துலாம் ராசிக்காரர்கள் வீடு கட்ட சாரங்கபாணி வழிபாடு!

138

துலாம் ராசிக்காரர்கள் வீடு கட்ட சாரங்கபாணி வழிபாடு!

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிபதி சுக்கிரன். ரிஷப ராசியையும் சுக்கிர பகவான் தான் ஆளுகிறார். வீடு எப்போ கட்ட வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொல்வீர்கள். அந்த இடத்திற்கு வேண்டும் என்றே விலையை ஏத்துறாங்க. தானா விலை குறையும். அப்போது வீடு வாங்கலாம், கட்டலாம் என்று இருப்பீர்கள். சிட்டியில் வாங்குறதுக்குப் பதிலாக கிராமத்து பக்கம் சென்று அங்கு வாங்கலாம் என்று நினைப்பீர்கள்.

உங்கள் ராசியான துலாத்திற்குரிய அதிபதியே சுக்கிரன்தான். கட்டிடங்களுக்கு உரியவனும் சுக்கிரன்தான். எனவே இந்த ராசியில் பிறந்தவர்களில் நிறைய பேர் இன்டீரியர் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் பிரகாசமாக இருப்பார்கள்.

எதைக் கொடுத்தாலும் அதை அழகாக்கித் திருப்பித் தருவீர்கள். வீட்டை அப்போது எப்படி அழகுபடுத்துவீர்கள் என்பதை சொல்லவே வேண்டாம். பழைய பொருளைக் கொடுத்தால் கூட பழமை மாறாமல் நவீனமாக காட்டுவீர்கள். துலாம் ராசிக்கு நான்காம் வீடான மகரச் சனிதான் வீட்டு விஷயத்தை நிர்ணயிக்கிறது. அதனால் சேரி (வேளச்சேரி, திட்டச்சேரி), பாக்கம் (காட்டுப் பாக்கம்), கரை (அணைக்கரை, பாலக்கரை) என்று முடியும் இடங்களில் இடமோ, வீடோ கிடைத்தால் தயங்காது வாங்குங்கள். தரை தளம் மட்டுமில்லாமல் எல்லா தளங்களும் உங்களுக்கு ஏற்றதாகும்.

தனி வீடாக அமைந்தால் ராஜயோகம் கிட்டும். தென் கிழக்கு, தெற்கு நோக்கி தலைவாசல் இருப்பது நல்லது. உங்கள் வீட்டு யோகத்தை நிர்ணயிப்பவர் சனி பகவானே ஆவார். அதிலும் உங்கள் துலாம் ராசியிலிருந்து நான்காம் இடமான மகரச் சனியே வீட்டு யோகத்தை தீர்மானிக்கிறார். சனிக்கும் பள்ளிகொண்ட பெருமாளுக்கும் தொடர்பு உண்டு.

அதிலும் சாதாரண மனிதருக்கு இறைவனே சிரார்த்தம் செய்த தலமெனில் அதற்கு இன்னும் சிறப்பு உண்டு. அப்படிப்பட்ட தலமான கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசித்து வாருங்கள். திருமழிசையாழ்வாருக்காக எழுந்தும் எழாமலும் சற்றே தலையை மேலே தூக்கி சேவை சாதிக்கிறார். பூலோக வைகுண்டமாம் கும்பகோணம் சார்ங்கபாணியை தரிசித்து வாருங்கள்.