Thursday, November 2, 2023
HomeHealthy Recipesவாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் செய்யலாம் வாங்க!

வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் செய்யலாம் வாங்க!

க்ரிஸ்பி வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

• வாழைக்காய் – 1,
• சோள மாவு – 4 ஸ்பூன்,
• அரிசி மாவு – 2 ஸ்பூன்,
• மிளகாய் பொடி – 1/2 ஸ்பூன்,
• கரம் மசாலா தூள் – 1/4 ஸ்பூன்,
• மைதா மாவு – 2 ஸ்பூன்
• மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
• மிளகுத்தூள் – 2 சிட்டிகை,
• பிரட் க்ரம்ஸ் – சிறிதளவு,
• எண்ணெய் – தேவையான அளவு,
• உப்பு – தேவையான அளவு.

செய்முறை விளக்கம்:

1.முதலில் ஒரு வாழைக்காயின் தோலை நீக்கி விட்டு பிரெஞ்சு ஃப்ரைஸ்க்கு ஏற்ற மாதிரி ஒரே மாதிரியான அளவில் நீட்டநீட்டமாக மெல்லிதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அடுத்தாக பிரட் கிரம்ஸினை பொடித்துக் கொண்டு அதனை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கார்ன் பிளார் மற்றும் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
3.மற்றொரு பௌலில் கார்ன் பிளார், மைதா, மஞ்சள் தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
4.இப்போது வாழைக்காய் துண்டுகளை பிரெட் க்ரம்ஸ் கலவையில் டிப் செய்து விட்டு பின் தோசை மாவு போல இருக்கும் கலவையில் டிப் செய்து கொள்ள வேண்டும்.
5.பின் மீண்டும் ட்ரை பிரட் கிரம்ஸ்ஸில் பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இது போன்று அனைத்து வாழைக்காய் துண்டுகளையும் செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
6.அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அதனை சூடாக்க வேண்டும். எண்ணெய் சூடான பிறகு மாவில் டிப் செய்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. க்ரிஸ்பியான வாழைக்காய் பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிட ரெடி. இதனை டொமேட்டோ சாஸ் அல்லது சில்லி சாஸ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியில் இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 5 =

Most Popular