Friday, October 27, 2023
HomeHealthy Recipesமுருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?

முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரியுமா?

நாளுக்கு நாள் இயற்கை உணவை மறந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக அதிகப்படியான நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். உணவே மருந்து என்பதை மறந்து, நேரம் தவறி சாப்பிடுதல், ஜங்க் உணவுகளை தான் அதிகளவில் உட்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறோம்.

சரி, இதெல்லாம் இருக்கட்டும் இன்றைய பதிவில் நாம் முருங்கைக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கப் போகிறோம். முருங்கைக்காய் மட்டுமல்ல, முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளது. முருங்கை இலையும் அதிக சக்தி கொண்டவை. மரத்தின் பட்டையும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்:

முருங்கை இலையை சாறு பிழிந்து சூப் அல்லது ஜூஸ் செய்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். அதோடு, முருகப் பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் சரி செய்யப்படும். முருங்கைக்காய் மட்டுமின்றி அதனுடைய இலைகளும் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்:

முருங்கை கீரையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது. முருங்கைக் கீரையை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்படும். இதனால், சர்க்கரை அளவு குறைந்து ஆரோக்கியமான வாழ்வு வாழ உதவும்.

நோய்த்தொற்றுகள்:

முருங்கை இலை மற்றும் அதன் பூக்களில் ஆண்டி பாக்டீரியல் அதிகம் உள்ளது. இது தொண்டை மற்றும் சருமத்தில் உள்ள் நோய்த் தொற்றுக்களைத் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் சி சத்து, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, ப்ரீ ராடிக்கல்களால் (Free Radical) பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

பாலியல் ஆரோக்கியம்:

முருங்கைக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத் தன்மை குறைபாடு, விரைவில் விந்துத் தள்ளல் போன்றவற்றை குணப்படுத்தி, விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாச பிரச்சனைகளை குணமாக்கும்:

தொண்டைப்புண் மற்றும் சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கப் முருங்கைக்கீரை சூப் குடித்து வரை எல்லா பிரச்சனையும் சரியாகும். அடிக்கடி முருங்கைக்காய் மற்றும் முருங்கை கீரையை உணவில் சேர்த்து வந்தால்
நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

செரிமானத்திற்கு உதவும்:

முருங்கைக்காய் மற்றும் அதனுடைய இலைகளில் செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி நிறைந்துள்ளது. இது செரிமான மண்டலத்திலுள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பை வெளியேற்றுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =

Most Popular