கோடி கோடியாய் கடன் இருந்தாலும் அடைக்க பரிகாரம்!
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன் இருக்கும். கடன் இல்லாதவர்கள் என்று பார்த்தால் ஒரு சிலர் மட்டும் தான் இருப்பார்கள். ஜாதக ரீதியாக கிரக நிலைகளின் சுழற்சி காரணமாக கடன் வாங்குவதும், அடைப்பதும் இருக்கும். கோடி ரூபாய் கடனாக இருந்தாலும் கூட இந்த ஒரு இலை இருந்தாலும் போதும் எளிதாக அடைத்துவிடலாம்.
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் கடனை அடைக்க முடியவில்லையே என்று எத்தனையோ பேர் புலம்புவது உண்டு. ஆனாலும் கடன் அடைந்த பாடு இல்லை மேலும் மேலும் அது தொடர்ந்து கொண்டே தான் கொண்டிருக்கிறது. இப்படி எல்லாம் நினைத்து வருத்தப்படுபவர்கள் இந்த இலை பரிகாரத்தை செய்து பார்க்கலாம். நிச்சயம் எவ்வளவு கடனாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது.
கடன் அடைய செய்யப்படும் இந்த பரிகாரத்தை வளர்பிறை அமாவாசைக்கு அடுத்து வரும் திங்கள்கிழமையில் செய்ய வேண்டும். வளர்பிறை அமாவாசை எந்த கிழமையில் வந்திருந்தாலும் பரவாயில்லை, ஒரு வேளை அது திங்கட்கிழமையே வந்திருந்தாலும் கூட அதற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். திங்கள் கிழமையில் காலை 7 மணிக்குள்ளாக எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் கண்டிப்பாக சிவலிங்கம் உங்களது வீட்டில் இருக்க வேண்டும். சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்று கேட்டால் அதெல்லாம் வழிபடலாம்.
ஆனால், அது ஒரு அடி அளவு மட்டும் உள்ள சிவலிங்கமாக இருக்க வேண்டும். அதற்கு மேல் உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடுவதாக இருந்தால் அதற்கான விதிமுறைகளின்படி வழிபடலாமே அன்றி விக்ரகங்களை வைத்து வழிபடக் கூடாது என்ற எந்த ஐதீகமும் கிடையாது. சிவலிங்கம் இல்லையென்றால், சிவன் கோயில்களில் தனியாக என்று சிவலிங்கங்கள் கோயிலைச் சுற்றி வைத்திருப்பார்கள். அங்கு யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். அது போல கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இந்த பரிகாரத்திற்கு ஊமத்தம் பூ இலை வேண்டும். இதில், பல வண்ணங்கள் உள்ளது. அதில் எதை வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கண்டிப்பாக 108 இலைகள் வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு சிவலிங்கத்தின் முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 108 ஊமத்த இலைகளையும் ஒவ்வொரு இலையாக எடுத்து லிங்கத்தின் மீது வைத்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் தொடர்ந்து சொல்ல வேண்டும்.
ஓம் ருண முத்தேஸ்வர மகாதேவாய நமஹ
இந்த மந்திரத்தை ஒவ்வொரு இலையாக எடுத்து சிவலிங்கம் மீது வைக்கும் போது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பிறகு லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பாலபிஷேகம் உங்களுக்கு எப்படி செய்ய தெரியுமோ அது போலவே செய்து கொள்ளலாம். இவையெல்லாம் செய்த பிறகு ஊமத்தம் இலைகளை எல்லாம் லிங்கத்தின் பாதத்திலே வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கி பரிகாரத்தை முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 16 திங்கள் கிழமையில் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்த பிறகு இருக்கும் அந்த ஊமத்தம் இலைகளை அடுத்த நாள் யாரும் கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்கிய உடனே கடன் அடைக்க கூடிய அந்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.