Thursday, October 19, 2023
HomeAstrological Remediesபணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

பணம் தங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

இந்த 5 பொருட்கள் சேர்த்த மை உங்கள் வீட்டில் இருந்தால், 5 தலைமுறைக்கு வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் வராது. உங்கள் வம்சமே செல்வ செழிப்போடு வளரும்.

நிரந்தரமான வருமானத்திற்கு, வரக்கூடிய பணம் சேமிப்பில் தங்குவதற்கு, பணம் வீண்விரயம் ஆகாமல் இருப்பதற்கு, அதோடு மட்டுமல்லாமல் நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கும் பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கும் சேர்த்து ஒரு சிறிய பரிகாரம்

நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய இந்த 5 பொருட்களை எடுத்து இந்த மையை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தயார் செய்த மையை தினந்தோறும் மகாலட்சுமியை நினைத்து நெற்றியில் இட்டு வர பணக்கஷ்டம் என்பதே உங்கள் வீட்டிற்குள் வராது. நம்மை பணக்கஷ்டத்திலிருந்து காப்பாற்ற போகும் அந்த குறிப்பை தெரிந்து கொள்வோமா.

இந்த மை தயார் செய்ய தேவையான ஐந்து பொருட்கள். குப்பைமேனி இலை, மருதாணி இலை, தாமரைப் பூ இதழ், மல்லிகைப்பூ, ஜவ்வாது. அவ்வளவு தான். இந்த ஐந்து பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஜவ்வாதை மட்டும் தனியாக வைத்து விடுங்கள். மீதம் இருக்கும் நான்கு பொருட்களையும் நிழலிலேயே நன்றாக உலர வைக்க வேண்டும். அளவு என்பது உங்களுடைய விருப்பம் தான். எல்லா பொருட்களிலும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்துக் கொண்டால் கூட போதும்.

காய்ந்த பின் இந்த நான்கு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளுங்கள். இந்த பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு கொஞ்சமாக நெய் விட்டு அதில் ஜவ்வாது போட்டு நன்றாக கலந்தால் ஒரு மை உங்களுக்கு கிடைத்து விடும். இரும்பு அல்லாத ஏதாவது ஒரு டப்பாவில் இந்த மையை சேகரித்து மகாலட்சுமி தாயாரின் பாதங்களில் வைத்து ஒரு நெய் தீபம் ஏற்றி 108 முறை மகாலட்சுமியின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து இந்த மைக்கு உரு ஏற்றி விடுங்கள். ‘ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே’ போற்றி என்ற மந்திரத்தை கூட சொல்லலாம்.

அவ்வளவு தான் மை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். இந்த மையை கையில் தொட்டு நெற்றியில் வைக்கக் கூடாது. சிறிய மாமரத்து குச்சி ஒன்றை தயாராக எடுத்து வாருங்கள். உங்கள் வீட்டின் அருகில் மாமரம் இருக்கும் அல்லவா. அதிலிருந்து உடைத்த சின்ன குச்சு போதும்.

சிறிய வத்திக்குச்சி அளவு குச்சி இருந்தால் கூட போதும். அந்த குச்சியால் இந்த மையைத் தொட்டு தினம்தோறும் நெற்றியில் குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் நினைத்து இட்டு வர சகல விதமான நன்மைகளும் உங்களைத் தேடி வரும். சகல சௌபாக்கியங்களும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். மகாலட்சுமி கோடி கோடியாக வரங்களை கொட்டிக் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த மையை தயார் செய்து உங்களுடைய கணவருக்கோ குழந்தைகளுக்கு இட்டுவிடலாம். இந்த மையை ஆண்களும் இட்டுக் கொள்ளலாம். பெண்களும் இட்டுக் கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − eleven =

Most Popular