கடன் நோய் எதிரி தொல்லை தீர்க்கும் ஆறாம் அதிபதி பரிகாரங்கள்!
ஆறாம் அதிபதி லக்னத்தில் நின்றால் செவ்வாய்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவனுக்கு பாலாபிசேகம் செய்து வழிபட வேண்டும். அப்படியிலை என்றால் செவ்வாய்கிழமை நித்ய பிரதோசமான 4.30-6.00 வரையிலான நேரத்திலும் பாலாபிசேகம் செய்யலாம்.
2-ல் செவ்வாய்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோஷவேளையில் நந்திக்கு அரிசிமாவில் அபிசேகம் செய்ய வேண்டும்
3-ல் நின்றால் செவ்வாய்கிழமை வரும் பிரதோச நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு வில்வ மாலை அணிவித்து வணங்க வேண்டும்.
4-ல் நின்றால் செவ்வாய்கிழமை பிரதோச நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோச நேரத்தில்ல சிவபெருமானுக்கு தயிர் அபிசேகம் செய்ய வேண்டும்.
5-ல் நின்றால் செவ்வாய் பிரதோச நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோச வேளையில் சிவபெருமானுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்ய வேண்டும்.
6 -ல் நின்றால் செவ்வாய் பிரதோச நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோச வேளையில் சிவபெருமானுக்கு நல்லெண்ணெயில் ஆறு அகல் விளக்குகள் சிவப்பு திரியிட்டு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
7-ல் நின்றால் செவ்வாய் கிழமையும் பிரசோஷமும் இணைந்த நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோஷவேளையில் சிவபெருமானுக்கு ரோஜா மாலை அணிவித்து வணங்க வேண்டும்.
8-ல் நின்றால் செவ்வாய்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் அல்லது செவ்வாய்கிழமை நித்ய பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு பச்சைக்கற்பூர அபிசேகம் செய்ய வேண்டும்.
9-ல் நின்றால் செவ்வாய்கிழமை பிரதோஷநாளில் அல்லது செவ்வாய்கிழமை நித்ய பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு புனுகு சாற்றி வழிபட வேண்டும்.
10-ல் நின்றால் செவ்வாய்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் அல்லது செவ்வாய்கிழமை நித்ய பிரதோஷ வேளையில் சிவனுக்கு மல்லிகை பவுல் அர்ச்சனை செய்த பிறகு ஒன்பது பேருக்கு தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும்.
11-ல் நின்றால் செவ்வாய் கிழமை பிரதோஷ நாளில் அல்லது செவ்வாய் நித்ய பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு சந்தன அபிசேகம் செய்து வழிபட வேண்டும்.
12-ல் நின்றால் சனிக்கிழமை வரும் பிரதோஷ நாளில் அல்லது சனிக்கிழமை நித்ய பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அபிசேகம் செய்ய வேண்டும்.