ஆப்பிள் பருப்பு  ரசம் செய்வது எப்படி

133

அட்டகாசமான சுவையில் ஆப்பிள் பருப்பு  ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

வேகவைத்த துவரம் பருப்பு தண்ணீர் – 2 கப் ,

ஆப்பிள் – 1, தோல் நீக்கிய பின்பு பொடியாக  நறுக்கியது,

தக்காளி – 2, பொடியாக நறுக்கியது,எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் ,

ரசம் பொடி – 1/2 டீஸ்பூன் ,

பெருங்காயம் தூள் – 1/4 டீஸ்பூன்  ,

மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்  ,

உப்பு – தேவையான அளவு,

கருப்பு மிளகுத்தூள் – 1 1/2 டீஸ்பூன்,

சீரகம் – 2 டீஸ்பூன் ,

காய்ந்த மிளகாய் – 2 ,

கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – 1  டீஸ்பூன்,

நெய் – 1 டீஸ்பூன்,

தண்ணீர்  – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

  1. முதலில் நாம் எடுத்து வைத்துள்ள மிளகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு கடாயில் வறுத்து பொடியாக நறுக்கவும்.
  2. அதன் பின்னர் மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் தக்காளி கூழ் மற்றும் துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரில் கலந்து வைக்கவும்.
  3. பொடியாக நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். பின்பு 1 கப் தண்ணீருடன் வாணலியில் சேர்க்கவும்.
  4. அதில் மஞ்சள் தூள், ரசம் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.பின்னர் நன்றாக கலக்கவும்.
  5. தாளிக்க ஒரு சிறிய கரண்டியில் கடுகு, சீரகம் , காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து சிறிது நெய்யில் வதக்கவும்.
  6. இந்த தாளிப்பை ரசத்தில் சேர்க்கவும்.
  7. இதன் பிறகு முதலில் பொடியாக அரைத்த பொடியை சேர்க்கவும்.
  8. பொடி சேர்த்த பின்னர் நன்கு கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்.
  9. கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.
  10. இப்போது சூடான சாதத்துடன் பரிமாறினால் அட்டகாசமான சுவையில் ஆப்பிள் பருப்பு ரசம் தயார்.