ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்?

132

விநாயகர் தோற்றம் விநாயகர் என்றாலே தடைகளை தகர்த்தெறியும் தும்பிக்கை நாதன். அதிலும் விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகருக்கும் அவருடைய பக்தர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
விநாயகர் தான் இந்துக்களின் முழுமுதற் கடவுள் என்று மதிக்கப்படுபவர். அதிலும் ஒரு தனித்துவமான தோற்றத்துடன் விளங்கக் கூடியவர். யானைத் தலை, தொப்பை வயிறு, ஐங்கரம், தும்பிக்கை என்று இவரது அழகை கூறிக் கொண்டே போகலாம். அவரைப் பற்றிய புதிரான கதைகள், அவரின் தோற்றழகு எல்லாரையும் ஏன் உலகளவில் அவரை வணங்கச் செய்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் இந்த தோற்றத்தில் இருக்க காரணம் என்னவென்று தெரியுமா? அதன் பின்னால் மறைக்கப்பட்ட ரகசியம் என்னவென்று தெரியுமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
இந்த வடிவம் தான் உளவியலாளர்கள், புராணவியலாளர்கள் என்று ஒருவரையும் சும்மா விடவில்லை. பிள்ளையாரை நோக்கிய ஆராய்ச்சியில் அவர்களை முழுவதுமாக ஈடுபடுத்தியது.
பிரபஞ்ச அதிபதி
யோகிகள் ஸ்ரீ கணேஷனை பிரபஞ்சத்தின் அதிபதி என்று அறிவார்கள், எல்லா பெயர்களுக்கும் வடிவத்திற்கும் அப்பாற்பட்ட மிக உயர்ந்த யதார்த்தத்துடன் நம்மை இணைக்கும் அண்ட நுண்ணறிவு அவர் தான் என்பார்கள். எல்லா கடவுள்களுக்கும் இந்த ஒட்டுமொத்த உலகத்துக்கும் முழு முதல் கடவுளாக இருப்பவர்தான் விநாயகப் பெருமான்.
☘️​விநாயகரின் சக்தி
நமக்கு வழிகாட்டும் கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர். அவர் நம்மை பிரபஞ்சத்தின் சக்திகளுடன் இணைப்பதால் எல்லா இந்து சடங்குகளின் தொடக்கத்திலும் அவர் தான் முன் நிற்கிறார். விநாயகரின் வாகனம் சிறிய சுண்டெலி மட்டுமே இது நமக்கு அவர் சிறிய உயிரினங்களிலிருந்து பெரிய உயிரினங்கள் வரை மரியாதை செய்யக் கூடிய நபர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
☘️​கணபதி பொருள்
கண என்றால் ஒரு குழு என்றும் பதி என்றால் இறைவன் என்றும் அர்த்தம். கணபதியை வெளித்தோற்றமாக பார்க்கும் போது அவர் ஒரு யானை வடிவ உயிரினமாக தெரியலாம் ஆனால் இது வெறும் மேற்போக்கு பார்வை மட்டுமே. உள்ளுக்குள் அவர் அனைத்தையும் அறிந்த கடவுளாக திகழ்கிறார்.
இப்படி விநாயகர் உருவம் வெவ்வேறு விதமான விலங்குகளின் வடிவங்களில் காணப்படுவது வெவ்வேறு ஆன்மாக்களையும், ஆற்றல்களையும் வழங்குகின்றன. அவர் சிவனுக்கு மேல் உயர்ந்தவராக இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.
​முழுமுதற் கடவுளாக திகழ்கிறார்
கணேஷா என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. ஓம் கணேஷாய நமக எனும் மந்திரத்தை ஓதும் போது நமது உணர்வுகள், உறுப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து சக்தி பெறுகின்றனர். கணேஷ் என்ற வார்த்தை உலகளாவிய உண்மைக் கோட்பாடு ஆகும். இவை ஐந்து கூறுகளுடன் தொடங்குகின்றன. அவற்றில் விநாயகர் உள் சுயமாக முன்னிலை வகிக்கிறார்.
கணேஷ் என்ற சொல் கர்மாவின் இயக்கமாக, காலத்தின் ரிதமாக கூறப்படுகிறது. எனவே தான் கணபதி என்பவர் கர்மாவின் அதிபதி, நமது செயல்களின் பலன்களை விநியோகிக்கும் அண்ட நுண்ணறிவு. எனவே தான் விநாயகருக்கு நாம் சிறப்பாக எதைச் செய்தாலும் அது சிறக்கின்றனர்.
