தேவையானவை : அரிசி – 1/2 டம்ளர், பால் – 1 டம்ளர், இடித்த வெல்லம் – 2 டம்ளர், தேங்காய்ப்பால் – 4 டம்ளர், பல் போல நறுக்கிய தேங்காய் பத்தைகள் – அரை மூடி, சுக்கு பவுடர் – 1 டீஸ்பூன், ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன், முந்திரி – 25, உலர்திராட்சை – 3 ஸ்பூன், சீவலாக துருவிய பாதாம் – 6, நெய் – தேவைக்கு.
செய்முறை: இடித்த வெல்லத்தை நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
அரிசியை ஊற வைத்து நைசாக கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை, ஒரு வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பவும்.
இலை கிழியாமல் இதனை பொட்டலம் போல மடித்து, நூல் அல்லது வாழைநாரில் கட்டி, இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும்.
வெந்த மாவு ஆறியதும் இலையிலிருந்து பிரித்து சிறு சிறு துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.
(இது தான் பாரம்பரிய முறை)
வாணலியில் நெய் விட்டு தேங்காய் துண்டுகளை நன்கு பிரவுனாகும் வரை..
மணக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுக்கவும்.
அதனுடன் வெட்டிய அரிசி அடை துண்டுகளை சேர்த்துக் கிளறி இதில் பாலை சேர்க்கவும்.
பின்னர் அதில் வடிகட்டி வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும். இவையனைத்தும் நன்கு வெந்ததும்..
தேங்காய் பாலை சேர்த்து, சுக்கு பவுடர் ஏலக்காய் பொடி தூவி இறக்கி வைத்து சீவிய பாதாம் (Optional) தூவவும்.
பாரம்பரிய கேரள முறையில் செய்த தித்திக்கும் அபார ருசியில் அடை பிரதமன் ரெடி.
குறிப்புகள் : கேரளாவில் அடை பிரதமனுக்கு என்றே பால் வெல்லம் என்று ஒரு வகையுள்ளது அதை வாங்குவது சிறப்பு.
அடை பிரதமனுக்கு ரெடிமேடாக கடையில் அரிசி மாவு அடைகளை செவ்வக சிப்ஸ் வடிவில் விற்கிறார்கள்.
அதை வாங்கியும் பயன்படுத்தலாம், அது மைதா மாவிலும் உண்டு அதை வாங்கிவிட வேண்டாம்.
பிரதமனில் நெய்யுடன் சரி பாதி தேங்காய் எண்ணெய் கலப்பது இன்னும் சிறப்பு.
கடையில் வாங்கும் ரெடிமேட் அடை துண்டுகள் எனில் நீங்கள் வெறும் பாலில் மட்டும் செய்யாமல்..
பால் + தேங்காய் பால் கலந்து அதில் அரிசி அடை துண்டுகளை போட்டு வெல்லம் சேர்த்து கிளறவும்.
ரெடிமேட் அரிசி அடை எனில் முதலில் அதை நீருக்கு பதில் பாலில் ஊற வைத்து பின்பு பயன்படுத்தவும்.
இது சீக்கிரம் அடிபிடிக்கும் என்பதால் அடுப்பில் வைத்து நிறுத்தாமல் கிளறுவது அவசியம்.
இது கொஞ்சம் கெட்டியாகத் தான் இருக்கவேண்டும் அசந்தால் சர்க்கரைப் பொங்கல் பதம் ஆகிவிடும்.
நீர் ஊற்றக் கூடாது தேவைக்கு பாலோ அல்லது தேங்காய் பாலோ சேர்த்தால் போதும்.
பிரதமனில் வறுக்கப் போடும் தேங்காய் துண்டுகள் கொப்பரை தேங்காய் துண்டுகளாக இருந்தால் மிகச் சிறப்பு.
அரிசி மாவை மடிக்க கெட்டியான மடித்தால் உடையும் இலை இல்லாது மென்மையான மடியும் வாழையிலை மிகச் சிறந்தது.
மாவு வேகும் போது கட்டிய இலையைச் சுற்றி வாழைப்பூ வைத்து வேக வைப்பது இன்னும் சிறப்பு.
அடை பிரதமன்
RELATED ARTICLES
