பிள்ளைகள் விருப்பப்படும் பிஸ்தா பருப்பின் நன்மைகளும், தீமைகளும்!

67

பிள்ளைகள் விருப்பப்படும் பிஸ்தா பருப்பின் நன்மைகளும், தீமைகளும்!

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.

பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். மேலும் இது இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது. பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு கொண்ட சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது.

பிஸ்தா பருப்பின் பக்க விளைவுகள்:

•ஒவ்வாமை:

ஒருவருக்கு பிஸ்தா மீதான ஒவ்வாமை உள்ளது என்றால், அது அவர்கள் வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் வெளிப்படையாகத் தெரிய வந்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கிறது. அரிப்புகள், வாந்தி, இருமல், இரைப்பை பிரச்சினைகள், மற்றும் தோல் அரிப்பு ஆகியவை பிஸ்தா ஒவ்வாமையின் மிகவும் வழக்கமான அறிகுறிகள் ஆகும். மற்ற அறிகுறிகளில் தும்மல், இருமல், கண்களில் நீர் வடிதல்மற்றும் அரிப்பு ஆகியவை அடங்கும். பிஸ்தா பருப்பு மீதான ஒவ்வாமையைக் கொண்ட சிலருக்கு, மற்ற மர பருப்புகளின் மீதும் ஒரு அதீத உணர்திறன் உண்டாகிறது.

•எடை அதிகரிப்பு:

பிஸ்தா பொறுப்புகளில் உள்ள அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து மூலக்கூறுகள், அவற்றை ஒரு வசதியான மற்றும் பிரபலமான நொறுக்குத் தீனியாக ஆக்குகின்றன. இருந்தாலும், எதுவுமே அளவுக்கு மீறும் பொழுது கெடுதலாகக் கூடியதாகும். ஒரு கோப்பை நிறைய பிஸ்தா பருப்புகள் 689 கலோரிகளை அளிப்பதாகக் கூறப்படுகிறது.

•பூசண வகை நச்சினை உருவாக்குதல்:

பூசண வகை நச்சுக்கள் என்பவை முறையாக சேமிக்கப்படாத உணவுகளில் காணப்படும் நச்சுத்தன்மை மிக்க, மற்றும் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் ஆகும். பிஸ்தா பருப்புகள் முதிர்வு நிலையில் இருந்து பூசண நச்சுக்களைத் தோற்றுவிக்கும் தன்மை உடையவை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. பிஸ்தா பருப்புகள் இயற்கையாகவே பிளந்து கொள்வதால், பூசண வகை நச்சுகள் உருவாகக் காரணமான பூச்சிகள், மற்றும் பூசணங்கள் எளிதாக உள்ளே நுழையக் கூடிய வகையில், மோசமான பாதுகாப்பை உடையவையாக இருக்கின்றன.

•இரைப்பைபிரச்சினைகள்:

ஃபுருக்ட்டான்களுக்கு ஒவ்வாமையைக் கொண்டிருப்பவர்கள் பிஸ்தா பருப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஃபுருக்ட்டான்கள் என்பவை பல்வேறு உணவுகளில் காணப்படும் இயற்கையாக இருக்கின்ற கார்போஹைட்ரேட்கள் ஆகும். அவை ஃபுருக்ட்டான்களுக்கு ஒவ்வாமையைக் கொண்டவர்களுக்கு, வயிறு வீங்குதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அடிவயிற்று வலி ஆகியவை ஏற்படக் காரணமாகக் கூடும். அவை எளிதாகக் கிரகிக்கப்படக் கூடியவையாக இல்லாமல் இருக்கின்றன, மற்றும் முறையான பெருங்குடலின் நொதித்தல், வாயு உற்பத்தி, மற்றும் விரிதல் ஆகிய செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கின்றன.

•சிறுநீரகக் கல் ஆபத்து வரலாம் :

பிஸ்தாக்கள், ஆக்சலேட்டுகள் மற்றும் மெத்தியோனின்களை ஒரு கணிசமான அளவில் கொண்டிருக்கின்றன. பிஸ்தாக்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால், கால்சியம் ஆக்சலேட் மற்றும் சிஸ்டைன் சிறுநீரக கற்கள்ஏற்படுகின்ற அபாயத்துக்கு, உங்களை நீங்கள் உட்படுத்திக் கொள்ள நேரலாம்.