Sunday, October 15, 2023
HomeHealthy Recipesசீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன?

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன?

சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன?

சீதாப்பழத்தின் தாவரவியல் பெயர் அனோனா ஸ்குவா மோசா. பழ வகைகளில் சீதாப் பழத்திற்கு என்று தனி இடம் உண்டு. தமிழ்நாடு, அசாம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வெறும் 100 கிராம் சீதாப்பழத்தின் மட்டும் புரதம் 1.6 கிராம், நார்ப்பொருள் 3.1 கிராம், மாவுப் பொருள் 23.5 கிராம், கொழுப்புச் சத்து 0.3 கிராம், கால்சியம் 17 மில்லி கிராம், பாஸ்பரஸ் 47 மில்லிகிராம், நியாசின் 1.3 மில்லிகிராம், ஆக்சாலிக் அமிலம் 30 மி.கி, இரும்புச் சத்து 1.5 மி.கி, மெக்னீசியம் 48 மி.கி, பொட்டாசியம் 34 மி.கி., தாமிரம் 0.52 கிராம், குளோரின் 3.7 மி.கி, சக்தி 104 கலோரிகள் நிறைந்துள்ளன.

  1. இதயம் தொடர்பான நோய்களுக்கு சீதாப் பழம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  2. காசநோயின் ஆரம்பநிலையை குணப்படுத்தும் ஆற்றல் சீதாப்பழத்திற்கு உண்டு. இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள் சீதாப்பழத்தை எடுத்துக் கொள்ள நோய் கட்டுக்குள் இருக்கும். கோடை வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள சீதாப்பழச்சாறு குடிக்கலாம்.
  3. வாந்தி, குமட்டல் பிரச்சனை உள்ளவர்க்ள் சீதாப்பழத்தை மென்று தின்றால் சரியாகும்.
  4. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் உடல் உள்ளுறுப்புகளில் காயங்கள் ஆறும். மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சீதாப்பழத்தை சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
  5. சீதாப்பழத்துடன் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வர குடல் புண் ஆறும்.
  6. ஞாபகச்சக்தி பிரச்சனையை சீதாப்பழம் அதிகரிக்கும்.
  7. சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறையும்.
  8. சீதாப் பழச்சாறுடன் திராட்சைப் பழச்சாறு கலந்து பருகி வர நரம்புகள் வலுப்படும்.
  9. தசைப்பிடிப்பு ஏற்படாமலிருக்க சீதாப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.
  10. சரும வறட்சி உள்ளவர்கள் சீதாப்பழச்சாறு குடித்து வர சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும்.
  11. சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்டிரால் சேராது காக்கும்.
  12. சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.
  13. சீதாப்பழத்துடன் 2 பேரீச்சம் பழம் எடுத்துக் கொண்டால் இரவில் தூக்கம் வரும்.
  14. சீதாப்பழத்தில் வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள நிலையில் சளி பிடிக்காது.
  15. சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் எடுத்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து ரகசியம் என்ன தெரியுமா?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =

Most Popular