​கணேஷா, சிவன் மற்றும் சக்தி
நமக்கு எல்லாருக்கும் தெரியும் விநாயகர் சிவனின் மகன் ஆவார். சிவன் காளையின் அடையாளமாக கருதப்படுகிறார். ஆனால் விநாயகர் பலம் வாய்ந்த யானையாக கருதப்படுபவர். எனவே சிவனை விட சர்வ வல்லமை படைத்த அதிபதி விநாயகர் தான் என்கிறது மறைமுகமான உண்மை. ஆனால் வெளியுலகத்தில் சிவன் அவதாரம் எடுக்கிறார். இதனால் அவர் மோலோங்கி பேசப்படுகிறார். விநாயகர் மற்றும் சிவன் இருவரும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை கொண்டுள்ளனர். சிவன் மீறிய நிலையிலும், விநாயகர் அனைத்து சக்திகளையும் அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்.
தவறான கதை
ஆனாலும் சிவன் மற்றும் விநாயகரை பற்றிய கதை தவறான ஒன்று. சர்ச்சைக்குரியது. விநாயகர் சிறிய வயதில் சிவன் அவருடைய தலையை துண்டித்து விட்டதால் யானை தலை பொருத்தப்பட்டது என்று கூறுவர். இந்த விசித்திரமான கதை சரியான ஒன்று அல்ல.
சிவனும் விநாயகரும் இணைந்தவர்களே. சிவனுடன் இணையும் போது விநாயகருடனும் இந்த பிரபஞ்சத்துடனும் நாம் இணைந்து விடுகிறோம். விநாயகரின் தலை துண்டிக்கப்பட்ட விதம் நமக்கு அகங்காரத்தை விட வேண்டும் என்பதை பறைசாற்றுகிறது. அகங்காரம் இருந்தால் மனத தலை கவிழும் என்றும் அதே நேரத்தில் யானை தலை அவருக்கு வைக்கப்பட்டது இந்த உலகத்தில் எல்லா ஜீவ ராசிகளும் சமமானவர்களே என்பதை காட்டுகிறது.
கணேஷா பார்வதி அதாவது சக்தியின் மகன் என்பதால் அவருக்கும் நிறைய சக்திகள் இருப்பதை இது கூறுகிறது. விநாயகர் சக்தி வாய்ந்த தெய்வம் என்பது இதனால் புலப்படுகிறது.
பிரபஞ்சத்தின் மூலாதாரம்
விநாயகர் தான் பூமியை ஆளுகின்ற மூலாதாரம் என்பது தெரியுமா? இந்த பிரபஞ்சத்தின் வேரில் வசிக்கிறார். மேலும் குண்டெலி சக்தியை வைத்து ஆட்டிப்படைப்பவர். குண்டெலி சக்தி என்பது நம்முடைய தனிப்பட்ட ஒவ்வொருவரின் சக்தியாகும்.
விநாயகர் பூமியில் இருந்து எழுந்து எல்லையற்ற ஒளிக்கு அழைத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்.
சிவன்-சக்தி கணேஷா என்பது சிவன் மற்றும் சக்தியின் இணைப்பு உருவம். சிவனைப் போன்ற ஆட்சி தன்மையும் சக்தியை போன்று உயர்ந்த சக்தியையும் கொண்ட ஓட்டுமொத்த உருவம்.
அவரது இரண்டு துணைகள் சித்தி புத்தி என்று அழைக்கப்படுகிறார்கள். இரண்டுமே அறிவின் ஆற்றலை பறைசாற்றுகிறது.
தீபாவளி அன்று, அவருடன் லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியுடன் அவருக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விநாயகர் எல்லா தெய்வங்களுக்கும் அன்பானவர்.
காரியத் தடைகள் நீங்கும்
நமது தடைகளை நீக்கி நினைத்த காரியத்தை முடித்து தருவதில் அவருக்கு இணை அவரே. விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அவரை வழிபடுவது மேலும் சிறப்பு வாய்ந்தது.
எனவே இனி கவலை இல்லாமல் விநாயகரின் அண்ட நுண்ணறிவிடம் சரணடையுங்கள். அவர் கவலைப்படத் தேவையில்லாமல் எல்லா சாத்தியக் கூறுகளையும் உங்களுக்கு வழங்குவார். எல்லா சிரமங்களையும் அருளாக மாற்றி அருள் புரிவார்.
இந்த உண்மைகள் விநாயகரின் ஒரு சில சிறப்பே. இன்னும் அவரைப் பற்றி கூற ஏராளமாக இருக்கிறது. உங்கள் குடும்பத்துடன் விநாயகரை வழிபட்டு வாருங்கள். அவரின் அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு கிடைக்கப் பெறும். முழுமுதற் கடவுள் உங்களுக்கு முழுமையான பலன்களை அள்ளி வழங்குவார் என்பதில் ஐயமில்லை.
ஜெய் ஸ்ரீ கணேஷா