிராம்பு சேர்ப்பது உண்டு. இதை சாப்பிடும் பொழுது நமக்கு இறை சிந்தனை அதிகரிக்குமாம். கிராம்பின் மணம் மனதை ஒருமுகப்படுத்த கூடிய தன்மை கொண்டது. கிராம்பு மருத்துவ ரீதியாக மட்டுமல்லாமல், உள அளவில் நமக்கு நன்மைகளை செய்யக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய கிராம்பை உடன் வைத்திருந்தால் உழைக்கும் எண்ணமும் நமக்கு அதிகரிக்குமாம், இதனால் வருமானம் உயர்ந்து, பணமும் பெருகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =

Most Popular