வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள் என்னென்ன?
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் கோயில் அல்லது ஆன்மீக மையங்களில் பகல் நேரங்களில் முழு மஞ்சள் நிற பரங்கிக்காய் தானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உடல் நல பாதிப்பு நீங்கும்.
கை நிறைய வருமானம் வந்தாலும், பணம் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால் தினந் தோறும் காலையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்ட்டுகள் வழங்க வேண்டும். அப்படி செய்தால், வீண் விரயம் ஏற்படுவது தடுக்கப்படும்.
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.
மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.
தற்கொலை எண்ணங்கள் இருந்து கொண்டே இருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களும் மூக்கில் துளை போடலாம். ஆனால், மூக்குத்தி அணிய தேவையில்லை.
வாகனங்களில் பயணம் செய்தால் கூடவே சிறிது காகித பூ எடுத்து சென்றால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்.
தினந்தோறும் அதிகாலையில் எழுந்தவுடன் தங்க நாணயம் அல்லது தங்கம் அல்லது ரூபாய் நோட்டுகள் கொண்ட படம் ஒன்றை பார்த்து வர செல்வம் பெருகும்.
இடது கை கீழே இருக்கும்படி தூங்கினால் ஆயுள் விருத்தி ஆகும்.
வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்துக் கொண்டாலோ பணப்புழக்கம் உயரும்.
இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க வேண்டும். அப்படி வைப்பதன் மூலமாக குழந்தை நன்றாக தூங்கும்.
சமையல் அறையும், படுக்கை அறையும் அருகருகில் இருப்பது போன்று அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும். இல்லறமும் சிறப்பாக இருக்கும்.
வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்கவிட்டால் துர் சக்திகள் நம்மை அண்டாமலிருக்கும்.
